உடல் எடையை குறைத்து, இளமையாக தோன்ற சிறந்த பொடி

நரை, திரை, மூப்பு எண்ணும் மூன்றையும் கட்டுக்குள் வைத்து என்றும் இளமையுடனான தோற்றத்தை கொடுக்க கூடியது இந்த திரிபலா. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை சரிசெய்து, இளமையான சருமத்தை தருவதுடன், இறந்த பழைய செல்களையும் வெளியேற்றுகிறது.
 | 

உடல் எடையை குறைத்து, இளமையாக தோன்ற சிறந்த பொடி

என்றும் இளைமையுடன் இருக்க யாருக்கு தான் பிடிக்காது... ஆனால் என்றும் 16 வயதுடைய தோற்றத்தை பெறுவது அவ்வளவு எளிதல்ல, அதிலும் இன்றைய சூலலில் நமது உணவு முறையும் சரி, வாழ்கை முறையும் சரி ஆரோக்யம் அற்றதாகவே இருக்கிறது. நமது வாழ்கை முறையில் சிறிது மாற்றத்துடன் இந்த மூன்றுகாய் பொடியை சேர்த்து கொண்டால் என்றும் இளமையுடன் இருக்கலாம் என்கிறது ஆயுர்வேதம்.. 

இத்தகைய மகத்துவம் பொருந்திய பொடியின் பெயர் திரிபலா...'சர்க சம்ஹிதா' என்னும் ஆயுர்வேத நூலில்  திரிபலாவைப் பற்றிக் குறிப்பிற்கே முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

திரிபலா என்றால் என்ன?

கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் ஒன்று சேர்த்த பொடியே திரிபலாவாகும். இந்த மூன்று காய்களில் உள்ள நன்மைகளை பார்க்கலாம்..

கடுக்காய்..

உடல் எடையை குறைத்து, இளமையாக தோன்ற சிறந்த பொடி

கடுக்காய் உவர்ப்பு தன்மையை தவிர மற்ற ஐந்து சுவைகளையும் கொண்டுள்ளது. இதில், உள்ள மருத்துவ குணங்கள் வாய் மற்றும் தொண்டையில் உள்ள புண்ணை குணப்படுத்துகிறது. மேலும்,செரிமானம் சம்மந்தமான பிரச்னைகள், கண், காதுகளில் ஏற்படும் நோய், மூலம், உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.

நெல்லிக்காய்..

உடல் எடையை குறைத்து, இளமையாக தோன்ற சிறந்த பொடி

நெல்லிக்காயில் மற்ற பழங்களை காட்டிலும் உயிர்ச்சத்து சி நிறைந்துள்ளது. இது நீரிழிவு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு, சுவாச பிரச்னை, மலச்சிக்கல் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.


தான்றிக்காய்...

உடல் எடையை குறைத்து, இளமையாக தோன்ற சிறந்த பொடி
கசப்பு துவர்ப்பு சுவையுடன் இருக்கும் தான்றிக்காய், மூளைக்கு பலம் அளிப்பதுடன், மூலம், தொழுநோய், சரும பிரச்னை, காய்ச்சல், கண் சம்பந்தமான கோளாறுகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது.

இந்த மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து சாப்பிடுவதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்..

உடல் எடையை குறைத்து, இளமையாக தோன்ற சிறந்த பொடி

திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் நீரிழிவு பிரச்னைக்கு சிறந்த தீர்வை கொடுக்கிறது.

இந்த பொடியை சுடு நீரில் கலந்து காலை, மாலை அருந்தி வர உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகள் கரைந்து, உடல் பருமன் குறைந்து சிக்கென்ற உடல் தோற்றத்தை பெற முடியும்.

நரை, திரை, மூப்பு எண்ணும் மூன்றையும் கட்டுக்குள் வைத்து என்றும் இளமையுடனான தோற்றத்தை கொடுக்க கூடியது இந்த திரிபலா.  இது ச‌ருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை சரிசெய்து, இளமையான சருமத்தை தருவதுடன், இறந்த பழைய செல்களையும் வெளியேற்றுகிறது.

பெண்களை அதிகமாக பாதிக்கக் கூடிய இரத்த சோகையை சரி செய்கிறது திரிபலா. இதை உட்கொள்வதினால்  இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கச் செய்து, ஹீமோகுளோபின் பிரச்னையை விரைவிலேயே சரிசெய்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

திரிபலா இரத்த சர்க்கரை அளவை சமன் செய்து நீரிழிவு பிரச்னை ஏற்படாமல் தடுக்கிறது. அதோடு,இன்சுலின் சுரப்பை அதிகரித்து, உடலில் குளுக்கோஸ் அளவு குறையாமல் இருக்க வழி வகை செய்கிறது.

சரும பிரச்னைக்கு சிறந்த தீர்வாக இருக்கும் இந்த திரிபலா, சருமத்தில் ஏற்படும் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகளுக்கும், சொறி சிரங்கு, படை, தேம்பல், மற்றும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கும் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது.

வளர்சிதை மாற்றத்தில் இடையூறுகளை உண்டாக்கும் தலைவலிக்கு சிறந்த தீர்வாக திரிபலா இருக்கிறது. மேலும், மூளை  நல்ல பலத்துடனும், புத்துணர்வுடனும் இருப்பதை திரிபலா உறுதி செய்கிறது. இதில்,நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், எந்த வித பாக்டீரியா மற்றும் வைரஸ் தொடர்பான நோய்களும் நம்மை அண்டாது.

சமீபத்தில் ஜவஹர்லால் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்த திரிபலாவை உட்கொள்வதால் மெடாஸ்டேடிஸ் என்னும் புற்று நோய் பரவும் தன்மையை கட்டுக்குள் வைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இது இதய நோய், சுவாசப்பிரச்னை, தலைவலி, போன்ற பல பிரச்னைக்கு தீர்வாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல், காயகல்பமான திரிபலாவை எடுத்துக்கொள்வதால் நோயின்றி இளமையுடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ முடியும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP