குழந்தையின்மைக்கான அறிகுறிகள்!

மற்ற உடல் ரீதியான கோளாறுகள் போலவே குழந்தையின்மைக்கான அறிகுறிகளும் இருக்குமா? என்று கேட்டால் ஆம் என்ற பதிலே கிடைக்கும். அதாவது உடலில் இயல்புக்கு மாறாக ஏதேனும் பாதிப்புகள் உருவாகிறது என்றால், அதை நமது உடலே சில அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்தும்.
 | 

குழந்தையின்மைக்கான அறிகுறிகள்!

ஆரோக்ய வாழ்க்கை முறையை தவறவிட்டதன் விளைவாக மிக மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறோம். குறிப்பாக பெண்மை ஹார்மோன்களை அதிகப்படுத்தும் மஞ்சள் போன்றவற்றை பெண்கள் மருந்துக்கு கூட உடலில் பூசிக்கொள்வதில்லை. அதோடு நகர வாழ்க்கையில் நாகரிகம் என்ற பெயரில் உடல் சூடை குறைக்க கூடிய எண்ணெய் வகைகளை தொட்டுக் கூட பார்ப்பதில்லை. இவ்வாறு உடலை இயல்பாக வைக்கக்கூடிய இயற்கை வரங்களை பயன்படுத்தாமல் கைவிட்டதன் காரணமாக குழந்தையின்மை போன்ற மிகப்பெரிய பிரச்னைகளை கையாள வேண்டிய அவலத்திற்கு ஆளாகியுள்ளோம்.  இதற்கு முந்தைய கட்டுரையில் குழந்தையின்மைக்கான காரணங்களை பார்த்தோம். இனி குழந்தையின்மை பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகளை பற்றி பார்ப்போம். 

மற்ற உடல் ரீதியான கோளாறுகள் போலவே குழந்தையின்மைக்கான அறிகுறிகளும் இருக்குமா? என்று கேட்டால் ஆம் என்ற பதிலே கிடைக்கும். அதாவது உடலில் இயல்புக்கு மாறாக ஏதேனும் பாதிப்புகள் உருவாகிறது என்றால், அதை நமது உடலே சில அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்தும். 

கரு முட்டையை, குழந்தையாக வளர்த்தெடுப்பதற்கு ஏதுவான சூழ்நிலை கருப்பையில் இல்லை என்பதற்கான சில அறிகுறிகள்:

குழந்தையின்மைக்கான அறிகுறிகள்!

பெண் பருவ வயதை எட்டியது முதலே வரும் காலங்களில் குழந்தையின்மை பிரச்னையை அந்த பெண் சந்திப்பாரா என்பதை அறிந்துவிட முடியும். அதாவது, பருவ வயதை எட்டிய போதிலும் பூப்பெய்தாமல் இருப்பது, அல்லது முன்கூட்டியே பூப்பெய்துவது.

பூப்பெய்திய பின் மாதவிலக்கு முறையாக வராமல் இருத்தல்

ஒவ்வொரு மாத விலக்கிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருத்தல்.

குழந்தையின்மைக்கான அறிகுறிகள்!

ஒரே மாதத்தில் இரண்டு , மூன்று முறை மாதவிலக்கை சந்தித்தல். அதோடு இந்த நிலை தொடர் கதையாக இருத்தல்.

பொதுவாக 3லிருந்து 7 நாட்கள் நீடிக்கும் மாதவிலக்கு, கணக்கின்றி நீடித்தல்.

மாதவிலக்கின் போது குறைவான அல்லது அதிகமான ரத்தப்போக்கு.

மாதவிலக்கின்போது வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் கடுமையான வலியை உணர்தல்.

குழந்தையின்மைக்கான அறிகுறிகள்!

மாதவிலக்கின் போது கடுமையான தசைப்பிடிப்பு ஏற்படுதல்.

இன உறுப்பில் அதிக வலி.

முகம் மற்றும் கை, கால்களில் திடீரென வளரும் முடிகள். இது பெண் ஹார்மோன் குறைபாட்டால் தோன்றுவது. இதுவும் குழந்தையின்மைக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

குழந்தையின்மைக்கான அறிகுறிகள்!

காரணமின்றி தலை முடி அதிகமாக உதிர்தல்.

எப்போதும் இல்லாமல் முகத்தில் அதிக பருக்கள் தோன்றுதல்.

திடீர் எடை கூடுதல் அல்லது எடை குறைதல்.

தாம்பத்திய உறவின்போது பெண் உறுப்பில் வலி ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் இவை குழந்தை உருவாவதில் அதிக இடையூறுகளை ஏற்படுத்தும் என்கிற அர்த்தமாகக்கூட  இருக்கலாம். 

பெருகி வரும் குழந்தையின்மை பிரச்னை : என்ன காரணம்?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP