கோடை ஸ்பெஷல்: அம்மை நோயை எளிதாக எப்படி குணப்படுத்தலாம்?

இந்த சம்மரின் முக்கியமான பிரச்னை அம்மை. ஒருவர் மூலம் மற்றவருக்கு எளிதில் பரவக் கூடியது. அதோடு எரிச்சல் மிகுந்து, சிவந்து போய் வலியை உண்டாக்கும். உடல் சூடு, கிருமித் தொற்றால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சீக்கிரம் பரவும். இதற்கு என்ன செய்வது என யோகா மற்றும் இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபாவிடம் கேட்டோம்.
 | 

கோடை ஸ்பெஷல்: அம்மை நோயை எளிதாக எப்படி குணப்படுத்தலாம்?

கோடை ஸ்பெஷல்: அம்மை நோயை எளிதாக எப்படி குணப்படுத்தலாம்?

இந்த சம்மரின் முக்கியமான பிரச்னை அம்மை. ஒருவர் மூலம் மற்றவருக்கு எளிதில் பரவக் கூடியது. அதோடு எரிச்சல் மிகுந்து,  சிவந்து போய் வலியை உண்டாக்கும். உடல் சூடு, கிருமித் தொற்றால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சீக்கிரம் பரவும். இதற்கு என்ன செய்வது என யோகா மற்றும் இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபாவிடம் கேட்டோம். 

தும்மல், இருமல் மூலமாக காற்றின் மூலம் இந்தக் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவும். அம்மைக் கொப்புளங்கள் வெடிப்பதாலும் நோய்த்தொற்று பரவும். 

பாதிக்கப் பட்டவர்களை குளிர்ச்சியான இடத்தில் வைத்திருப்பது அவசியம். ஏனெனில் வெயில் அதிகமாக இருப்பதால் எரிச்சலும் அதிகமாக இருக்கும். கொப்புளங்களை சொறிவதால், அதிலுள்ள தண்ணீர் மற்ற இடத்தில் பட்டு, அங்கும் கொப்புளங்கள் வரக்கூடும், அதனால் பாதிப்படைந்த இடங்களில் சொறியவே கூடாது. குழந்தைகளாக இருந்தால் கைகளில் காட்டன் கிளவுஸ் போட்டு விடுங்கள். தளர்வான மெல்லிய காட்டன் உடைகளை மட்டும் தான் அம்மை நோயிற்கு ஆளானவர்கள் பயன்படுத்த வேண்டும். குளிந்த நீரில் காட்டன் துணியை நனைத்து, எரிச்சலாகும் இடத்தில் ஒத்தடம் கொடுப்பதும், குளிர்ந்த நீரில் குளிப்பதும் மிகவும் உகந்தது. முக்கியமாக அவர்கள் கைகளால் சொறிவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அந்த வைரஸ்கள் நக இடுக்குகளில் புகுந்து மீண்டும் உங்களை தொந்தரவு செய்யும். தவிர, சொறிவதால் தழும்புகள் உண்டாகி, எளிதில் குணமாகாது. 

அப்புறம் குளிக்கும் போது, சோப்புப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் சோப்பிலுள்ள கடினத்தன்மை அம்மையின் எரிச்சலை அதிகப் படுத்தும். அதே போல் தினமும் வெறும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் போர்வை, விரிப்பு ஆகியவற்றை மைல்ட் டிடெர்ஜெண்ட் கொண்டு நன்றாக துவைக்க வேண்டும். 

கோடை ஸ்பெஷல்: அம்மை நோயை எளிதாக எப்படி குணப்படுத்தலாம்?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துவது தான் அம்மைக்கு நாம் முதலில் செய்ய வேண்டியது. அதனால் உணவில் விட்டமின் சி உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை அம்மை வந்துவிட்டால், மறுமுறை வராது என பலரும் சொல்வார்கள். உண்மை தான் அதற்கான ஆன்டிபாடி புரொடக்‌ஷன் அதிகமாகியிருக்கும். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகாமல், அப்படியே இருந்தால் மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறது. 

நேச்சுரோபதியில் 'ஹீலியோதெரபி' என்ற பெஸ்ட் ட்ரீட்மெண்ட் உள்ளது. அதாவது சூரிய ஒளியில் நிற்பது. சூரியனிலுள்ள 'அல்ட்ரா வயலெட்' கதிர்கள், இந்த சம்மர் பொழுதில் 25 சதவிகிதம் அதிகமாகவே கிடைக்கும். இது அம்மை நோயின் வைரஸை 'இன் ஆக்டிவேட்' செய்துவிடும். அதோடு சூரிய ஒளி ஆன்டி வைரலாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தியும் நம்மை குணமடைய செய்கிறது. அதனால் தான் நம் உடைகளைக் கூட வெயிலில் காய வைக்கிறோம். அதற்காக உச்சி வெயிலில் உங்களை வெயிலில் நிற்க சொல்லவில்லை, காலை மற்றும் மாலை இளம் வெயிலில் குறைந்தது 10 நிமிடம் நில்லுங்கள். 

தேன் ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி. அதனால் அம்மை தாக்கப்பட்ட இடங்களில் ஒரு நாளைக்கு 2-3 முறை தடவவும். கலரில் போடாமல் இயற்கையான பச்சைப் பட்டானியை அரைத்து அப்ளை செய்வதும் நல்லது. இதற்கு மஞ்சளும், வேப்பிலையும் தான் பெஸ்ட் மெடிசின். இது ஒரே நேரத்தில் எரிச்சலைக் குறைத்து, குணப்படுத்துகிறது. ஆன்டி செப்டிக் மற்றும் கிருமி நாசினி என பல்வேறு பணியாற்றி, வைரஸையும் வெளியேற்றுகிறது. அதனால் மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் போட்டு வர, விரைவில் குணமாகும். 

கோடை ஸ்பெஷல்: அம்மை நோயை எளிதாக எப்படி குணப்படுத்தலாம்?

குளிக்கும் நீரில் சிறிது மஞ்சளும் வேப்பிலையும் சேர்த்துக் கொள்ளலாம். 1 கிளாஸ் தண்ணீரில் சிறிது இஞ்சியைப் போட்டு, கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம். இந்த சமயத்தில் காரமான மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிடவே கூடாது. இளநீர், மோர், லெமன் ஜீஸ், தர்பூசணி, கிர்ணி, நுங்கு என குளிர்ச்சியான நீராகார உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறி சூப்களை ஆற வைத்தும் குடிக்கலாம். இவற்றைப் பின்பற்றினாலே அம்மை நோயை எளிதில் குணப்படுத்தலாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP