குறட்டையை விரட்ட சில ஸ்மார்ட் டிப்ஸ்!

குறட்டை என்பது நோய் அல்ல, ஒரு குறையே. இது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும். தூக்கத்தில் நாம் சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தை தான் குறட்டை என்கிறோம்
 | 

குறட்டையை விரட்ட சில ஸ்மார்ட் டிப்ஸ்

குறட்டை என்பது நோய் அல்ல, ஒரு குறையே. இது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும். தூக்கத்தில் நாம் சுவாசிக்கும் மூச்சுக் குழாய் தளர்வடைகிறது. இதனால், காற்று உள்ளே சென்று வெளியே வரும்போது ஏற்படும் சப்தமே குறட்டை என்கிறோம்.

மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது. இதுதவிர வேறு சில உடல்நலக் குறைவு காரணமாகவும் குறட்டை வரலாம். இதனால் சுற்றியள்ளவர்களே நம்மை வெறுக்கும் நிலை ஏற்படுகிறது. குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களுடைய துணைவர்களையும் பாதிக்கின்றனர். இக்குறையை போக்க சில வழிகள்...

O குறட்டைக்கு முக்கிய காரணம் சளி, இருமல் தொல்லை இருப்பதே. ஆவி பிடிப்பதன் மூலம் சளிக்கு நிரந்தர தீர்வை பெறலாம்.

O இரவில் உணவை சாப்பிட்ட பின் உடனே தூங்க செல்வது கூட குறட்டையை ஏற்படுத்தும் எனவே இதனை தவிர்த்தல் நல்லது.

O இரவில் உறங்கும் போது உயரமான தலையணையை உபயோகிக்க வேண்டும்.

O இரவில் உறங்கும் போது பிட்சா, பர்கர் போன்ற அதிக கொழுப்புள்ள துரித உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

O மது குடிப்பதும் கூட குறட்டையை உண்டாக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தூங்குவதற்கு முன் அளவோடு மது அருந்தினால் நல்லது. 

O உடல் பருமன் உள்ளவர்கள் எடையை குறைத்தால் குறட்டையை தவிர்க்கலாம்.

O சுவாச தைலங்கள் உள்ளன இவற்றை பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் நன்றாக தடவி கொண்டு உறங்கினால் குறட்டையை எளிதாக ஒழித்து விடலாம்.

O பால் சேர்க்கப்பட்ட பொருட்கள் குறட்டையை ஏற்படுத்தும். எனவே குறட்டை பிரச்னை உள்ளவர்கள் இரவு நேரங்களில் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. 

O தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது, குறட்டைப் பிரச்னைக்கு நல்ல தீர்வு.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP