உடல் பருமனை குறைக்க உதவும் மாதுளையின் நன்மைகள் சில...

கர்ப்பம் தரித்த தாய்மார்கள் தினமும் மாதுளையை உட்க்கொண்டு வந்தால், பிறக்கும் குழந்தை நல்ல குழந்தைகளின் மூளை வளர்சியுடன் பிறப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
 | 

உடல் பருமனை குறைக்க உதவும் மாதுளையின் நன்மைகள் சில...

மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிக எடையை குறைத்து ஸ்லிம்மான உடல் தோற்றத்துடன் உலா வர முடியும் என நிரூபித்துள்ளனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.  விலை உயர்ந்த சிவப்பு கற்களை போல தோற்றம் கொண்ட இந்த பழத்தில் உள்ள சத்துக்களும் மிகச் சிறந்த நன்மைகளை கொண்டதாக கருதப்படுகிறது.

 நமது முன்னோர்களின் வீட்டு தோட்டங்களில் கட்டாயம் இடம் பிடிக்க கூடிய தாவரம் என்றால் அது மாதுளையாகத்தான் இருக்க முடியும்.  இது தன்னுள் பல அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதன் காரணமாகவே நமது தாத்தா பாட்டியின் வீடுகளில் அதிகமாக மாதுளையை பார்க்க முடிந்தது.

உடல் பருமனை குறைக்க உதவும் மாதுளையின் நன்மைகள் சில...

சரி அப்படி என்னதான் மாதுளை பழத்தில் நன்மைகள் உள்ளன என்பதை பார்க்கலாம்...மாதுளையில்  புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள்  நிறைந்துள்ளன.இந்த பழத்தை சப்பிடுவதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

மாதுளையில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை  சீராக்கி  மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் அருமருந்து மாதுளை.

கர்ப்பம் தரித்த தாய்மார்கள் தினமும் மாதுளையை உட்க்கொண்டு வந்தால், பிறக்கும் குழந்தை  நல்ல குழந்தைகளின் மூளை வளர்சியுடன் பிறப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

உடல் பருமனை குறைக்க உதவும் மாதுளையின் நன்மைகள் சில...

மாதுளை இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தி டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.

மாதுளையை  உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், செரிமானம் செய்வதற்கும், குடல் நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

மாதுளையை  அன்றாட உணவில் சேர்த்து வந்தால் இரத்த ஓட்டம்  மேம்பட்டு, ரத்த அழுத்த பிரச்னையில் இருந்து நமது உடலை காக்க முடியும்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP