தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால் மனம் சார்ந்த கோளாறு, இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் , இல்லற வாழ்வில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். மேலும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து எதிலும் நாட்டமில்லாத போக்கு, ஞாபக சக்தி குறைதல் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.
 | 

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

மனிதன் தவிர  மற்ற உயிரினங்கள் அனைத்துமே பகலில் செயல்படும், இரவில் ஓய்வெடுக்கும் இயற்கையான நடைமுறையை பின்பற்றுகின்றன. ஆனால் மனித இனம் மட்டுமே இரவு பகல் என பாரபட்சம் இல்லாமல் ஓடி கொண்டிருக்கும் செயற்கை வாழ்க்கை முறையை பின்பற்றுகிறது.

சற்று சிந்தித்து பார்த்தால் மனிதனுக்கு வரும் உயிருக்கு ஆபத்தான விஷயங்களில் பெரும்பாலானவற்றை மற்ற உயிரினங்களுக்கு ஏற்படுவது இல்லை என்பது புலப்படுகிறது.  உயிரற்ற இயந்திரம் கூட ஓய்வின்றி செயல்பட்டால் செயலிழந்து விடும் அல்லது அதன் செயல் திறனை குறைந்து விடும். 

இயற்கை நிகழ்வான  தூக்கத்தை  வீணான செயல் என கருதி பலர் தூங்கும் நேரத்திலும் உழைக்கவோ அல்லது பொழுதை கழிக்கவோ முற்படுகின்றனர். இவ்வாறு  உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்காமல் தூக்கத்தை துறப்பதால், நமது உடலுக்கு பல்வேறு உபாதைகளை நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். இங்கு தூக்கமின்மையால் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் தூங்குவதற்கான சில வழிமுறைகளை பார்க்கலாம். 

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

தூக்கமின்மையால் சந்திக்கும் பிரச்னைகள் :

இயற்கை நிகழ்வான தூக்கத்தை பெரும்பாலான மக்கள்  வேலை, படிப்பு, பொழுது போக்கு என்னும் காரணங்களை கூறி தவிர்த்து வருகின்றனர். அல்லது தூங்கும் நேரத்தை குறைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து உடலுக்கு ஓய்வு கொடுக்காமல்  இருப்பதனால் சிறிது காலத்திலேயே  அதிக உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். 

உடல் பருமன் அதிகரித்தல்: 

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

போதுமான அளவு தூக்கதை மேற்கொள்ளவில்லை என்றால்,பசி உணர்வை மூளைக்கு அனுப்பும் ’லெப்டின்’ என்னும் ஹார்மோனின் அளவு குறைகிறது. இதனால்  தேவைக்கு அதிகமாக உணவை சாப்பிடும் நிலை ஏற்படும். மேலும் தூக்கமின்மையால் இன்சுலின் சுரப்பு  அதிகரிக்கும். இதனால் உடலில் கொழுப்புகள் படிந்து அதிக உடல் பருமனுக்கு ஆளாக நேரிடும். 

நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு:

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

நம்மை சுற்றியுள்ள எண்ணற்ற நோய் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாப்பது நமது உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியே.  இந்த நோய் எதிர்ப்பு சக்தி பெரும்பாலும் தூங்கும் போதுதான் உற்பத்தியாகும். எனவே துக்கும் நேரத்தை குறைப்பதனால் உடலை பாதுகாக்க தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியாமல் பல  நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். 

மூளையை  பாதிக்கும் :

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!


தூக்கமின்மையால் மூளை தொடர்ந்து செயல்படும் நிலை ஏற்படும். மூளை தொடர்ந்து செயல் படுவதனால் நரம்புகளுக்கு ஓய்வு என்பது கிட்டாக்கனியாக போய்விடும் இதனால், புத்திக்கூர்மை பாதிக்கப்படுவதுடன், ஆக்கபூர்வமாக செயல்பட இயலாத நிலை ஏற்படும், அதோடு எந்த ஒரு விசயத்தையும் தொடர்ந்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இயலாது.

இந்த நிலை தொடர்ந்தால் விரைவிலேயே மூளையின் செயல்பாடு குறையும் அபாயம்  அதிகம். மேலும் தூக்கமின்மையால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடல் செயலிழக்கும் வாய்ப்புகளும் அதிகம்.

மனம் சார்ந்த கோளாறுகள்:

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

போதிய தூக்கமின்மை உடலை மட்டுமல்ல நரம்பு மற்றும் மனம் சார்ந்த உணர்வுகளையும் பாதிக்க கூடியது.  தூக்கமின்மையினால்  மன குழப்பம் அதிகரித்தல், அதிக மன அழுத்தம், மனச்சோர்வு, சித்தப்பிரமை மற்றும் உற்சாகமற்ற நிலை போன்றவைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

நாட்பட்ட நோய்கள்:

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

தூக்கமின்மையால், தொடர் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய,உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நாட்பட்ட நோய்களை சந்திக்க நேரிடும். அதாவது உயர் இரத்த அழுத்தம், ஸ்ட்ரோக், நீரிழிவு போன்ற நாட்பட்ட உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

ஆரோக்யமற்ற உணவு பழக்கம்:

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

குறைவாக தூங்கும் பழக்கம் தொடர்ந்தால் ஆரோக்ய மற்ற உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நரம்புகள் தூண்டும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இந்த பழக்கம் தொடர்ந்தால் உடல் பருமன்.நீரிழிவு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாமை:

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

குறைவான நேரம் தூங்குதல் அல்லது  தூக்கத்தை முற்றிலுமாக துறக்கும் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் பெரும்பாலும் இல்லற வாழ்வில் ஈடுபாடு அற்றவர்களாக இருப்பார்கள் என ஆய்வு சொல்கிறது. தூக்கமின்மையால் கணவன் மனைவிக்கிடையேயான உறவில் சிக்கல் அதிகரிக்கும் ஆபாயம் அதிகமாம்.

சரும கோளாறுகள்:

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

இரவு முழுமையாக தூக்கத்தை ஏற்காமல் இருப்பதனால் சருமம் சார்ந்த கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதிக நேரம் இரவில் கண் விழித்து இருப்பதனால். முக அழகு குறைந்து முக சருமத்தில் கரும்புள்ளி, கருவளையம் போன்றவை தோன்றி முகப்பொலிவை குறைக்கும்.

இதய கோளாறு:

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

ஒரு நாள் இரவு தூக்கத்தைத் தொலைத்தாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இவ்வாறு தொடர்ந்து ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் இதயம் சார்ந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனால் விரைவில் இதயம் செயலிழக்கும் நிலையும் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

தூக்கமின்மையை எவ்வாறு சரி செய்ய முடியும்?

தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!!

ஆரோக்யமான தூக்கம் என்பது இரவில் மட்டும் உடலுக்கு ஓய்வு கொடுக்கும் செயல்பாடாகும். இந்த செயலை முறையாக நேரம் தவறாமல் கட்டாயம் மேற்கொள்வதனால் நோய் அற்ற வாழ்வை பெற முடியும். தூக்கத்தை பல காரணங்களால் துறப்பவர்கள் போலவே, தூக்கம் வராமல் தவிப்பவர்களும் உண்டு அவ்வாறு தூங்கமுடியால் தவிப்பவர்கள் பின் வரும் செயல்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் போதிய தூக்கத்தை பெற முடியும். 

மின்ணணு பொருட்கள் பொருட்கள் அதாவது கணினி , தொலைக்காட்சி, செல் போன் போன்ற பொருட்களை தூங்கும் அறையில் வைத்துக்கொள்ள கூடாது.

தூங்கும் அறையை இருட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தூங்கும் நேரத்தையும். படுக்கையிலிருந்து விழிக்கும் நேரத்தையும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

தூங்கச் செல்வதற்கு 3 மணி நேரம் முன்பாக இரவு உணவை சாப்பிட்டு விட வேண்டும்.

தூங்கச் செல்வதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாகவே காபி டீ போன்ற பானங்களை  அருந்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

படுக்கைக்கு செல்லும் முன்னர் கட்டாயம் மது பானங்களை அருந்த கூடாது.

இந்த செயல் முறைகளால் தூக்கமின்மையை சரிசெய்ய முடியும்...


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP