குழந்தையின்மையை போக்கும் எளிய  மருத்துவம்

தேங்காய் மற்றும் இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. தேங்காய் சார்ந்த பொருட்களை உணவில் அடிக்கடி சேர்த்து வர கருப்பை சார்ந்த கோளாறுகள் நீங்கும்.
 | 

குழந்தையின்மையை போக்கும் எளிய  மருத்துவம்

பெண்மைக்கு மட்டும் கிடைத்த  மிக பெரிய வரம் தாய்மை . இது  மனித இனத்திற்கு மட்டுமல்ல உலகில் படைக்கப்பட்டுள்ள எல்லா உயிர்களுக்குமான பொதுவான  விதி. இயற்கை அன்னையின் படைப்பில் அதீத வளர்ச்சி அடைந்த உயிரினம் என்று பார்த்தால் அது மனித இனம் தான். வளர்சசி மட்டுமல்ல பல உபாதைகளிலும் மற்ற உயிர்களைவிட மனித இனம் மேலோங்கி தான் இருக்கிறது. அத்தகைய அவலங்களில் மிக மோசமாக கருதப்படுவது குழந்தையின்மை. மற்ற எந்த உயிரினமும் மருத்துவத்தை நாடி  தனது இனத்தை பெருக்குவதில்லை. 

ஆனால் மனிதனுக்கு மட்டுமே இந்த சாபம். இந்த சாபத்தை யாரும் நமக்கு கொடுக்கவில்லை . காசு கொடுத்து தனக்கு தானே சூனியம் வைத்து கொள்வது போல ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி நமக்கும் கொடுக்கப்பட்ட இயற்கை வரங்களை நாமே தொலைத்து விட்டு, இப்போது குழந்தை இன்மைக்கு என்ன காரணம் என தேடிக்கொண்டிருக்கிறோம்.

சரி விசயத்திற்கு வருவோம்....  இதற்கு முந்தைய கட்டுரையில் குழந்தையின்மைக்கு காரணங்களை பார்த்தோம். இந்த கட்டிடடுரையில் நம்முடன் ஏற்கனவே இருந்த, எந்தெந்த இயற்கை உணவுகளால் குழந்தையின்மை பிரச்சனையை போக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

தேங்காய்:

குழந்தையின்மையை போக்கும் எளிய  மருத்துவம்
 தேங்காய் மற்றும் இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. தேங்காய் சார்ந்த பொருட்களை உணவில் அடிக்கடி சேர்த்து வர கருப்பை சார்ந்த கோளாறுகள் நீங்கும். 

கற்றாழை :

குழந்தையின்மையை போக்கும் எளிய  மருத்துவம்

இயற்கை கொடுத்த அருமருந்து கற்றாழை. இந்த கற்றாழை உள்ள செல்லில் தயாரிக்கப்படும்   ஜூஸை  தினமும்  காலை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர வேண்டும்.  மாதவிடாயின் போது ஏற்படும் உபாதைகளையும் நீக்குவதுடன், முறையான மாதவிடாய் சுழற்சியையும் கற்றாழை ஊக்குவிக்கிறது. அதோடு குழந்தை பேருக்கு சவாலை ஏற்படுத்தும்  கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கிறது.

நெல்லிக்காய் :

குழந்தையின்மையை போக்கும் எளிய  மருத்துவம்

பொதுவாக தினம் ஒரு நெல்லைக்கனி சாப்பிட்டால் ஆயுள் கூடும் என்பார்கள். நெல்லிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதோடு ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிப்போதோடு, கர்ப்பப்பையும் வலுப்பெற செய்கிறது. இதனை தினம் காலையில்  வெறும் வயிற்றில் ஜூஸ் செய்து குடித்தால் நல்ல பழனை பெற முடியும்.

வெந்தயம்:

குழந்தையின்மையை போக்கும் எளிய  மருத்துவம்
 உடல் உஷ்ணத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் வெந்தயத்தில், புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன . இந்த வெந்த கிஇறையில் மிகஅதிக அளவு இரும்பு சத்து உள்ளது. வெந்தயம் தொடர்பான உணவு பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

சீரகம் :

குழந்தையின்மையை போக்கும் எளிய  மருத்துவம்

சீரகத்தை இரவு நீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இதனால் , ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடல் இயக்கம் சீராக நடைபெறும்.

 கருப்பட்டி :

குழந்தையின்மையை போக்கும் எளிய  மருத்துவம்
பனையிலிருந்து எடுக்கப்படும் நீரில் இருந்து தயாரிக்கப்படும்  கருப்பட்டியை  உணவில் சேர்த்து வந்தால் மாதவிடாய் சுழற்சி  சீராவதுடன், கருப்பையும் நல்ல வலுப்பெறும்.
பழங்கள்:

குழந்தையின்மையை போக்கும் எளிய  மருத்துவம்
அத்தி , மாதுளை , செவ்வாழை, ஆப்பிள்  உள்ளிட்ட பழங்களை உணவில் சேர்த்து வர கருப்பை தொடர்பான பல் பிரச்சனைகள் நீங்கும்.
 உளுந்து:

குழந்தையின்மையை போக்கும் எளிய  மருத்துவம்
உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து அதிகளவில் உள்ளது. இந்த உளுந்தில் செய்யபட்ட களி , பலகாரம் போன்றவற்றை பூப்பெய்தியது முதலே பெண் பிள்ளைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தையின்மை பிரச்னை  அண்டாது. 

குழந்தையின்மைக்கான அறிகுறிகள்!
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP