வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய அழகு குறிப்புகள்

அந்தக்காலத்தில் பெண்களும் ஆண்களும் அழகாகவும், இளமையோடும் வலம் வர காரணம் அவர்களது உடல் மற்றும் சருமப் பராமரிப்புகள் தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருள்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருள்களாகவே இருக்கும்
 | 

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய அழகு குறிப்புகள்

அந்தக்காலத்தில்  பெண்களும் ஆண்களும் அழகாகவும், இளமையோடும் வலம் வர காரணம் அவர்களது உடல் மற்றும் சருமப் பராமரிப்புகள் தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருள்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருள்களாகவே இருக்கும். அத்தகைய குறிப்புகள் நமது வீட்டிலுள்ள பாட்டிகள் சொன்னால் இன்றைய இளைய தலைமுறையினர் அநேகம் பேர் ஏற்றுக் கொள்வதில்லை. தற்போதுதான் நிறைய அழகுப்பொருள்கள் கடைகளில் கிடைக்கிறதே. பிறகு எதற்கு பழைய பாணியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்த பொருள்களைப் பயன்படுத்திய பின் அனைவரும் சிறந்தது என்று நினைப்பது பாட்டிகள் சொல்லும் அழகுப் பராமரிப்புகளே. தற்போது பலரும் கெமிக்கல் கலந் திருக்கும் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து பாட்டிகள் சொல்லும் குறிப்புகளை பின்பற்றி வருகின்றனர். இன்றைய நாகரிக உலகில் கூட்டுக் குடும்பங்களின்றி தனியாக இருக்கும் எண்ணற்ற குடும்பங்களுக்காகவே இந்தக் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறோம். படித்து பயன்பெறுங்கள். 

வெள்ளரிக்காய்:

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய அழகு குறிப்புகள்

வெள்ளரிக்காயை வட்ட வடிவமாக நறுக்கி கண்களை மூடிய படி, இமைகளின் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்தால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். கணினி பணியிலிருப்பவர்களுக்கும், பணிச்சுமை அதிகம் இருப்பவர்களுக்கும் கண்களின் கீழ் கருவளையம் அதிகமாக தோன்றும். அவர்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாத வெள்ளரிக்காய் தான். அழகு நிலையங்களில் ஃபேஷியலின் போது கண் இமைகளின் மேல் வெள்ளரிக்காயை வைப்பது இதற்கு தான். 

முகம் பளிச்:

வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் (அ) கடுகு எண்ணெய் தடவினால் முக வறட்சி நீங்கும். உதடு வெடிப்புக்கு பசு நெய்யை தடவினால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.   முகத்தில் உள்ள துவாரங்கள் வழியே மாசுக்கள் சென்றடைந்து முகம் பொலி விழந்து காணப்படும். இதைத் தவிர்க்க தினமும் 4 லிருந்து 5 முறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். முகம் பிரகாசமாக இருக்கும். மாதம் ஒருமுறை வெந்நீரில் முகத்தை காண்பித்து (ஆவி பிடித்தல்) வந்தால் தலையில் உள்ள நீர் வெளியேறுவதோடு, முகத்தில் உள்ள பருக்களும் மறைந்துவிடும். இதைத் தான் இன்று அழகு நிலையங்களில் ஸ்க்ரப் என்ற பெயரில் முகத்தின் அருகில் வெந்நீரை காண்பித்து அழுக்கு நீக்குதல் என்ற பெயரில் செய்கிறார்கள்.

பழங்கள்:

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய அழகு குறிப்புகள்

அழகு நிலையங்களுக்குச் சென்று ஃப்ரூட் ஃபேஷியல் செய்வதை விட இயற்கையில் நமக்கு கிடைக்கும் பழங்களை வைத்தே கூழ் செய்து முகத்தில் தடவி வரலாம். மாம்பழம்,எலுமிச்சை,பப்பாளிப்பழம், வாழைப்பழம்,திராட்சை, ஸ்ட்ரா பெர்ரி, ஆப்பிள் போன்ற பழங்களைக்  கூழாக்கி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும்.

பாத வெடிப்பு குறைய:

பாதங்களில் பாளம் பாளமாக வெடிப்புகள் இருப்பவர்கள் தினமும் படுக்க செல்வதற்கு முன்பு அகன்ற பாத்திரத்தில் மிதமான வெந்நீரை ஊற்றி, அதில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு சேர்த்து இரண்டு பாதங்களையும் நனைத்து இலேசாக பஞ்சு கொண்டு துடைத்து வந்தால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறையும். அழுக்குகள் நீங்கும். 

சிறிது சிரத்தை எடுத்திக் கொண்டு, நமக்காக நேரம் ஒதுக்கி,நம்மிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு நம் உடலை பராமரித்து வந்தால் நாம் எல்லோரும் கூட உலக அழகிகள் தான்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP