மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் அறிகுறிகள் 

செல்களில் உற்பத்தி மற்றும் அழிவில் ஏற்படும் அசாதாரண மாற்றத்தால் செல்கள் ஒன்று சேர்ந்து புற்று நோயாக உருமாறுவதாக சொல்லப்படுகிறது.
 | 

மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் அறிகுறிகள் 

இந்திய பெண்களை அதிகம் பாதிக்கும் புற்று நோகளில்,  மார்பக புற்று நோய் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பெண்களில், 100ல் 26 பேர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனராம். அவர்களில்,  50 சதவீதம் நோயாளிகள் தன்னை  பாதித்துள்ளது மார்பக புற்று நோய்தான்  என்பதை அறிவதற்கு முன்னர் மரணத்தை சந்திப்பதாக ஆய்வு முடிவாகல் கூறுகின்றன.

செல்களில் உற்பத்தி மற்றும் அழிவில் ஏற்படும் அசாதாரண மாற்றத்தால் செல்கள் ஒன்று சேர்ந்து, புற்று நோயாக உருமாறுவதாக சொல்லப்படுகிறது. இந்த புற்று நோய் பாதிப்பு, மிகுந்த ஆபத்தை விளைவிக்க கூடியவை. இதற்கு முந்தைய கட்டுரையில் மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான காரணிகள் குறித்து பார்த்தோம். இப்போது மார்பக புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டால் சந்திக்க நேரிடும் அறிகுறிகள் குறித்து பார்ப்போம் ..

மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் அறிகுறிகள் 

வழக்கத்திற்கு மாறாக மார்பகம் பெரிதாக தென்படுத்தல்.

திடீரென மார்பகம் சுருங்கியது போல்  உணர்தல்.

மார்பக தோல் மிக கடினமாக மாறுதல்.

மார்பக காம்புகளில் இருந்து நீர் வடிதல் .

மார்பகம்,அக்குள் பகுதியில் வீக்கம் ஏற்படுதல்

மார்புக் காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளல்.

மார்பகங்கத்தின் மேற்பரப்பில் கட்டி தோன்றுதல் .

மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் அறிகுறிகள் 

மார்பகத் தோலில் சுருக்கம் அல்லது புள்ளிகள் தோன்றுவது

மார்பகத்தின் ஒரு பகுதியில் சிவந்து எரிச்சல் உணர்வு ஏற்படுதல்.

மார்பகம் வீங்கி கடுமையான வலி ஏற்படுதல் அந்த வலி நீடித்தல்.

மார்பககாம்புகளை சுற்றியுள்ள தோலில் மாற்றம் ஏற்படுதல்.

மேற்சொல்லப்பட்ட அறிகுறிகள் மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது....

newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP