ஆரோக்கியம் அதிகரித்து அழகை கூட்டும் சாலட்..

கண்டதையும் தின்று உடல் பருமனை ஏற்படுத்திக்கொண்டு அவதிப்படுவதை விட சத்தான சாலட்களை அன்றாடம் ஒன்றாக எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் உடல் அழகு என்று இரு நன்மைகளை பெறலாம்.
 | 

ஆரோக்கியம் அதிகரித்து அழகை கூட்டும் சாலட்..

அழகு என்றாலே அங்கு ஆரோக்கியமும் அவசியமாகிறது. அழகு என்பது மனதையும் சார்ந்தது என்பதால் எப்போதும் புன்னகையுடன் வளைய வருபவர்களிடம் அழகும் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும். குறிப்பாக ஆண்களை விட பெண்களே அழகாக இருக்க வேண்டும்.. என்று மெனக்கெடுகிறார்கள்.  

ஆரோக்கியமான பெண்களுக்குத் தேவை சத்தான உணவு, அமைதியான மன நிலை, மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல், முக்கியமாக மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ளுதல் போன்றவைதான். இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தினரைக் கவனிக்கவே நேரமில்லையே என்று ஆதங்கப்படும் பெண்கள் தங்களுக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டியது மிக முக்கியம்.

அழகில் கவனம் செலுத்துவதை விட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினாலே போதும். சீரான ஆரோக்கியம் உங்களை புன்னகையோடு அழகு ராணியாக வைத்திருக்கும். அவசர அவசரமாக இயந்திரகதியில் கிடைத்ததையோ.. எஞ்சியதையோ சத்தில்லாமல் உண்டால் உங்கள் ஆரோக்கிய குறைபாட்டோடு சருமமும் பொலிவிழக்க தொடங்கும். பிறகு சருமத்தைப் பொலிவாக்க என்ன மெனக்கெட்டாலும் பரிபூரண அழகு என்பது செயற்கையின் உதவியால் தான் கிட்டும்..  

உங்களுக்கான சத்தும் ஆரோக்கியமும் சரிவிகிதமாக எடுத்துகொண்டால் போதும். அன்றாட உணவில் கீரைகள், காய்கறிகள், பழங்கள் அவசியம் என்று பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். உடல் அழகு குலையாமல் கூடுதல் பொலிவை பெற காய்கறி சாலட் எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள் டயட்டீஷியன்களும்... நியூட்ரிஷியன்களும்....

எப்போதும் பொறியல் சாப்பிடவேண்டுமா என்று அழும் குழந்தைகள் கூட 3 விதமான காய்கறிகளை சாலட்-  செய்து கொடுத்தால் ஆஹா என்ன அற்புதம் என்று  சப்புகொட்டி  சாப்பிடுவார்கள். காய்கறிகளில் உள்ள நீர்ச்சத்துக்கள் நேரிடையாக இரத்தத்தில் கலந்து செரிமானத்தை எளிதாக்கும்.

நொறுக்குத் தீனிகளின் சுவையை மறக்கடிக்க செய்துவிடும் கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி சேர்த்து செய்யும் சாலட். குறிப்பாக காய்கறி கலவை சாலட் மற்றும் பழக்கலவையில் செய்யப்படும் சாலட்கள் சுவையையும் அதிகரிக்கும்.

உடலுக்கு தேவையான சக்தியையும் முழுமையாக கொடுக்கும். காய்கறி சாலட் ஆக இருந்தாலும் பழச்சாலட் ஆக இருந்தாலும் உடலில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடன்ட் அளவை அதிகரித்து உடலை நோயிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.  

கண்டதையும் தின்று உடல் பருமனை ஏற்படுத்திக்கொண்டு அவதிப்படுவதை விட  சத்தான சாலட்களை அன்றாடம் ஒன்றாக எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் உடல் அழகு என்று  இரு நன்மைகளை பெறலாம். உங்கள் வீட்டு டைனிங் டேபிளில் இனி சாலட்டை  பார்க்கலாம் தானே?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP