கர்ப்பத்திற்கு முந்தைய அறிகுறிகள்!

பொதுவாக கருதரித்தல் நடந்த நான்கு நாட்களுக்கு பிறகே கருவானது கருப்பைக்குள் பதியமாகும். இந்த இடைப்பட்ட நாட்களில் சில முன் அறிகுறிகள் தோன்றும் அவை..
 | 

கர்ப்பத்திற்கு முந்தைய அறிகுறிகள்!

திருமணமான பெண்கள் தனது தாய்மை குறித்த செய்தியை அறியும் தருணமே  பெண்மையின் பொன்னான தருணம் என்று கூட சொல்லலாம். இந்த தருணத்தை மருத்துவ பரிசோதனைக்கு முன்னர் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்பதையும், கரு, குழந்தையாக உருமாறும் முன்பு ஏற்படும் சில அறிகுறிகளை இங்கு பார்க்கலாம்.

பொதுவாக கருதரித்தல் நடந்த நான்கு நாட்களுக்கு பிறகே கருவானது கருப்பைக்குள் பதியமாகும். இந்த இடைப்பட்ட நாட்களில் சில முன் அறிகுறிகள் தோன்றும் அவை... 

திருமணமான பிறகு  மாதவிடாய் 40 நாட்களுக்கு மேல் ஆகியும் வரவில்லை என்றால் அது கருவுற்றதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

காலை எழுந்தவுடன் அல்லது காலை உணவிற்கு பிறகு வாந்தி வருவது போன்ற உணர்வு தோன்றல்.

மலசிக்கல் போன்ற உணர்வு தோன்றுவது.

மயக்கம் , தலை சுற்றல் அடிக்கடி வருவது.

கர்ப்பத்திற்கு முந்தைய அறிகுறிகள்!

மார்பகங்களில் சில மாற்றங்கள் தென்படுவது, அதிக வலி ஏற்படுவது.      

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றுவது.

புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்.

புளிப்பான பொருட்களை சாப்பிட வேண்டும் என்னும் ஆசை தோன்றுவது.

எப்போதும் தூக்க களைப்பாக இருப்பது போன்ற உணர்வு தோன்றுவது.

மனதளவில் மிகுந்த அழுத்தத்துடன் காணப்படுவது.

திடீர் எடை குறைவு அல்லது எடை அதிகரித்தல்.
  
மாதவிலக்கு நிற்பதுடன் மேற்குறிய அறிகுறிகள் தென்பட்டால் அது கருவுற்றதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் . இந்த நேரங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP