கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் !

முந்தைய மாதவிடாய் தேதி முடிந்த 10 நாட்களுக்குள் பரிசோதனை கருவிகள் மூலம் கர்ப்பம் தரித்ததை அறிந்து கொள்ள முடியும். இந்த பரிசோதனையை காலையில் செய்வது நல்லது. அதோடு கருவி முறையாக பயன்படுத்துவதும், காலாவதி ஆகும் தேதியை கவனிப்பதும் மிக அவசியம்.
 | 

கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் !

கர்ப்பம் தரித்த செய்தியை கருத்தரித்த பெண் அறிந்து கொள்ளவே பரிசோதனை தேவைப்படுகிறது. முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் வயது மற்றும் அனுபவத்தில் முதிர்ந்த பெண்கள் இருப்பார்கள். அவர்களின் வீட்டில் மணமாகி வரும் புது பெண்ணின் ஒவ்வொரு உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களை கொண்டே அப்பெண்ணின் தாய்மையை கணித்து விடுவார்கள். அதோடு அந்த காலத்தில் நாடியை பிடித்து பார்த்தே, தாய்மையடைந்துள்ளதை உறுதி படித்து விடுவார்.

இவர்களின் கணிப்பு தவறியதே இல்லை என்று கூட சொல்லலாம். தொழிநுட்பம் நிறைந்த  இந்த காலத்தில் கூட கர்ப்ப நிலையை அறிய பல பரிசோதனைகள் தேவைப்படுகையில், கருவிகள் அற்ற அந்த காலம் இன்றும் நமக்கு வியப்பைத்தான் அளிக்கிறது. கூட்டு குடும்பங்களை வெறுத்து மூத்தோரை தொலைத்ததன்  காரணத்தால் தாய்மையை  எப்படி உணர்வது என்னும் வினாவிற்கான விடையை இணையதளத்தில் தேடும் அவல நிலையை உருவாக்கிக்  கொண்டோம். இந்த கட்டுரையில் கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனைகள் பற்றி பார்க்கலாம்.

கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் !

வீட்டில் செய்து கொள்ளகூடிய  பரிசோதனைகள் மூலம் கர்ப்ப நிலையை அறிந்து கொள்ள முடியும். அதாவது கர்ப்பப்பை வாயில் கரு முட்டைகள் உள்வைக்கப்பட்ட பின்னர் ஹெச்சிஜி என்னும் ஹார்மோன்கள் வெளியாக ஆரம்பிக்கும். இதனை கருவுற்ற பெண்ணின்  சிறுநீர் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும். அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள  கர்ப்ப பரிசோதனை கருவிகள் சாதாரண மருந்து கடைகளில் கூட கிடைக்கிறது. 

முந்தைய மாதவிடாய் தேதி முடிந்த 10 நாட்களுக்குள் பரிசோதனை கருவிகள் மூலம் கர்ப்பம் தரித்ததை அறிந்து கொள்ள முடியும். இந்த பரிசோதனையை காலையில் செய்வது நல்லது. அதோடு கருவி முறையாக பயன்படுத்துவதும், காலாவதி ஆகும் தேதியை கவனிப்பதும் மிக அவசியம்.

 இந்த பரிசோதனையை வீட்டிலேயே செய்து கொள்ளலாம் அல்லது  மகப்பேறு மருத்துவமனைகளை அணுகி சிறுநீர் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் !

மாதவிடாய் ஏற்படும் நாளுக்கு முன்னரே கர்ப்பம் தொடர்பான பரிசோதனை துல்லியமான முடிவுகளை தராமலும் போகலாம் . எனவே மாதவிடாய் நாளுக்கு பிறகு பரிசோதனை செய்வது நல்லது.

வாந்தி மயக்கம், அடிவயிற்றில் இறுக்கமான உணர்வு, மார்பு பகுதிகளில் வலி போன்ற கர்ப்பம் தரித்ததற்கான அறிகுறிகள் 7 முதல் 10 நாட்கள் நீடித்த பிறகு கர்ப்ப பரிசோதனைகள் செய்வது நல்லது.

இந்த பரிசோதனையை காலையில் விழித்தவுடன் முதல் முறை வெளியேற்றும் சிறுநீரில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும்.

பரிசோதனை செய்த 5 நிமிடத்திற்குள் காட்டப்படும் முடிவு தான் துல்லியமானதாக இருக்கும், குறிப்பிடட நேரத்திற்கு பிறகு வரும் முடிவுகளை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம்.

கர்ப்ப பரிசோதனை கருவிகளில் இருக்கும் கோட்டிற்கு அருகில் சிறுநீர் மாதிரியை செலுத்தியவுடன் மற்றொரு கோடு தோன்றினால் அது கர்ப்பம் உருவாகியுள்ளதன் அறிகுறியாக இருக்கும்.

கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் !

சில நேரங்களில் இந்த பரிசோதனையில் தவறான முடிவுகள் கூட பெறப்படலாம். சிறுநீரில் கலந்துள்ள ரத்தம், புரோட்டின் அல்லது வலி மறத்தல் தொடர்பான மருந்துகள் உட்கொண்டிருந்தாலும் இந்த கோடுகள் தோன்றும் வாய்ப்புள்ளது.

இந்த பரிசோதனையில் கருவுற்றதற்கான முடிவுகள் கிடைத்துவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் !

கர்ப்பத்தை உறுதி செய்ய மருத்துவமனைகளில் ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்படும். அதாவது, ரத்தத்தில் உள்ள ஹெச்சி அளவை கண்டறிவதன் மூலம் கர்ப்ப நிலையை மருத்துவர்கள் உறுதி செய்வார்கள். 

சிறு நீர் பரிசோதனையின்போது நிகழும் எந்த தவறுகளும் ரத்த பரிசோதனையின்போது  நிகழ்வதில்லை. அதோடு கர்ப்பம் சார்ந்த சிக்கல்களையும் இதன் மூலம் அறிய வாய்ப்பு ஏற்படும்.

எந்த பரிசோதனையாக இருந்தாலும் சரி...முறையாகவும், சரியான காலத்திலும் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் கருச்சிதைவை தவிர்க்க முடியும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP