கர்ப்ப கால பராமரிப்புகள்: செய்ய வேண்டியவை

தண்ணீரை அருந்தும் போதும், மிகுந்த கவனம் தேவை. சுத்திகரிக்கப்பட்ட நீராக இருந்தாலும், அதனை காய்ச்சி குடிப்பது நல்லது. அதோடு மிக சூடாகவோ, குளிர்ச்சியாகவோ தண்ணீரை குடிக்க கூடாது. அதேபோல் அவசரமாக தண்ணீர் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
 | 

கர்ப்ப கால பராமரிப்புகள்: செய்ய வேண்டியவை

கர்ப்பம் தரித்த முதல் நாள் முதல் பிரசவம் வரை வயிற்றில் இருக்கும் சிசுவை எந்தவித தீங்கும் அண்டிவிடாமல் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு தாயை சேர்க்கிறது. இந்த கர்ப்ப காலத்தில் தாய் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட வயிற்றில் இருக்கும் பிள்ளையை பெரிதும் பாதிக்க கூடும். முந்தைய கட்டுரையில் கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கான கவனிப்பையும், உணவையும், பற்றி பார்த்தோம் இந்த கட்டுரையில் கர்ப்ப கால பராமரிப்பு குறித்து பார்க்கலாம்.

கர்ப்பம் தரித்த பெண்கள் உட்கொள்ளும் உணவுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முடிந்தவரை உணவுகளை வீட்டில் சமைத்து உட்கொள்ள வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது, தாய் -சேய் இருவருக்கும் நன்மை பயக்கும்.  

தண்ணீரை அருந்தும் போதும், மிகுந்த கவனம் தேவை. சுத்திகரிக்கப்பட்ட நீராக இருந்தாலும், அதனை காய்ச்சி குடிப்பது நல்லது. அதோடு மிக சூடாகவோ, குளிர்ச்சியாகவோ தண்ணீரை குடிக்க கூடாது. அதேபோல் அவசரமாக தண்ணீர் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். 

குளியல் சோப்புகளுக்கு பதிலாக கெமிக்கல் அற்ற மூலிகை பொடிகளையும் சூரணங்களையும் உபயோகப்படுத்தலாம். இதனால் கிருமி தொற்றுகள் உண்டாவதை தவிர்க்க முடியும்.

பகல் நேரங்களில் தூங்குவதை தவிர்ப்பது நல்லது. கோடை காலங்களில் மட்டும் உடல் சூட்டை சமன் செய்ய இரண்டு மணி நேரம் தூங்கலாம்.

கர்ப்ப கால பராமரிப்புகள்: செய்ய வேண்டியவை

மன உளைச்சலை உண்டாக்க கூடிய எந்த செயலிலும் ஈடுபடாமல். மன அமைதிக்காக தியானம், மூச்சு பயிற்சி, மெல்லிசை கேட்பது  போன்றவற்றை மேற்கொள்ளலாம். மன உளைச்சல் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு சீரான சக்தி குறைவாக இருக்கும் என்பதால் சீரகம், சோம்பு, இஞ்சி, ஏலக்காய், இந்துப்பு ஆகியவற்றை  உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் ஓடவோ, மிக வேகமாக நடக்கவோ கூடாது.

எளிமையான வீட்டு வேலைகளை செய்யலாம். 

கர்ப்ப கால பராமரிப்புகள்: செய்ய வேண்டியவை

வாந்தி, மசக்கை போன்றவற்றை எதிர்கொள்ளும் பக்குவத்தை மனதில் கொள்ள வேண்டும்.  நார்த்தங்காய் ,நெல்லி வற்றல்,ஆல்பகோடா, எலுமிச்சை போன்றவற்றை மசக்கையை கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளலாம். 

மருத்துவரின் ஆலோசனைப்படி, ஆறாம் மாதம் வரை மட்டுமே தாம்பத்தியம் வைத்துக்கொள்ள வேண்டும்.

இளஞ்சூடான வெந்நீரில் குளிக்கலாம். தலைக்கு குளித்த பிறகு முடியில் ஈரம் தங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.இல்லையேல் தலைபாரம், தலை வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

சிறுநீர் தொற்றுக்களை தடுக்க அதிக நீர் அருந்துவது, நீர் சத்துள்ள பூசணி,சுரைக்காய், கீரை வகைகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். 

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மல சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதனை தவிர்க்க நெய்,  அதிக விதையுள்ள பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்ளலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP