கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நஞ்சு நோய்! 

கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பெரிய ஆபத்தை விளைவித்துவிடும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை இறந்து பிறப்பது அல்லது குறைப்பிரசவத்தில் பிறப்பது போன்ற ஆபத்துக்கள் உள்ளன.
 | 

கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நஞ்சு நோய்! 

கர்ப்ப கால நோய்களில் மிகவும் ஆபத்தை விளைவிக்க கூடியது இந்த நஞ்சு நோய்.  பொதுவாக இந்த நோய் கர்ப்பம் தரித்த 20வது வாரங்களுக்கு பிறகே ஏற்படக்கூடிய பிரச்னையாகும். 

எக்ளாம்ப்சியாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் இரத்த அழுத்தம், உடல் வீக்கம், உடல் வலி, கண்பார்வை கோளாறு அல்லது பார்வை இழத்தல், வலிப்பு நோய், மூளையில் ரத்தப்போக்கு, நுரையீரல் வீக்கம்  உள்ளிட்ட ஆபத்துகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.   

கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நஞ்சு நோய்! 

இந்த பதிப்பின் அறிகுறிகளாக  வாந்தி, மங்கலான பார்வை, மேல் வயிற்றில் வலி, முகம்,கை,கால்களில் வீக்கம், அதிக எடை கூடுதல், மூச்சு திணறல் உள்ளிட்டவை தோன்றும்.

கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பெரிய ஆபத்தை விளைவித்துவிடும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை இறந்து பிறப்பது அல்லது குறைப்பிரசவத்தில் பிறப்பது போன்ற ஆபத்துக்கள் உள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நஞ்சு நோய்! 

இந்தக் கர்ப்ப கால நஞ்சு நோய் இருக்கும் தாய்மார்க்கு பூரண ஓய்வு தேவை. சிறுநீர் வெளியேற்றம் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை முறையாக பேணுவதன் மூலம் இந்த நோயை மட்டுப்படுத்த முடியும். பொதுவாக இந்த நோய்க்கு ஆளாகும் கர்ப்பிணிகளின் பிரசவம் மருத்துவ கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். அதோடு நோய் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் குழந்தை சிசேரியன் மூலமும் உடனடியே வெளியே எடுக்கப்படும்.

முறையான மருத்துவ ஆலோசனையும், பரிசோதனைகளும் இதுபோன்ற கர்ப்ப கால நோய்களிலிருந்து தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க உதவும்.

newstm.in
   
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP