தண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள் இருப்பது அண்மையில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 | 

தண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

தண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள் இருப்பது அண்மையில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் ஆர்ப் மீடியா என்ற பத்திரிக்கை அமைப்பு உலக மக்கள் அனைவரும் தண்ணீர் பாட்டில்களில் ரசாயன பொருட்கள் உள்ளனவா? நம் அருந்தும் மினரல் குடிநீரில் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளன என்ற ஆய்வை நடத்தியது. சுமார் 250 முன்னணி நிறுவனங்களின் தண்ணீர் பாட்டில்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு அமெரிக்காவின் பெர்டோனியாவில் உள்ள ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 9 நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவில் பிரபல தண்ணீர் பாட்டில் நிறுவனங்களின் தண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் ஒரு லிட்டர் தண்ணீரில் 10 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவலை தருகிறது இந்த ஆய்வு கூறுகிறது. பாட்டிலில் உள்ள தண்ணீரை 1.5 மைக்ரான் அதாவது 0.0015 மில்லி மீட்டர் அளவு துவாரம் கொண்ட வடிகட்டி மூலம் வடித்தெடுத்து பின்னர் அந்த வடிகட்டியில் தேங்கியுள்ள பொருட்களை ஆய்வு செய்தார்கள். மைக்ராஸ்கோப் மற்றும் இன்ஃப்ரா ரெட் பரிசோதனை மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதில் ஏராளமான பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் (பெட்) போன்ற பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரியவந்தது. 

தண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

பொது இடங்களில் கிடைக்கும் தண்ணீர் அசுத்தமாக இருக்கிறது என்று தான் நாம் மினரல் வாட்டர் பாட்டில்களைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் தண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது மிகப்பெரிய சுகாதாரக் கேடாகவே பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த ஆய்வு குறித்து வடக்குக் கரோலினா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்காட்பெல்சர் கூறுகையில், ’பாட்டில் தண்ணீரை விடக் குழாயில் நேரடியாக வரும் தண்ணீர் தான் பாதுகாப்பானது. எனவே அதனைப் பயன்படுத்துவதே சிறந்தது’ எனக் கூறுகிறார். 

முன்னதாகச் சுகாதாரமற்ற தண்ணீரால் ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் முக்கிய ஆதாரமான தண்ணீர் சுகாதாரமற்று இருப்பது அதிர்ச்சியாகவே உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP