Logo

கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான  ஊட்டச்சத்துக்கள்!

எந்தவொரு ஊட்டச்சத்துக்களின் குறைபாடும் குழந்தைகளில் பிறப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் தாய்க்கும் ஊட்டச்சத்து குறைந்த அளவு இருந்தால்.பிறக்கும் குழந்தை எடை குறைபாடோடு பிறக்க கூடும்.
 | 

கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான  ஊட்டச்சத்துக்கள்!

கர்ப்பிணி பெண்கள்  சீரான உணவை உட்கொள்வது அவசியம், ஏனென்றால் அவர்கள் உட்கொள்ளும் உணவு குழந்தை வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். எந்தவொரு ஊட்டச்சத்துக்களின் குறைபாடும் குழந்தைகளில் பிறப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். கர்ப்பத்திற்கு முன்னும், பின்னும்  தாய்க்கும் ஊட்டச்சத்து குறைந்த அளவு இருந்தால், பிறக்கும் குழந்தை  எடை குறைபாடோடு பிறக்ககூடும்.  எடை குறைவாக பிறந்த ஒரு குழந்தைக்கு நோயெதிர்ப்பு  பலவீனமடையக்கூடும். அதோடு பிற்கால வாழ்க்கையில் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு  அதிகமாகவே உள்ளதாம். 

கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான  ஊட்டச்சத்துக்கள்:

இரும்புச்சத்து :

குழந்தைக்கு ஆக்ஸிஜனை வழங்க இரும்புச்சத்து முக்கியமானது. இரும்புச்சத்து நிறைந்த இறைச்சி, பட்டாணி, உலர்ந்த பீன்ஸ் மற்றும்  தானியங்களை உட்கொள்ள வேண்டும். அதோடு  கர்ப்பத்தின் இரண்டாம் பாதியில் மருத்துவ ஆலோசனைப்படி, ஃபோலிக் அமிலத்துடன் இரும்புச்சத்து  உட்கொள்ள இந்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

கால்சியம்:  
வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியம்  அதிகமுள்ள சீஸ், தயிர், பால் மற்றும் மத்தி மீன் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

வைட்டமின் பி 6: 
இந்த வைட்டமின் உட்கொள்ளும் கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சரியாகப் பயன்படுத்த உதவுகிறது. வைட்டமின் பி 6 பன்றி இறைச்சி, கோழி, மீன், முட்டை, காய்கறிகள், வாழைப்பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றில் காணப்படுகிறது. .

கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான  ஊட்டச்சத்துக்கள்!

வைட்டமின் டி: 
கால்சியம் உடலால் சரியாக உறிஞ்சப்படுவதற்கு வைட்டமின் டி அவசியம். இது  குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க உதவுகிறது. 

ஃபோலேட்: 
வளரும் கருவின் உடலில் புரதங்கள் மற்றும் இரத்தத்தை உற்பத்தி செய்ய இந்த வைட்டமின் அவசியம். நரம்பு குழாய் குறைபாட்டிற்கான  அபாயத்தை குறைக்க ஃபோலேட் உதவுகிறது. பச்சை இலை காய்கறிகள், ஆரஞ்சு சாறு, பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகளில் ஃபோலேட் காணப்படுகிறது. நரம்புக் குழாய் குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்க கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பத்தின் முதல் 12 வாரங்களில் ஒவ்வொரு நாளும் ஃபோலேட் உட்கொள்ள வேண்டும். 

அயோடின்:
 கருவில் உள்ள குழந்தையின்  மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும்.  தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கும் அயோடின் மிகவும் முக்கியமானதாக உள்ளது . இந்தியாவில், ஒரு கர்ப்பிணிப் பெண் ஒவ்வொரு நாளும் அயோடின் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP