பெண்களின் கூந்தலை காக்கும் இயற்கை ஷாம்பூ!

ஆம் வீட்டிலேயே இயற்கை முறையில் ரசாயன கலவையற்ற இயற்கை ஷாம்பு தயாரிக்க தேவையான பொருட்கள். கடலை பருப்பு, பாசி பயறு, வெந்தையம், பாதாம் பருப்பு, செம்பருத்தி இலை அல்லது பூ, நெல்லக்காய் இவ்வளவு தான்.
 | 

பெண்களின் கூந்தலை காக்கும் இயற்கை ஷாம்பூ!

‛ஆறடி கூந்தலாம் அதிசய மேனியாம்’ என, அக்கால பெண்களைப் பார்த்து பெரியவர்கள் கூறுவது வழக்கம். ஆம் அவ்வளவு நீளமாகவும் அடர்த்தியாகவும் கூந்தல் இருந்தது நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு. 

ஆனால், இக்கால பெண்கள், சிறுமிகளுக்கு அரை அடி கூந்தல் என்பதே அதிசயம் ஆகிப்போய்விட்டது. முறையான ஊட்டச்சத்து இல்லாமை, பராமரிப்பு இல்லாதது மற்றும் பல்வேறு ரசாயனங்கள் கலந்த ஷாம்பு, கண்டிஷனர்களை பயன்படுத்துவதே கூந்தல் உதிர்வுக்கும், முடி வளர்ச்சி குறைவுக்கும் காரணமாக கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் கூந்தலை காக்கும் இயற்கை ஷாம்பூ!

இருக்கும் கூந்தலையாவது காப்பற்றிக் கொள்ள வேண்டுமே என பெண்கள் பலரும் எதையெதையோ செய்து பார்க்கின்றனர். ஆனால், எதற்கும் பலன் கிடைப்பதாக தெரியவில்லை. நம் வீட்டில் இருக்கும் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தியே, கூந்தலை வலுப்படுத்தி, முடி உதிர்வை தடுத்து, தலையை சுத்தமாக்கும் இயற்கை ஷாம்பு தயாரிக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம் வீட்டிலேயே இயற்கை முறையில் ரசாயன கலவையற்ற இயற்கை ஷாம்பு தயாரிக்க தேவையான பொருட்கள். கடலை பருப்பு, பாசி பயறு, வெந்தையம், பாதாம் பருப்பு, செம்பருத்தி இலை அல்லது பூ, நெல்லக்காய் இவ்வளவு தான். 

பெண்களின் கூந்தலை காக்கும் இயற்கை ஷாம்பூ!

கடலைப் பருப்பு, பாசிப் பயறு மற்றும் வெந்தையம் மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு வெயிலில் நன்கு காய வைக்கவும். பின் மூன்றையும் மிஷினில் அல்லது மிக்சியில் அரைக்கவும். 

இந்த கலவையை அரைக்கும் பாேது, அத்துடன் சிறிதளவு பாதாம் பருப்பு, காய்ந்த செம்பருத்தி இலை அல்லது பூ, காய்ந்த நெல்லிக்காய் உள்ளிட்டவற்றையும் சேர்த்து அரைக்கவும். 

செம்பருத்தி பொடி, நெல்லிப் பொடி ஆகியவற்றை நீங்களே தயாரிக்க முடியாவிட்டால், வீட்டருகே இருக்கும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி இத்துடன் கலந்து கொள்ளலாம். 

பெண்களின் கூந்தலை காக்கும் இயற்கை ஷாம்பூ!

அவ்வளவு தான். வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை ஷாம்பு பவுடர் தயார்! என்ன இது, ஷாம்பு என்றால் லிக்விட் ஆகத்தானே இருக்கும் என நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கு தான் மேற்கண்ட வரியில் ஷாம்பு பவுடர் எனக் கூறினேன். 

இந்த ஷாம்பு பவுடரை ஒரு பவுலில் எடுத்துக் கொண்டு, நீங்கள் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன், தயிரில் கலந்து ஊற வைக்கவும். அது நன்கு நுரைத்து சற்று பொங்கி வரும். அதை அப்படியே தலையில் தேய்த்து குளிக்க பயன்படுத்தலாம். 

தயிர் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள், வெறும் நீரில் கலந்தும் இதை பயன்படுத்தலாம். ஆனால், குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இந்த பவுடரை ஊற வைத்து லிக்விட் ஷாம்புவாக மாற்ற மறக்க வேண்டாம். 

கடலை பருப்பு மிருது தன்மையையும், பாசிப் பயறு குளிர்ச்சியையும், வெந்தையம் மேற்சொன்ன இரண்டையுமே அளிக்கிறது. பாதாம், செம்பருத்தி, நெல்லி உள்ளிட்டவை முடி வளர்ச்சியை துாண்ட உதவுகிறது. செம்பருத்தி, நெல்லி ஆகியவை குளிர்ச்சிக்காவும் பயன்படுத்தப்படுகிறது. 

இவ்வகை இயற்கை ஷாம்புவை தொடர்ந்து பயன்படுத்துவதால், பொடுகு, பேன் தாெல்லையிலிருந்தும் தப்பலாம். நீங்களும் ட்ரை செய்து பாருங்கள். அரை அடி கூந்தலை அட்லீஸ்ட் இரண்டரை அடி கூந்தலாகவாக மாற்றுங்களேன்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP