பித்தவெடிப்பை வேரறுக்கும் இயற்கை மருந்து!

பித்த வெடிப்பை வேரோடு அழிக்கும் அருமருந்து, ஓளவை கிழவி அதியமானுக்கு அளித்த நெல்லிக்கனி தான். ஆம்... காய்கறிக் கடைகளில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நெல்லிக்காயில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன.
 | 

பித்தவெடிப்பை வேரறுக்கும் இயற்கை மருந்து!

என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது பழமொழி. அந்த சிரசு முதல் உடலின் அனைத்து பாங்களையும் தாங்கிப் பிடிப்பது நம் பாதங்களே. அப்படிப்பட்ட பாதங்களை நாம் சரியாக கவனித்துக் கொள்கிறோமா என்றால், பெரும்பாலும் இல்லை என்பதே உண்மை. 

கால்களுக்கு செருப்பு அணிவது மட்டும் போதாது. பாதங்களை முறையாக பராமரித்தால் மட்டுமே வரும் பிணிகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். வெண்ணீரில் பாதங்களை கழுவுதல், பாதங்களில் எண்ணெய் தேய்த்து மசாஜ் என பல வழிமுறைகள் இருந்தாலும், இவை அனைத்தும் மேற்பூச்சு வைத்தியங்களே. 

நாம் உட்கொள்ளும் அருமருந்துகளின் மூலம், பாதங்களில் பித்த வெடிப்பு வராமல் பார்த்துக்கொள்ளத்தான் இந்த பதிவு. ஆம்... பெண்களில் பெரும்பாலானோர் பாதங்களில் காணப்படும் பித்தவெடிப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. 

ஆம்... நீண்ட நேரம் ஈரத்தில் நின்று  வீட்டு வேலைகளை செய்வதால், அவர்களின் பாதங்களில் இன்பெக்சன் ஏற்பட்டு, பித்த வெடிப்பு உருவாகிறது. அது மட்டுமின்றி, அதிகப்படியான காபி, டீ பழக்கமும், பித்த வெடிப்புக்கு முக்கிய காரணமாகிறது. 

பித்தவெடிப்பை வேரறுக்கும் இயற்கை மருந்து!

இது மட்டுமின்றி, சத்து குறைபாடு, கவலை, டென்ஷன் என பாேன்ற பல்வேறு காரணங்களால் பித்த வெடிப்பு உண்டாகிறது. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் மிகப் பெரிய விளைவை சந்திக்க நேரிடும். 

பித்த வெடிப்பை வேரோடு அழிக்கும் அருமருந்து, ஓளவை கிழவி அதியமானுக்கு அளித்த நெல்லிக்கனி தான். ஆம்... காய்கறிக் கடைகளில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நெல்லிக்காயில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. 

இதில் இருக்கும் விட்டமின் சி சத்து, கண் பார்வை கோளாறு ஏற்படாமல் செய்வதுடன், மேனி பளபளப்பை உண்டாக்கி என்றும் இளமையான தோற்றத்திற்கு வழிவகை செய்கிறது. 

முக்கியமாக, இதில் இருக்கும் பல்வேறு அமிலங்கள், உடம்பில் இருக்கும் டாக்சின்களை வெளியேற்றி, பித்தவெடிப்பை வேரோடு அறுக்கிறது. இது, பலரும் உபயோகித்து நேரடி பலன் கண்டுள்ளனர். ஒரு நாளைக்கு ஓர் நெல்லிக்காய் என தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், 30 - 50 நாட்களில் பித்த வெடிப்பு காணாமல் போகும். 

அத்துடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து அதை சாப்பிட்டால், ரத்த விருத்திக்கும் உதவுகிறது. டாக்சின்களை வெளியேற்றும் முக்கிய பணியை இது செய்வதால், உடல் எப்போதும் கலகலப்பாக இருக்க உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து, நமக்கு பல நண்மைகளை தருகிறது. 

நெல்லிக்காயின் இன்னொரு முக்கிய குணாதியசம் என்னவென்றால், அதை பச்சையாக சாப்பிட்டாலும், வேக வைத்து சாப்பிட்டாலும், வெயிலில் காய வைத்து சாப்பிட்டாலும், தேனில் ஊற வைத்து சாப்பிட்டாலும், காரம் சேர்த்து சமைத்து சாப்பிட்டாலும், அதில் உள்ள சத்துக்கள் குறைவதோ, மாறுவதோ கிடையாது. 

அதனால் தான், நெல்லிக்காயை ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கின்றனர். ஒரு ஆப்பிளில் இருக்கும் சத்துக்களுக்கு நிகரான சத்துக்கள், ஒரு நெல்லிக்காயில் இருப்பதாக இயற்கை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP