மாதவிடாயின்போது சந்திக்ககூடிய வலிகளை போக்கும் வழிமுறைகள்

வாழைப்பழங்களை தினந்தோறும் சாப்பிடுவதால் மாதவிடாய் வலிகளை குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இந்த பழத்தை சாப்பிடுவதனால் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் பருவக் கோளாறுகளிலிருந்து தப்பிக்க முடியும்.
 | 

மாதவிடாயின்போது சந்திக்ககூடிய வலிகளை போக்கும் வழிமுறைகள்

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பூப்படைந்த பெண்ணும் சந்திக்க  கூடிய இயற்கையான சுழற்சி முறையாகும். பாலுட்டும் அனைத்து உயிர்களுக்கும் இந்த நிகழ்வு நடைபெறும் என்றாலும், மனித இனம் மற்றும் 'சிம்பன்சி' போன்ற குரங்கு இனங்களுக்கு மட்டுமே இந்நிகழ்வு வெளிப்படையாக நடைபெறுகிறது.  மாதந்தோறும் கருப்பையில் சேமிக்கப்படும் உதிரம், கரு சினையுராத பட்சத்தில் வெளியேற்றப்படுவதே மாதவிடாயாகும். இது மாதந்தோறும் 21லிருந்து 35 நாட்களுக்கு ஒருமுறை 3 அல்லது 7 நாட்கள் வரை நீடிக்க கூடியது.

அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின்போது வயிற்றின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற  உடல் உபாதைகள் அறிகுறிகளாக  தோன்றுகின்றன. இதோடு கடுமையான மன அழுத்ததிற்கும் பெண்கள் ஆளாவதுண்டு.

மாதவிடாயின்போது சந்திக்ககூடிய வலிகளை போக்கும் வழிமுறைகள்

முறையான உணவு பழக்கம் இன்மை, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், மாதவிடாயின்போது பின்வரும் பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.  சரியான சுழற்சியில் மாதவிடாய் நிகழாமல் இருப்பது, மாதத்திற்கு இருமுறை அல்லது மாறுபட்ட சுழற்சியில் மாதவிடாய் நிகழ்வது, மாதவிடாய் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வராமல் இருப்பது, மாதவிடாய் உண்டாகும்போது அதிகமான அடிவயிற்று வலி, உடல் அசதி, வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்படுவது, மாதவிடாய் போது அளவுக்கு அதிகமாக உதிரம் போக்கு, மாதசுழற்சிக்கு இடையில் ஓரிரு நாட்கள் உதிரம் படுவது. 

இத்தகைய பிரச்னைகளை சந்திப்போர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை செய்து கொள்வதுடன் பின்வரும் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் மேற்கூறிய பிரச்னைகளை குறைக்கலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்;


 ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல்:

மாதவிடாயின்போது சந்திக்ககூடிய வலிகளை போக்கும் வழிமுறைகள்

 உடற்பயிற்சியின்மை, ஜங்புட் மற்றும் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை கைவிடுதல், மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுதல்,  முடிந்த வரை உற்சாகமளிக்கும் வாழ்க்கை முறையை பின்பற்றுதல் போன்றவை மாதவிடாய் கால வலிகளை குறைக்க உதவும். யோகா, உடற்பயிற்சி,  நடைபயிற்சி உள்ளிட்டவற்றை நடைமுறை வழக்கமாக கொள்ள வேண்டும். அதோடு எளிமையான, வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இது ஆரோக்யமான மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும்.

வாழைப்பழங்கள் சாப்பிடுதல்:

மாதவிடாயின்போது சந்திக்ககூடிய வலிகளை போக்கும் வழிமுறைகள்

வாழைப்பழங்களை தினந்தோறும் சாப்பிடுவதால் மாதவிடாய் வலிகளை குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
வாழைப்பழங்கள் வைட்டமின் B6 மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்களை  கொண்டிருக்கின்றன. இந்த பழத்தை சாப்பிடுவதனால் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் பருவக் கோளாறுகளிலிருந்து தப்பிக்க முடியும்.

உலர்ந்த திராட்சையும், குங்குமப்பூவும்: 

மாதவிடாயின்போது சந்திக்ககூடிய வலிகளை போக்கும் வழிமுறைகள்

மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு வாரம் முன்பாக உலர்ந்த திராட்சையுடன் குங்குமப்பூ சாப்பிடுவதால் மாதவிடாய் வலிகளிலிருந்து தப்பிக்க இயலும். இந்த முறை மாதவிடாய் தேதியை ஞாபகம் வைத்துக்கொள்ளும் நபர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும். இருப்பினும் தினமும் காலையில் உலர் திராட்சை மற்றும் குங்குமப்பூ சாப்பிடுவதனால் இரத்த சோகை பிரச்னையால் அவதிப்படும் பெண்களின் பிரச்னை சரியாவதுடன், மதவிடாய் கோளாறுகளும் நீங்கும்.

பருப்புவகைகளை உட்கொள்ளுதல்:

மாதவிடாயின்போது சந்திக்ககூடிய வலிகளை போக்கும் வழிமுறைகள்

பாசிப்பயிறு, காராமணி, ராஜ்மா எனப்படும் சிவப்பு காராமணி,கடலை பருப்பு, கொள்ளுப்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் மற்றும் தானிய வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுதல் மூலம் மாதவிடாயின்போது ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடிவதுடன், நல்ல உடல் வலிமையையும் பெற முடியும். 

காய்கறிகளை சாப்பிடுதல்:

 மாதவிடாயின்போது சந்திக்ககூடிய வலிகளை போக்கும் வழிமுறைகள்
சர்க்கரைவள்ளி கிழங்கு, கருணை கிழங்கு,  சேனை கிழங்கு, சேப்பங்கிழங்கு,  வாழைக்காய் போன்ற காய்களை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் மூலம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கலாம்.

பூப்படைந்த காலம் முதல்  45 வயது வரை ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் முறையான மாதவிடாய் சுழற்சியை சந்திக்க வேண்டும். அந்த சமயங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு அல்லது குறைவான உதிரப்போக்கு, முறையற்ற மாதவிடாய் சுழற்சி போன்றவை குழந்தையின்மைக்கு வழி வகுப்பதுடன், புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களையும் கொண்டு வரக்கூடும். மாதாவிடாய் காலங்களில் ஆரோக்யமும், சுகாதாரமும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP