கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்!

உண்மையில் கருவுற்றதில் இருந்து செய்யப்படும் மருத்துவ ரீதியான பரிசோதனைகள் மட்டுமே குழந்தை முழு ஆரோக்யத்தோடு பிறக்க வழிவகை செய்யும் என்று சொல்லலாம். பின் வரும் ஸ்கேன்களை கர்ப்பிணிகள் கட்டயாம் செய்ய வேண்டும்.
 | 

கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்!

கரு எந்த நிலையில் வளர்கிறது என்பதை கண்டறிய ஸ்கேன் மிகவும் இன்றையமையாததாக இருக்கிறது. சிலர் இதுபோன்ற செயல்கள் தேவையற்றையவை என்றும் இதனால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் என்றெல்லாம் எண்ணுகின்றனர். உண்மையில் முறையாக செய்யப்படும் மருத்துவ ரீதியான பரிசோதனைகள் மட்டுமே குழந்தை முழு ஆரோக்யத்தோடு பிறக்க வழிவகை செய்யும் என்று சொல்லலாம். பின் வரும் ஸ்கேன்களை கர்ப்பிணிகள்  கட்டாயம் செய்ய வேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் செய்து கொள்ளும்  ஸ்கேன் மூலம் கரு பத்தியமானதை உறுதி செய்து கொள்ள முடியும். அதோடு குழந்தை பிறப்பதற்கான சரியான தேதியையும் முடிவு செய்ய முடியும்.

4 - 6 மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் மூலம் குழந்தையின் உறுப்பு சரியாக வளர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அதோடு 10 செ.மீ. நீளம் மட்டுமே இருக்கும் குழந்தையின் இதயம், மூளை, நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகளில் ஏதாவது பிறவிக் குறைபாடு இருந்தால் கண்டறிய முடியும்.

கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்!

7 - 8 மாதத்துக்குப் பிறகு செய்யப்படும் மூன்றாவது ஸ்கேனின் மூலம் குழந்தையின் வளர்ச்சி,தொப்புள் கொடியின் அமைப்பு, அவற்றின் ரத்த ஓட்டம் போன்றவற்றை அறிய இயலும். அதோடு இந்த காலகட்டத்தில் செய்யப்படும் ஸ்கேன் மூலம் தான் சுகப்பிரசவமா? அல்லது சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நிகழுமா? என கணிக்கப்படுகிறது.

11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும் ஸ்கேனில் மூலம் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்க முடியும். இந்த ஸ்கேன் செய்து கொள்வதன் மூலம் குழந்தையின் அசைவு , குழந்தை கீழ் நோக்கி திரும்புவதற்கு ஏதுவான சூழல் போன்றவற்றை கண்டறிய முடியும்.

மேற்சொன்ன காலக்கெடுவிற்கு இடையில் கர்ப்பம் தரித்த பெண்ணிற்கு ஏதேனும் உபாதைகள், தொற்றுக்கள், விபத்து போன்றவை ஏற்படும் சமயத்தில் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஸ்கேன் செய்வது நல்லது.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP