கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவு பட்டியல் 

கர்ப்பம் தரித்த பிறகு பெண்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல் வயிற்றில் வளரும் குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டு உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும்.
 | 

கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவு பட்டியல் 

கர்ப்பம் தரித்த பிறகு பெண்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல்,  வயிற்றில் வளரும் குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டு உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான உணவுகளையே  சாப்பிட வேண்டும்.

அதோடு சாதாரண நேரங்களில் எடுத்துக்கொண்ட கலோரிகளை விட, கர்ப்ப காலத்தில் கொஞ்சம் கூடுதலாக எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்பம் தரித்த பெண்கள் எவ்வாறான உணவு பட்டியலை பின் பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்...

தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்ட சைவ உணவுகளை உட்க்கொள்ள வேண்டும்.

பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், பாலாடைக்கட்டி என புரதம் நிறைந்த பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, நெல்லிக்காய், அத்திப்பழம் போன்ற உலர் பழங்கள் மற்றும் கோட்டை வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகளில் முட்டை, மீன், ஆடு, கோழி இறைச்சி, ஆட்டு ஈரல் போன்றவற்றை சாப்பிடலாம்.

கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவு பட்டியல் 

கர்ப்பிணி பெண்கள் வழக்கத்தை விட மாறாக மூன்று வேளைக்கு பதில் ஆறு வேளை உணவு உட்க்கொள்ள வேண்டும்.
கர்ப்பம் தரித்த நேரங்களில் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல், சிறுநீர் தொற்று போன்றவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

குழந்தையின்  வளர்ச்சிக்கு போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் மிகமிக அவசியம் எனவே அத்தகைளய சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.  

இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை, பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP