தீக்காயம் அடைந்தவர்களுக்கு உயிர் காக்கும் தோல் தானம்!

கண் தானம், ரத்ததானம், உடல் தானம் போன்று, தற்போது தோல் தானம் செய்யும் வசதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தோல் தானம் என்பது பலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது.
 | 

தீக்காயம் அடைந்தவர்களுக்கு உயிர் காக்கும் தோல் தானம்!

தீக்காயம் அடைந்தவர்களுக்கு உயிர் காக்கும் தோல் தானம்!

தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலர் உயிரிழந்தனர். தோல்தானம் செய்திருந்தால் இவர்களில் சிலரது உயிரையாவது காப்பாற்றியிருக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். உடல் உறுப்புத் தானம் செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. உடல் உறுப்பு தானத்தால் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்படும் அதே வேளையில் தோல் கிடைக்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

இந்த நேரத்தில் தோல்தானம் பற்றித் தெரிந்துகொள்வது சரியாக இருக்கும்... கண் தானம், ரத்ததானம், உடல் தானம் போன்று, தற்போது தோல் தானம் செய்யும் வசதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தோல் தானம் என்பது பலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. 

இதயம், சிறுநீரகம், நுரையீரல், கணையம், கல்லீரல், கண் உள்ளிட்ட சில உறுப்புக்களைத்தான் தானம் செய்ய முடியும் என்று நினைக்கின்றோம். இதில், இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புக்களை நாம் உயிருடன் இருக்கும்போது தானம் செய்ய முடியாது. ஆனால், மூளைச் சாவு அடைந்தவர்களின் உறவினர்களிடம் பேசி இந்த உறுப்புக்கள் தானமாகப் பெறப்படுகிறது. கண் நம்முடைய மரணத்துக்குப் பிறகு தானம் செய்யப்படுகிறது. அதேபோல், உடலின் மிகப்பெரிய வெளி உறுப்பான சருமத்தைக் கூட நம்முடைய மரணத்துக்குப் பிறகு தானம் செய்ய முடியும்.

தீக்காயம் அடைந்தவர்களுக்கு உயிர் காக்கும் தோல் தானம்!

ஒருவர் இறந்து 6 மணி நேரம் வரை தோலை தானம் செய்யலாம். தானம் மூலம் பெறப்பட்டவரின் தோலைப் பதப்படுத்தி, சிறு பகுதியை ஆய்வுக்கு அனுப்புவர். அங்கு, 3 வாரத்திற்குப் பிறகு நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்படுமேயானால், பதப்படுத்தப்பட்ட தோலை தானமாகச் செய்யலாம். இவை பெரும்பாலும், தீக்காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. இத அவர்களின் உயிரைக் காக்கும். தோல் தானத்தின் மூலம் 40 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை தீக்காயம் அடைந்தவர்களைக் கூடக் காப்பாற்ற முடியும். 

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் அதிகப்படியானோர் தங்கள் தோல்களைத் தானம் செய்கின்றனர். இதனால், அங்கு 60 சதவீதம் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கூட எளிதில் காப்பாற்ற முடிகிறது. நாமும், நம்முடைய மரணத்துக்குப் பின், மண்ணுக்குள் போக்க போகிற அல்லது தீயில் எரிந்து சாம்பலாகப் போகிற சருமத்தை தானம் செய்வதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP