பட்டுப் போன்ற நீள….மான கூந்தலுக்கு – ஆரோக்கிய கூந்தல் தைலம்

பெண்கள் அதிகம் அக்கறை காட்டுவது கூந்தல் பராமரிப்புக்குத்தான். கூந்தல் வளர்ச்சி என்பது உடல் ஆரோக்யத்தையும், மன அமைதியையும் பொறுத்தே அமைகிறது என்றாலும் முறையான பராமரிப்பும் அத்தியாவசியம்தான். நிச்சயம் இதைக் கடைப்பிடித்தால் பட்டுப்போன்ற கூந்தல் நிச்சயம் கிடைக்கும்.
 | 

பட்டுப் போன்ற நீள….மான கூந்தலுக்கு – ஆரோக்கிய கூந்தல் தைலம்

பெண்கள் அதிகம்  அக்கறை காட்டுவது  கூந்தல் பராமரிப்புக்குத்தான்.  கூந்தல் வளர்ச்சி என்பது உடல் ஆரோக்யத்தையும்,  மன அமைதியையும்  பொறுத்தே அமைகிறது  என்றாலும் முறையான பராமரிப்பும் அத்தியாவசியம்தான். நிச்சயம் இதைக் கடைப்பிடித்தால் பட்டுப்போன்ற கூந்தல் நிச்சயம்  கிடைக்கும்.

தேவையான பொருள்கள்: தே.எண்ணெய் -1 லிட்டர், ஆலமரவேர் -சிறு சிறு துண்டு களாக வெட்டியது ஒரு கைப் பிடி, சோற்றுக் கற்றாழையில் இருக்கும் நுங்கு போன்ற பகுதி - சிறிய கப், மருதாணி இலை - கால் கிலோ (அல்லது) 5 பெரியகப்,மஞ்சள் கரிசலாங் கன்னி கீரை - 3 பெரிய கப், செம்பருத்தி இலை - கால் கிலோ (அல்லது) 4 பெரிய கப், கறிவேப்பிலை -கால் கிலோ (அல்லது) 5 பெரிய கப்,அரைக் கீரை -ஒரு கைப்பிடி, துளசி - 10 இலைகள், செம்பருத்திப்பூ - 2, பெரிய நெல்லிக்காய் - 10, வெந்தயம்- 5 டீஸ்பூன்.

செய்முறை:  

அனைத்து இலைகளையும் காம்பு நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். வெந்தயத்தை அப்படியே மிக்ஸி யில் இட்டு பொடிக்கவும். சோற்றுக் கற்றாழையில் உள்ள மேல் தோலை சீவி உள்ளிருக்கும் நுங்குப் பகுதியைத் தனியாக எடுத்து சிறு சிறு  துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து தே. எண்ணெய் ஊற்றி சூடேற்றவும் . மறுபுறம்  இலைகளை தனித் தனியாக மிக்ஸியில்  மைய அரைக்கவும். செம்பருத்திப்பூவை இலேசாக ஒரு சுற்று மிக்ஸியில் அரைத்தால் மைய அரைத்துவிடும். இதே போல் நெல்லிக்காயைப் பொடியாக  நறுக்கி மிக்ஸியில் மைய அரைக்கவும்.

அனைத்து கீரை, பச்சிலைகள் தளிராக இருக்க வேண்டும். செடியில் இருந்து பறித்த அன்றே உபயோகித்தால் நல்லது. தே. எண்ணெய் நன்றாகக் காய்ந்து வாசம் வரும் போது அரைத்து தனித்தனியாக வைத்துள்ள மருதாணி, செம்பருத்தி இலை, கறிவேப்பிலை, மஞ்சள் கரிசலாங்கன்னி, அரைக்கீரை, துளசி இலை, செம்பருத்திப்பூ, நெல்லிக்காய் போன்ற விழுதுகளை ஒவ்வொன்றாக சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். பிறகு வெந்தயத்தூள், துண்டு துண்டாக நறுக்கிய சோற்றுக்கற்றாழை நுங்கு, ஆலமரவேர் போன்றவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கும் வரை காய்ச்சவும். (தேவைப் பட்டால் நெல்லிக்காய் கொட்டை களைக் காயவைத்து பொடி செய்தும் சேர்க்கலாம்)

அடுத்தநாள் வரை இரும்பு வாணலியில் வைத்து, பிறகு  வெயில் படும்படி வைக்க வேண்டும். பிறகு மெல்லிய வெள்ளைத் துணியில் காய்ச்சிய எண்ணெயை வடிகட்டி ஈரமில்லாத பாட்டிலில் ஊற்றி  வைக்கவும். கால் லிட்டர் காய்ச்சிய எண்ணெயுடன் தூய்மையான தேங்காய் எண் ணெய் அரை லிட்டர் கலந்து தலைக்கு தேய்த்துவந்தால் கூந்தல் பொலிவு பெறும். உறுதியுடன் இருக்கும். இளநரை மறையும். பட்டுப்போல் மின்னும். வாரம் ஒரு முறை இந்த எண்ணெயை இலேசாக சூடுபடுத்தி தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தும் குளிக்கலாம்.
               
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP