உடலை குளிர்வித்து உஷ்ணத்தை தணிக்கும் எலுமிச்சைச்சாறு

கோடைக்கேற்ற சிறந்த பானங்களில் எலுமிச்சைச்சாறும் ஒன்று. செயற்கை நிறங்களும் ரசாயனமும் கலந்த குளிர்பானங்களை விட ஆரோக்கியம் ஊட்டும் உஷ்ணத்தைப் போக்கி குளிர்ச்சியடையச் செய்யும் எலுமிச்சைச்சாறு உடலையும் குளிர்விக்கிறது.
 | 

உடலை குளிர்வித்து உஷ்ணத்தை தணிக்கும் எலுமிச்சைச்சாறு

கொளுத்தும் கோடையில் உடல் உஷ்ணத்தைத் தவிர்க்கும்  அமுதகனி அதிசயக்கனி தெய்வக்கனி என்று அழைக்கப்படும் எலுமிச்சைப் பழமும் ஒன்று. உயர்ந்த பழங்கள் மட்டுமே சத்துக்களைக் கொடுக்கும் என்பதற்கு நேரெதிரான சத்துக்களைக் கொண்டிருக்கும் எலுமிச்சைப் பழத்தின் சத்துக்களை  அளவிட முடியாது.

எலுமிச்சையில் உள்ள சத்துக்கள்:
       

எலுமிச்சையில் அதிக அளவில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி,டி ஆகியவை நிறைந்துள்ளன. அதோடு கால்சியமும் மக்னீசியமும் நிறைந் திருக்கிறது. உடலுக்கும், சருமப்பராமரிப்புக்கும் பெரிதும் உதவுகிறது எலுமிச்சைப்பழம். 

எலுமிச்சையானது சிட்ரஸ் பழம். பொதுவாக சிட்ரிக் அமிலத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நம்முடைய உடலில் உள்ள நச்சு செல்களிலிருந்து நம்முடைய உடலைப் பாதுகாக்கிறது.

எப்படி பயன்படுத்தலாம்:
     

கோடையில் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய  மிக முக்கிய சாறு இது. கோடையில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால்  நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.

 ஐந்து எலுமிச்சைப்பழத்தில் பிழியப்பட்ட சாறில் அரை டீஸ்பூன் உப்புதூள் சேர்த்து, 2 தேக்கரண்டி சர்க்கரை பாகு சேர்த்து அருந்தலாம். வெளியே செல்லும் போது தண்ணீருக்குப் பதிலாக எலுமிச்சைச்சாறு கலந்து எடுத்து செல்லலாம். உடலுக்கான ஆற்றல் குறையாமல் காப்பதில் எலுமிச்சைக்கு நிகர் எலுமிச்சைதான்.  
 

சுத்தம் செய்த புதினா இலைகள் -10, கொத்துமல்லித்தழை – சிறிதளவு, கறிவேப்பிலை – 1 ஆர்க்  எடுத்து மிக்ஸியில் மைய அரைத்து  ஒரு தம்ளர் எலுமிச்சைச்சாறு சேர்த்த நீரில் கலந்து, சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் கோடை வெயிலுக்கு இதமாக இருக்கும்.  நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களும்  இந்த சாறை அருந்தலாம். ஏனெனில் உடலில் இருக்கும் நோய்த்தொற்றை அழிப்பதில் எலுமிச்சைச் சாறு வேகமாக செயல்படுகிறது. 
     

கோடைக்கேற்ற சிறந்த பானங்களில் எலுமிச்சைச்சாறும் ஒன்று. செயற்கை நிறங்களும் ரசாயனமும் கலந்த குளிர்பானங்களை விட ஆரோக்கியம் ஊட்டும் உஷ்ணத்தைப் போக்கி குளிர்ச்சியடையச் செய்யும் எலுமிச்சைச்சாறு உடலையும் குளிர்விக்கிறது. உஷ்ணத்தையும் தணிக்கிறது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP