கதம்ப சாம்பாரோடு  மாம்பச்சடியும் வையுங்கள்..!

அடிமட்ட குடும்பங்கள் முதல் செல்வத்தில் திளைக்கும் அதிபதிகள் வரை அனைவரது வீடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இப்பொருள் இல்லாமல் தமிழ்புத்தாண்டு முழுமையடையாது.. அதுதான் மாம்பச்சடி..
 | 

கதம்ப சாம்பாரோடு  மாம்பச்சடியும் வையுங்கள்..!

பலகாரங்கள் இல்லாமல் பண்டிகைகள் இனிப்பதில்லை என்று முன்னோர்கள் சொல்வார்கள். தமிழ்புத்தாண்டில்  இல்லையென்று சொல்லாமல் ஒரு குறிப்பிட்ட   பொருள் நிச்சயமாக உணவில் இடம்பெற்றிருக்கும். வெறும் சுவைக்கா கவோ..  சம்பிரதாயத்துக்காகவோ மட்டும் இதைச் செய்வதில்லை.  அடிமட்ட குடும்பங்கள் முதல்  செல்வத்தில் திளைக்கும் அதிபதிகள் வரை அனைவரது வீடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இப்பொருள் இல்லாமல் தமிழ்புத்தாண்டு முழுமையடையாது.. அதுதான் மாம்பச்சடி..

எதற்கு இதற்கு போய் அவ்வளவு முக்கியத்துவம் என்று  கேட்கலாம். வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை இயல்பாகவே கடந்துசெல்லும் உண் மையை உணர்த்தவும் உணர்ந்து கொள்ளவுமே இந்த மாம்பச்சடி செய்யப் படுகிறது..  உணவுகளில் அறுசுவை உள்ளது போலவே வாழ்க்கையிலும் இன்பம், துன்பம், வறுமை, பிணி, தடை இப்படி பல இன்னல்களும் நன்மைகளும் கடக்க வேண்டியிருக்கிறது. இவை எல்லாம்  மனித வாழ்க்கையில் பொதுவானவை என்ற முன்னோர்கள்  ஒவ்வொரு தமிழ்புத்தாண்டு அன்றும் இந்த  வருடமும்  அனைத்தையும் பக்குவமாக கடக்கவேண்டும் என்பதை உணர்த்தவே அறு சுவைகள் கலந்த மாம்பச்சடி செய்தார்கள்... 

அறுசுவையில் புளிப்புக்கு மாங்காயும், கசப்புக்கு வேப்பம்பூவையும்,  இனிப்புக்கு வெல்லமும், உவர்ப்புக்கு உப்பையும், கார்ப்புக்கு மிளகாயும் சேர்க்கும் மாம்பச்சடியில் என்னுடைய பாட்டி துவர்ப்பில்லையே என்று  பூண்டு அளவுக்கு வாழைக்காயைச் சேர்த்துவிடுவார். 

குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் மாம்பச்சடியை எப்படிச் செய்வது பார்க்கலாமா? எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும் பகிரும்போதே மனதுக்குள் மகிழ்ச்சியும் உண்டாகும்.. 

தேவை:  வெல்லம் -  3 தேக்கரண்டி, புளிப்பு குறைந்த மாங்காய்  -1,  வேப்பம் பூ  -  அரை டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் -2,  மஞ்சள் தூள் - சிட்டிகை, உப்பு - தேவைக்கு.. 
தாளிக்க:  கடுகு -1 டீஸ்பூன், வரமிளகாய் -1, எண்ணெய் - தேவைக்கு... 

செய்முறை:
மாங்காயைத் தோல்நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி  அகன்ற சட்டியில் சேர்த்து வேகவிடவும். பாதி பதத்துக்கு வெந்ததும் மஞ்சள் தூள்,  வெல்லம், பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி சேர்த்து  வேகவிடவும்... நன்றாக வெந்ததும் வேப் பம் பூவை சேர்த்து இறக்கவும்..  உப்பு தூவி மத்தால் நன்றாக மசித்து தாளிப்பு கரண்டியில் கடுகு வரமிளகாய் கிள்ளி தாளித்து கொட்டவும்.. 

மாம்பச்சடியில் அறுசுவைகள் இருந்தாலும் பிரதானமான இனிப்புச் சுவை மிகுந்திருக்கும். அதுபோல் வாழ்க்கையில் எவ்வித துன்பங்கள் வந்தாலும் கிடைக்கும் இனிப்பில் அனைத்தையும் கடக்கலாம்..  தலைவாழை இலையில் வடை பாயசம் மணக்கும் கதம்ப சாம்பாரோடு  மாம்பச்சடியும் சேர்த்து   உண்ணுங்கள்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP