நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் இவ்வளவு கலப்படங்களா?

நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் இவ்வளவு கலப்படங்களா?
 | 

நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் இவ்வளவு கலப்படங்களா?

நம் வாழ்வில் உணவு என்பது அத்தியாவசிய ஒன்று. அப்படி நாம் உண்ணும் உணவு, இயற்கையானதா? அரோக்கியமானதா? என்று யாராவது கேட்டால், நமக்கு பதில் சொல்ல தெரியாது... ஏனெனில் உணவில் கலப்படம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அப்படி கலப்படம் செய்யப்பட்ட உணவை கண்டறிவது எப்படி என்பதனை பார்ப்போம்.

தேன்: தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள். பஞ்சை தேனில் நனைத்து நெருப்பில் காட்டும் போது, பஞ்சு எரிந்தால் அது நல்ல தேன். எரியும் போது சடசடவென சத்தம் வந்தால் அது கலப்பட தேன் நல்ல தேனை தண்ணீரில் விட்டால் அடி வரை சென்று தங்கும். அப்படியில்லாமல் நீரில் கரைந்தால் அது சர்க்கரை பாகு அல்லது வெல்ல பாகு.

ரவை: ரவையில் இரும்பு தூள் கலக்கிறார்கள். ரவையின் அருகே காந்தத்தை காட்டினால் இரும்புத் தூள் ஒட்டிக்கொள்ளும்.

கடுகு: சமையலறையில் இருக்க கூடிய அத்தியாவசிய பொருட்களில் ஒன்று கடுகு. இதில், கசகசா வகையை சேர்ந்த 'அர்ஜிமோன்' விதைகள் கலக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் இதை கண்டுபிடிப்பது சற்று கடினம். தரமான கடுகை உள்ளங்கையில் வைத்து அழுத்தினால், உட்புறம் மஞ்சளாக இருக்கும். போலியான கடுகு எனில் உட்புறம் வெள்ளையாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணையில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தரமான எண்ணெய் என்றால் பிரிட்ஜில் வைத்தால் உறைந்து விடும்.

உப்பு: உருளை கிழங்கை இரண்டாக வெட்டி அதன் மேல் உப்பை தடவவும். ஒரு நிமிடம் கழித்து அதன் மேல் எலுமிச்சை சாரை விடவும். உப்பு சுத்தமான அயோடின் என்றால், உருளை கிழங்கு நீல நிறமாக மாறும்.

பால்: பால் கெட்டு போகாமல் இருக்க காஸ்டிக் சோடா,யூரியா, டிடர்ஜெண்ட் போன்றவை கலக்கப்படுகின்றன. டிடர்ஜெண்ட் கலந்த பால் என்றால், பாலையும், தண்ணீரையும் சமமாக கலக்கும் போது நுரை வரும்.

மிளகு: பப்பாளி விதைகளை காய வைத்தால், மிளகு போல் இருக்கும். அதனை மிளகில் சேர்த்து விற்கின்றனர். கைப் பிடி மிளகை ஒரு டம்ளர் நீரில் போட்டால், சுத்தமான மிளகு தண்ணீரில் மூழ்கி அடியில் தங்கிவிடும். பப்பாளி விதைகள், நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.

நெய்: நெய்யில் டால்டா(வனஸ்பதி) மற்றும் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை கலக்கின்றனர். 10 மி.லி ஹைட்ரொ குளோரிக் அமிலத்துடன் 10 மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக் கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக கலக்கவும், வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறிவிடும்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP