இரவில்  தலை முடியை அலசுவது நல்லதா?  

காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் அல்லது சோம்பேறித்தனம் காரணமாக இரவில் தலைக்கு குளித்து விட்டு காய வைக்காமல் தூங்கி விடுவார்.
 | 

இரவில்  தலை முடியை அலசுவது நல்லதா?  

வேலைப்பளு நிறைந்த இந்த கால  கட்டத்தில் தலை முடியை அலசி காய வைப்பதற்கு கூட பலருக்கு நேரம் இருப்பதில்லை. காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் அல்லது சோம்பேறித்தனம் காரணமாக, இரவில் தலைக்கு குளித்து விட்டு காய வைக்காமல் தூங்கி விடுவர். அவ்வாறு தூங்குவதால் பல முடிப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்...

முடி உடையும் ஆபத்து!

இரவில் தலைமுடியைக் கழுவினால், ஈரமான கூந்தலுடன் தூங்கச் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை தொடர்ந்து  செய்வது  நோய் தொற்றுக்கு ஆளக்குவதுடன்.  தலைமுடி வழக்கத்தை விட சிக்கலாகவும் தோன்றும். அதோடு  முடி  உதிர்வதற்கு வழி வகுக்கும்.
பொடுகு உண்டாகும் ஆபத்தும் உள்ளது. 

இரவில்  தலை முடியை அலசுவது நல்லதா?  

ஈரப்பதத்துடன் இருக்கும் முடியில் தான் அதிக பொடுகு, பூஞ்சை வளர்வதற்கான ஆபத்து அதிகம் எனவே இரவில் ஈரமாக  இருக்கும் முடியுடன் தூங்க செல்வதனால் பொடுகு உண்டாகி முடி உதிரும் ஆபத்துகள் அதிகம். முடியின் வேர்க்கால்கள் பலவீனமடைந்து முடியின்  நுனிகள் வரை பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் . அதோடு பொலிவை இழந்து முடி வறட்சியை சந்திக்கும் ஆபத்தும் அதிகம்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP