கர்ப்பிணிகளை குறி வைக்கும் நோய்த் தொற்றுகள்!

கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதனால் மற்ற தொற்றுக்களைவிட சிறுநீர்தொற்று மற்றும் உணவு வழியாக பரவும் தொற்றுக்கள் கர்ப்பிணிகளுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியவை...
 | 

கர்ப்பிணிகளை குறி வைக்கும் நோய்த் தொற்றுகள்!

கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.  இதனால், கர்ப்பிணிப் பெண்கள் விரைவில் நோய்தொற்றுக்கு ஆளாக நேரிடும். தாயை பாதிக்கும் சிறிய தொற்றுக்கூட வயிற்றில் வளரும் பிள்ளையின் வளர்ச்சியில் குறுக்கீடு செய்யலாம். எனவே, நோய் தொற்றுக்கள் வராத வண்ணம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மற்ற தொற்றுக்களைவிட சிறுநீர்தொற்று மற்றும் உணவு வழியாக பரவும் தொற்றுக்கள் கர்ப்பிணிகளுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியவை...

சிறுநீர்வழித் தொற்று:

கர்ப்பிணி பெண்களை அதிக அளவில் பாதிக்கக்கூடியது சிறுநீர் தொற்றாகும்.  கர்ப்பம் தரித்த காலத்தில், உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும்  கருப்பை பெரிதாவதனால், சிறுநீர்ப்பையில் ஏற்படும் அழுத்தம் போன்ற காரணங்களால், சிறுநீர் முழுமையாக வெளியேறாமல் சிறுநீர் பையில் தங்குவதால் இந்த தொற்று ஏற்படுகிறது.

இந்த தொற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால், தொற்றானது சிறுநீரகத்திற்கு பரவி மிக பெரிய ஆபத்துக்களை விளைவிக்க கூடும்.  

கர்ப்பிணிகளை குறி வைக்கும் நோய்த் தொற்றுகள்!

கர்ப்பம் தரித்த பெண்கள், அதிக நீர் அருந்துவது, சிறுநீரை அடக்கி வைக்காமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை அவ்வப்போது சுத்தம் செய்வது போன்ற செயல்முறைகளால், சிறுநீர் வழிதொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள  முடியும். மேலும் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை சந்தித்தால், கட்டாயம்  மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.


உணவு மூலம் ஏற்படக்கூடிய தொற்றுக்கள்:

அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடிய ”இன்ஃபுளுவென்சா” வகையை சேர்ந்த  பாக்டீரியாக்கள்,  உணவு மூலம்  பரவக் கூடியவை . இந்த பாக்டீரியாக்கள் சுத்திகரிக்கப்படாத பால், பாலாடை கட்டிகள், விலங்குகளின் கழிவுகளுடன் இருக்கும் மண் போன்றவற்றில்க அளவில் வளர்வதாக சொல்லப்படுகிறது.

இதே போல சரிவர சமைக்காத இறைச்சிகள் , முட்டை, பதனிப்படாத பால் போன்றவற்றில் இருக்கும் சல்மனல்லா என்னும் பாக்டீரியாவும் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக இருக்கிறது.

உணவு மூலம் பரவும் பாக்டீரியாக்களால், கருச்சிதைவு, குழந்தை உயிர் இழந்த நிலையில் பிறப்பது அல்லது பிறக்கும் குழந்தை தீவிரமான உடல்நலக் குறைவுடன் இருத்தல் போன்ற அபாயங்கள் நிகழும் சாத்திய கூறுகள் அதிக அளவில் உள்ளன.

இந்த பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டிருந்தால், கர்ப்பம் தரித்த பெண்ணிற்கு கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றும்.

கர்ப்பிணிகளை குறி வைக்கும் நோய்த் தொற்றுகள்!

இந்த தொற்றுக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைக்கழுவுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், நன்கு சமைக்கப்படட அசைவ உணவுகளை உட்கொள்தல் போன்ற சுகதார செயல்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அதோடு இந்த தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP