கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

தம்பதிகளிடையே சண்டை வந்தால் மாரடைப்பு வரும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
 | 

கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

தம்பதிகளிடையே சண்டை வந்தால் மாரடைப்பு வரும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் திடீரென நிகழ்ந்த மாரடைப்பு மரணங்கள் 30%, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தவர்கள் 15%, சிகிச்சை அளித்தும் காப்பாற்ற இயலாமல் உயிரிழந்தவர்கள் 12% என்று ஆய்வில் ஒன்றில் தெரிய வந்துள்ளது.

கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

மாரடைப்பின் அறிகுறிகள்:

இதயத்தில் திடீர் அழுத்தம், இடதுபக்க தோள்பட்டையில் தொடர்வலி இருந்தால் மாரடைப்பின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். இதேபோன்று தாடை, கழுத்து பகுதியில் இழுத்து பிடிப்பது, அசாதாரண நிலையில் குளிர்சாதன அறையில்கூட வியர்த்துக் கொட்டினால் மாரடைப்பின் அறிகுறிகளாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

தவிர்க்க வேண்டிய உணவுகள்: 

மாரடைப்பு ஏற்படாமல் இருக்க எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவு பொருட்கள், மட்டன் குழம்பு, மட்டன் பிரியாணி, பாஸ்ட் புட், கொழுப்பு சத்து மிகுதியான உணவு பொருட்கள். கேக் கிரீம் வகைகள், முந்திரி நிலக்கடலை உணவுகள், சோடா குளிர்பானங்கள், உப்பு தன்மை அதிகம் உள்ள நொறுக்கு தீனிகள், சீஸ், பட்டர், சாஸ், பன்னீர் வகைகள் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். புகையையும், மதுவையும் கைவிட்டு உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

மாரடைப்புக்கு குடும்ப சண்டையும் காரணம்:

குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களிடையே மன்னிக்கும் தன்மை இல்லாமை, கணவன், மனைவிக்கிடையே ஏற்படும் சண்டையால் மனசோர்வும், மன அழுத்தமும் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு தாங்கள் செய்த காரியம் தோல்வியில் முடிந்துவிட்டால் ஏற்படும் மன சோர்வு, அலைச்சல், வியாபாரத்தில் உண்டாகும் நஷ்டத்தால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மன அழுத்தத்தால் அவதியுறுதல் ஆகியவற்றால் கூட மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

தற்காத்துக் கொள்ள என்ன வழி?

மன சோர்வு, மன அழுத்தத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள தினமும் காலையில் எளிய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். யோகாசனம், தியானம், நடைபயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவது பயன் தரும். 40 வயதுக்கு மேற்பட்ட தம்பதியினர் மன அழுத்தத்தை தவிர்க்க வாரம் ஒருமுறையாவது மனம்விட்டு சிரித்து பேச வேண்டும். 20 வயது 30 வயது உள்ளவர்கள் தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நன்கு உறங்க வேண்டும். அமைதியான மனம், சீரான சிந்தனையுடன் இருந்தால் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP