உணவு கட்டுப்பாடின்றி உடல் எடையை குறைக்கலாம் எப்படி?

வருடத்திற்கு, நான்கு முறை,ஒவ்வொறு முறையும், 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதினால், வருடத்திற்கு 8 லிருந்து 10 கிலோ வரை உடல் எடை குறைகிறதாம், அதிலும் நடைப்பயிற்சி செய்வதினால், உணவு கட்டுப்பாடின்றி உடல் பருமனை குறைக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்
 | 

உணவு கட்டுப்பாடின்றி உடல் எடையை குறைக்கலாம் எப்படி?

 நடைப்பயிற்சி என்றாலே உடலுக்கு நலன் பயக்க கூடியதுதான், அதிலும், அதிகாலை மெற்கொள்ளக்கூடிய நடைப்பயிற்சியினால், உடலுக்கு புத்துணர்வு கிடைப்பதுடன், உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து தப்பித்து கொள்ள முடியும் என சொல்கின்றனர், ஆய்வாளர்கள். 

பெரும்பாலும் உடலில் பிரச்சனை ஏற்பட்ட பின்னரே, மருத்துவரின் ஆலோசனைப்படியே நம்மில் பலர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறோம்.  'கண்கெட்ட பின்னர் சூர்ய நமஸ்காரம்' என்பது போல, நீரிழிவு, உடல் பருமன், இதயத்தில் ஏற்படும் கோளாருகள் போன்ற பிரச்சனைகளை சந்தித்த பின் நடைப்பயிற்சி மேற்கொள்வதை காட்டிலும், வரும் முன் காப்பதே சிறந்தது. ஆக முடிந்தவரை அதிகாலை நடைப்பயிற்சியை அனைத்து வயதினரும் மேற்கொள்ள வேண்டும். சரி இந்த நடைப்பயிற்சி மேற்கொள்வதால்,  நம் உடலுக்கு என்னென்ன‌ பயன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்..

உணவு கட்டுப்பாடின்றி உடல் எடையை குறைக்கலாம் எப்படி?

அதிகாலை அதாவது, 4.30லிருந்து 6 மணிவரை நடைப்பயிற்சி மேற்கொள்வதால், உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்ஸிசன் கிடைக்கிறது, இதனால் நாள் முழுவதும் புத்துணர்வுடன் செயல்பட இயலும்.

 மெதுவாக நடந்தால் கூட கால் மூட்டு வலிக்கிறது, என சொல்பவர்களுக்கு சிறந்த பயிற்சியே, நடைப்பயிற்சி தான், தினமும் அதிகாலை நடைப்பயிற்சி செய்து வந்தால் உங்களின் மூட்டு பிரச்னை காணாமல் போய்விடும்.

 அதிகாலை நடைப்பயிற்சி, இதய வால்வுகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்து, மரடைப்பு ஏற்படுத்தும் அபாயத்தை குறைக்கிறது என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மேலும் இந்த நடைப்பயிற்சி இதயம் செயலிழப்பிற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.

உணவு கட்டுப்பாடின்றி உடல் எடையை குறைக்கலாம் எப்படி?

நடைப்பயிற்சி செய்வதனால் நுரையிரல் பலப்படுவதுடன்,  இதய  ஓட்டமும் சீராக நடை பெறுகிறது. அதோடு,தினமும் செய்யும் நடைப்பயிற்சியினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த வித நோய்களையும் நம் உடலில் அண்ட விடாது.
  
உயர் ரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் போன்ற, இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய பெரும் பிரச்னைகளை சரிசெய்வதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது அதிகாலை நடிப்பயிற்சி.

 தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வதனால், உடலில் நல்ல கொழுப்பு அதிகரித்து, மாரடைப்பு வரும் வாய்ப்பு  குறைகிறதாம். 

இன்றைய சூலலில், வேலை பலுவின் காரணமாக அனேகமானோர் மன அழுத்திற்கு ஆளாகி பலதரப்பட்ட உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரே தீர்வு அதிகாலை நடைப்பயிற்சி என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு கட்டுப்பாடின்றி உடல் எடையை குறைக்கலாம் எப்படி?

ஒரே இடத்தில் அமர்ந்து பல மணி நேரம் வேலை பார்ப்பவர்கள், வெகு நேரம் வாகன பயண‌ம் மேற்கொள்பவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர், அதிகமாக சந்திக்கும் ஒரே பிரச்னை முதுகு வலி, இத்தகைய வலியினை, போக்க அதிகாலை நடைப்பயிற்சி நல்ல தீர்வாக இருக்கும்.  தினமும் நடைப்பயற்சி  மேற்கொள்வதினால், முதுகு தண்டுவடம் பலப்படுவதுடன், தசை நார்களும் நல்ல உறுதி தன்மையை பெறுகிறது. இதனால் முதுகு வலி என்கிற பிரச்னையே நமை நெருங்காது.

உணவு கட்டுப்பாடின்றி உடல் எடையை குறைக்கலாம் எப்படி?

வருட‌த்திற்கு, நான்கு முறை,ஒவ்வொறு முறையும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதினால், வருடத்திற்கு 8லிருந்து 10 கிலோ வரை உடல் எடை குறைகிறதாம், அதிலும் நடைப்பயிற்சி செய்வதினால், உணவு கட்டுப்பாடின்றி  உடல் பருமனை குறைக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP