பக்கவிளைவுகளில் இல்லாமல் நீரழிவு நோயை எதிர்கொள்வது எப்படி?

பக்கவிளைவுகளில் இல்லாமல் நீரழிவு நோயை எதிர்கொள்வது எப்படி?
 | 

பக்கவிளைவுகளில் இல்லாமல் நீரழிவு நோயை எதிர்கொள்வது எப்படி?

இரத்தத்தில் சர்க்கரையின்  அதிகரிப்பை கொடுக்கக்கூடிய வளர்ச்சிதை மாற்றத்தைத் தான் நீரழிவு என்கிறோம். நமது உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின்  இரத்தத்தில்  அதிக அளவு  சர்க்கரை  இருக்கும்.  

மனித  உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான  சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலைமைகளும் ஏற்படலாம்.

 பக்கவிளைவுகளில் இல்லாமல் நீரழிவு நோயை எதிர்கொள்வது எப்படி?

கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக  இருதய நோய்,  பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண்கள், கண் நோய் போன்றவை ஏற்படலாம். உயர்   நாடிகளின் சுவர்களில்  கொழுப்பு  படலமாக படிந்து நாளடைவில் அடைபடுதல், தசைகளுக்கு  குருதி  வழங்கும்  நாடிகளில்  ஏற்படும் நோய் போன்றவைகளின் ஆபத்து அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிகளவு சர்க்கரை இருப்பதால், அடிக்கடி  சிறுநீர்  கழித்தல், அளவுக்கு அதிமாக தாகமெடுத்தல், அளப்பரிய  பசி   ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.

முதலாவது வகை நீரிழி:
குழந்தைகள், சிறுவர்  சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது.  இவர்களுக்கு இன்சுலின் கொண்டு தான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள், இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

இரண்டாவது வகை:
இன்சுலின்  சாராத  நீரிழிவு அல்லது முதுமை  தொடக்க நீரிழிவு  ஏற்படுவதை இரண்டாவது வகையாக பிரிக்கிறோம். இன்சுலின் எதிர்ப்பு, ஒப்பீட்டளவில் இன்சுலின் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக நம்  இரத்ததில் சர்க்கரை  அளவுகளை அதிகப்படுத்தும். அடிக்கடி  சிறுநீர் கழித்தல், அதிகமாக  தாகமெடுத்தல், அளப்பரிய பசி ஆகியவை இந்நோயின் மரபார்ந்த அறிகுறிகள். மொத்த நீரிழிவு நோயாளிகளில் இரண்டாம் வகை நீரிழிவு உள்ளவர்கள் தொண்ணூறு சதவிகிதமும், மற்ற பத்து சதவிகிதத்தினர் முதலாம் வகை நீரிழிவு,  கர்ப்பகால நீரிழிவு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். 

பக்கவிளைவுகளில் இல்லாமல் நீரழிவு நோயை எதிர்கொள்வது எப்படி?

இந்நோய் உருவாவதற்கு,   மரபு வழி, வாழ்க்கை முறை, உடல் பருமன், தேவையான உடலுழைப்பு இல்லாதது, முறையற்ற உணவு முறை போன்றவைகள் காரணங்களாக இருக்கின்றன. உணவு முறையும், உடல் பருமனும் தனிப்பட்டவரின் கட்டுபாட்டிற்குள் இருந்தாலும் வயது, பாலினம், மரபியல் ஆகியவை ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதது.  கரு வளரும் போது உள்ள  ஊட்டச்சத்து  நிலைமை  ஆகியவை இரண்டாம் வகை நீரிழிவுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

நீரழிவு வராமல் தடுப்பது எப்படி?
சரியான சத்துணவு, சீரான  உடற்பயிற்சி மூலம் இரண்டாம் வகை நீரிழிவு ஆரம்பிப்பதைத் தடுக்கவோ அல்லது காலதாமதம் செய்யவோ முடியும். தீவிர வாழும் முறை மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் இந்நோய் வருவதற்கான சாத்தியங்களை பாதிக்கும் மேல் குறைக்க முடியும். ஒருவரின் முதலில் உள்ள எடை அல்லது பின்வரும் எடைக் குறைவைக் கணக்கிடாமலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும்.   பச்சை காய்கறிகள்  அதிகளவு உள்ள உணவிற்கும் , இனிப்பூட்டப்பட்ட குளிர்பானங்களை பருகுவதைக் குறைப்பதனால் விளையும் நன்மைகளுக்கும் சில ஆதாரங்கள் உள்ளன. குறையுடைய குளுக்கோசு சகிப்புத்தன்மை உள்ளவர்களில், உணவு முறை மாற்றங்கள், உடற்பயிற்சி ஆகியன நீரிழிவு உருவாவதிற்கான இடரினைக் குறைக்கலாம்.

ஆங்கில மருந்துகள் உடனே குளுகோசின் அளவைக் குறைத்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் அதிகம். இயற்கையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மிகவும் சிறந்தது. ஆனால் வாழும் முறை மாற்றங்கள் அதிக பயனுள்ளதாகும்.

டாக்டர். வி ராமசுந்தரம்
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP