முன்கூட்டியே பூப்பெய்துவதை எவ்வாறு தடுக்க முடியும்?

தாய்ப்பலை உரிய காலம் வரை முறையாக பெறும் குழந்தைகள் விரைவில் பூப்பெய்துவதில்லை என ஆய்வு சொல்கிறது. எனவே குழந்தை பெறுவதற்கு முன்னர் கட்டாயம் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
 | 

முன்கூட்டியே பூப்பெய்துவதை எவ்வாறு தடுக்க முடியும்?

இதுவரை முன் கூட்டியே பூப்பெய்துதல் என்றால் என்ன இதனால் பெண் பிள்ளைகள் ச்ந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், எதனால் முன்கூட்டியே பூபெய்த்தல் நிகழ்கிறது, அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை பார்த்தோம். இப்பொழுது எவ்வாறு குழந்தைகளை  முன்கூட்டியே பூப்பெய்தும் அபாயத்திலிருந்து காப்பாற்ற இயலும் என்பதை பார்க்கலாம்.

நமது வாழ்க்கையை முறையாக அமைத்துக்கொண்டாலே பல உபாதைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள இயலும். முறையான வாழ்கை முறை என்பது உண்மையில் நமது பெற்றோர்கள், அவர்களின் பெற்ரோர்கள் வாழ்ந்த முறையையே குறிப்பிடுகிறது.  வேலைப்பளு அதிகமுள்ள இந்த காலத்தில்  முழுவதுமாக பின் பற்றாவிட்டாலும் ஒரு அளவிற்காவது தொடர வேண்டும்.  அன்றைய பெண்கள் பொருளாதரத்தையும் கவனித்தனர், அதேசமயம் குடும்பத்தையும் கவனித்தனர். இதனால் அவர்களின் உடலும் மனமும் பலமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்தது.

ஆனால் தற்போது எதற்கெடுத்தாலும் மெசினை நோக்கி ஓடும் எந்திரத்தனமான வாழ்க்கையாக நாமே வாழ்கை ஓட்டத்தை மாற்றிக்கொண்டு பெரும்பாலன நேரங்களில் மருத்துவமனையே கெதி என இருக்கிறோம்..  வாழ்க்கை முறையை அரோக்கியமாக அமைத்துக்கொள்வதன் மூலம், நம் பிள்ளைகளை சரியான வளர்ச்சி பாதைக்கு நம்மால் அழைத்து செல்ல முடியும். இதற்கான சில டிப்ஸ்....

முன்கூட்டியே பூப்பெய்துவதை எவ்வாறு தடுக்க முடியும்?

தாய்ப்பலை உரிய காலம் வரை முறையாக பெறும் குழந்தைகள் விரைவில் பூப்பெய்துவதில்லை என ஆய்வு சொல்கிறது. எனவே குழந்தை பெறுவதற்கு முன்னர் கட்டாயம் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இறைச்சிகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை முடிந்தவரை நிறுத்திக்கொள்ள வேண்டும். சிரமம் பார்க்காமல் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

வீட்டில் சமைக்கும் உணவுகளில் ரசாயனம் கலப்பில்லாத பொருட்களையே பயன்படுத்த வேண்டும். இதை உறுதி செய்த பின்னரே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

முடிந்தவரை ஃப்ரஸ்ஸாக கிடைக்கும் உணவுகளையே சமைத்து சாப்பிட வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாத உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது.

முன்கூட்டியே பூப்பெய்துவதை எவ்வாறு தடுக்க முடியும்?

சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கும் பொழுது அல்லது சூடான உணவுகளை சேகரித்து வைக்கும் போதோ கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இதனால் பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனம் உணவில் கலப்பதை தடுக்க முடியும். 

கட்டாயம் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு பண்டங்களை உட் கொள்ளவே கூடாது. 

இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களையே பயன்படுத்த வேண்டும். உதாரணமாக செயற்கையான நகப்பூச்சுக்கு பதிலாக மருதாணியை அரைத்து பயன்படுத்தலாம்.

முன்கூட்டியே பூப்பெய்துவதை எவ்வாறு தடுக்க முடியும்?

எந்த வித வாசனை திரவத்தையும் பயன்படுத்த வேண்டாம். அதேபோல துணிகளுக்கு வாசனையை கொடுக்க கூடிய பொருட்களிலும் ரசாயணக்கலப்பு அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் துணிகளில் இந்தவித வாசனை மிக்க பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்.

முன்கூட்டியே பூப்பெய்துவதை எவ்வாறு தடுக்க முடியும்?

தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது வெயிலில் குழந்தைகளை விளையாட விட வேண்டும். இதனால் விட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் முன்கூட்டியே பூப்பெய்தல் போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுவதுடன், குழந்தைகள் உடல் பருமன் அடைவதையும் தவிர்க்க முடியும்.

இறைச்சி உணவுகளுக்கு பதிலாக சத்துள்ள சைவ உணவுகளை குழந்தைகளுக்கு பழக்குவது சாலச்சிறந்த செயலாக இருக்கும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP