குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தேன்?

தேனில்அதிகமாக இருக்கும் பொட்டாலிஸம் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தசைப்பிடிப்பு, பசியின்மை, குழந்தை சுவாசிப்பதில் கடினம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
 | 

குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தேன்?

தேன் உணவு முதல் மருத்துவம் வரை பயன்படக்கூடியது.  கிட்டத்தட்ட 300 வகையான தேன்கள் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. இதன் பயன்கள் குறித்து  அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிக தேன் உடல் உபாதைகளுக்கு வழிவகுப்பதுடன் உயிருக்கே ஆபத்தை உண்டாக்குமாம்.. தேன் விளைவிக்கும் தீமைகளைப் பற்றி பார்க்களாம்..

தேனை மிக சூடான நீர், சூடன பால், அசைவ உணவு, முள்ளங்கி, ஆகிவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் தேனின் தன்மை திரிந்து விஷமாக மாறுவிடும்.
  
இதய நோயை உண்டாக்கும் தேன் :

நேரடியாக பெறக்கூடிய தேனில் ரோடோடென்ரான் எனப்படும் பசுமை மாற பூக்களின் மகரந்த துகள்கள் இருக்கலாம். இவை இதய நோய்க்கு வழிவகை செய்துவிடும். மேலும் நெஞ்சு வலி, ரத்த அழுத்தம் குறைதல் இதய அடைப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தேன்?

குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தேன் :

பிறந்த குழந்தைக்கு தேன் வைக்கும் பழக்கம் நம் சமூகத்தில் அதிகமாக பின்பற்றப்படுகிறது.  அவ்வாறு 12 மாதங்களுக்கு  குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு தேன் கொடுத்தால், தேனில் அதிகமாக இருக்கும் பொட்டாலிஸம் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் கடுமையான காய்ச்சல்,  வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தசைப்பிடிப்பு, பசியின்மை, குழந்தை சுவாசிப்பதில் கடினம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

வயிற்றில் அசௌகரியம்:

தேனில் இருக்கும் பிரக்டோஸ்  சிறுகுடலின் சத்துக்களை உறுஞ்சும் தன்மையை பாதிக்கும்.  மேலும் இரைப்பை கோளாறுகள், வயிற்றுப்போக்கு குடல் அலர்ஜி, வாயு  கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை கொடுக்கும்.

குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தேன்?

ஒவ்வாமையை ஏற்படுத்தும்:

மூலத்தேனில் சில மகரந்த துகள்கள் சேர்ந்திருக்கும் அத்தகைய தேனை, சுவாச அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிட்டால் நுரையீரல் வீக்கம், அரிப்பு, உடலில் தடிப்பு, படை நோய், இருமல், ஆஸ்துமா போன்றவை ஏற்படும்.

நரம்புமண்டலத்தை பாதிக்கும்.

சுத்தம் செய்யப்படாத தேனால் நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.  இது நரம்பு மண்டலத்தை தாக்கி நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும்.

 உடல் பருமனை அதிகரிக்கும்.

தேனில் சர்க்கரையைவிட அதிக கலோரிகள் உள்ளன.  அதாவது ஒரு டீஸ்பூன் தேனில் 64 கலோரிகள் இருக்கிறது.  இந்த அளவு  ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் உள்ள கலோரிகளை காட்டிலும் அதிகம்.  உடல் எடையை குறைப்பதற்காக அதிகப்படியான தேனை வெறுமனே எடுத்துக்கொண்டால், அதிலிருக்கும் அதிகப்படியான கலோரியால் உடல் பருமனை அதிகரிக்கும்.

நீரிழிவு நோய்க்கான அபாயம்

தேனில் இயற்கை சர்க்கரை, குளுக்கோஸ் அதிக அளவு உள்ளதால் சர்க்கரை நோய் எனப்படும் ரத்த சர்க்கரை அளவு கூடுதல் பிரச்னையை உண்டாக்கும் அபாயம் அதிகம்.

குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தேன்?

மருந்திற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும்.

தொடர் மருந்து எடுத்துகொள்ளும் நபர்கள் தேனை சாப்பிட்டால் அவர்கள் உட்கொள்ளும் மருந்தின் நன்மைகளை பெற முடியாது. 

பல்லிற்கான ஆபத்து

தேனில் இருக்கும் அதிகப்படியான பழச்சர்க்கரை எனப்படும் ஃபிரக்டோஸால் பல்லின் எனாமல் தேய்ந்து பல்லின் உறுதி தன்மை கெட்டுவிடும்.

(சுத்தம் செய்யப்பட்ட தேனை சரியான அளவில் முறையாக எடுத்துக்கொள்வது உடல் நலத்தை பாதுகாக்கும்)

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP