ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா!

முதலில் ஹீமோகுளாபின் அப்படினா என்னனு தெரிஞ்சுக்கலாம்.. ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம். ரத்தத்தில் உள்ள இரும்பு சத்தின் அளவை குறிப்பதுதான் ஹீமோகுளோபின். நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் இரும்பு சத்து அதிகளவில் இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
 | 

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா!

ஆண், பெண் இருபாலருக்கும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சரியான அளவில் இருப்பது மிக மிக அவசியம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களில் பெரும்பாலானோருக்கு ஹீமாகுளோபின் அளவு குறைவதால் ரத்த சோகை, உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. 

முதலில் ஹீமோகுளாபின் அப்படினா என்னனு தெரிஞ்சுக்கலாம்.. ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம். ரத்தத்தில் உள்ள இரும்பு சத்தின் அளவை குறிப்பதுதான் ஹீமோகுளோபின்.  நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் இரும்பு சத்து அதிகளவில் இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.  இந்த இரும்பு சத்தின் அளவை அதிகரிக்க, சத்து மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இயற்கையில் விளையும் மாதுளம், பேரீச்சை உள்ளிட்ட பழங்களை சாப்பிடுவது சாலச்சிறந்தது. இதைத்தான் டாக்டர்களும் கூட அறிவுருத்துகின்றனர். 

குறிப்பாக பேரீச்சம் பழத்தில், இரும்பு சத்து அதிகம் இருப்பதால், தினமும் அதை சாப்பிடும் நபர்களுக்கு ஹீமோகுளோபின்  அளவை சமன்படுத்த முடியும். அத்துடன், கால்சியம் சத்துக்கு தேவையான பாலும் குடிப்பதால், கால்சியம், அயர்ன் சத்துக்கள் சம விகிதத்தில் கிடைக்கும். 

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா!


இந்த இரண்டையும் பெரியவர்கள் மிக எளிதாக சாப்பிட்டுவிடுவர். ஆனால், குழந்தைகளை பால் குடிக்க வைக்கவும் சரி, பேரீச்சம் பழத்தை சாப்பிட வைக்கவும் சரி படாத பாடு பட வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக, இவை இரண்டும் கலந்த கலவையில், ஹோம் மேட் ஹல்வா செய்து கொடுத்தால், குழந்தைகளும் அதை விரும்பி சாப்பிடும்.அவர்களுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும். 

தேவையான பொருட்கள்: பேரீச்சம் பழங்கள், நெய், பால், முந்திரி, பாதாம், ஏலக்காய். 

செய்முறை: கடைகளில் கிடைக்கும் பேரீச்சம் பழங்களை வாங்கி, சுடு நீரில் 15 - 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின், அவற்றை நன்கு கழுவி, கொட்டைகளை நீக்கவும். அதன் பின், அரை கிலோ பேரீச்சம் பழத்திற்கு அரை லிட்டர் காய்ச்சி பால் ஊற்றி, மேலும் சிறிதளவு நீர் ஊற்றி, அதிலேயே வேக வைக்கவும். 

ஏற்கனவே சுடு நீரில் ஊறியதால், தற்போது சூடான பாலில் வேகவைக்கும் போது, பேரீச்சம் பழங்கள் நன்கு மசிந்துவிடும். தேவைப்பட்டால், பாலில் வேக வைப்பதற்கு முன், பேரீச்சம் பழங்களை மிக்சியில் அரைத்துக்கொள்ளலாம். 

வேகவைப்பதென்றால், மூடி போட்டு அல்ல. வெறும் வாணலியில், திறந்து வைத்தபடியே வேகவைத்து அதை அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு பால் சுண்டியதும், அதில், நெய் ஊற்றி மீண்டும் கிளற வேண்டும். பேரீச்சம் பழமே இனிப்பு என்பதால், இதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா!

ஓரளவு கெட்டி பதம் வரும் போது, ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்க்கலாம். இது, ஹல்வாவிற்கு கூடுதல் சுவை தரும். கெட்டி பதம் வந்ததும், அதை அடுப்பிலிருந்து இறக்கவிட்டு, அதன் மீது மேலும் சிறிதளவு நெய் ஊற்றி, சூடாக சாப்பிடலாம். 

ஜில்லென்று சாப்பிட ஆசைப்படுவோர், சூடு அறியதும் பிரிட்ஜில் வைத்து ஜில் ஹல்வா சாப்பிடலாம். ஆனால், இதை பெரும்பாலும் செய்த அன்றே சாப்பிடுவது நல்லது. பால் சேர்த்து செய்திருப்பதால், வெயில் காலங்களல் புளித்துப்போக வாய்ப்புள்ளது. 

எனவே, சூடான ஹல்வா சுவையாகவும் இருக்கும். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும், அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதில், இனிப்பு சுவைக்காக தனியாக எதுவும் சேர்க்காதது இந்த ஹல்வாவின் கூடுதல் சிறப்பு. என்ன... இன்றே ட்ரையல் பாக்குறீங்களா?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP