இரண்டாம் வகை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் பச்சைப்பட்டாணி

பச்சைப் பட்டாணி சாப்பிடுவதால், இரண்டாம் வகை நீரிழிவு பிரச்னை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என கண்டறிந்துள்ளனர் ஆராய்சியாளர்கள். மேலும் மிக குறைந்த எரிசக்தியை கொண்ட பச்சைப்பட்டாணியை, உட்கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடிவதுடன், உடல் பருமனை குறைக்கவும் பச்சைப்பட்டாணி உதவுகிறது.
 | 

 இரண்டாம் வகை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் பச்சைப்பட்டாணி

இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதால் உண்டாகும் விளைவே, நீரிழிவு பிரச்னையாகும். நீரிழிவினை 2 வகையாக மருத்துவர்கள் பிரிக்கின்றனர். முதல் வகை நீரிழிவு பெரும்பாலும் இளம் வயதினர், குழந்தைகளுக்கு ஏற்படக் கூடியது. இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள் கட்டாயம் வாழ் நாள் முழுவதும் இன்சூலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் வகை நீரிழிவு பெரும்பாலும் வயதானவர்கள், கர்ப்பம் தரித்த பெண்கள், அதிக உடல் பருமனம் உள்ளவர்கள் ஆகியோருக்கு ஏற்படும். இந்த‌ வகை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து இன்சூலின் எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றாலும், முழுமையாக இதிலிருந்து விடுபட முடியாது என்கின்றனர், மருத்துவர்கள். 

ஆனால்,  சரியான உணவுமுறை, உடற்பயிற்சி மூலம்  இரண்டாம் வகை  நீரிழிவு பிரச்னையினை கட்டுக்குள் வைக்க இயலுமாம்.  அத்தகைய நலன் கொண்ட உணவு பொருட்களை ஆய்வு செய்த ஆராய்சியாளர்கள், பச்சைப் பட்டாணி சாப்பிடுவதால், இரண்டாம் வகை நீரிழிவு பிரச்னையினை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என கண்டறிந்துள்ளனர். சரி, பச்சைப்பட்டாணியில் உள்ள சத்துக்கள் பற்றி பார்க்கலாம்...

குறைந்த அளவு எரிசக்தியை (கலோரி) கொண்டுள்ளது பச்சைப்பட்டாணி:

இரண்டாம் வகை நீரிழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், குறைந்த எரிசக்தியை கொண்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும், அதன்படி, 100 கிராம் பச்சைப்பட்டாணியில், 80 கிராம் எரிசக்தி மட்டுமே உள்ளது.  இத்தகைய, மிக குறைந்த எரிசக்தியை கொண்ட பச்சைப்பட்டாணியை, உட்கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடிவ‌துடன், உடல் பருமனை குறைக்கவும் பச்சைப்பட்டாணி உதவுகிறது. 

 இரண்டாம் வகை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் பச்சைப்பட்டாணி

சாம்பல்சத்து (பொட்டாசியம்) நிறைந்த  பச்சைப்பட்டாணி:

சாம்பல்சத்து குறைபாட்டால் பலதரப்பட்ட உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும், அதிலும் நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டவர்கள் கட்டாயம் சாம்பல் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ள வேண்டும், அதன்படி 100 கிராம் பட்டாணியில், 244 மில்லிகிராம் சாம்பல்சத்து உள்ளது.  எனவே, பச்சைப்பட்டாணி, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

 புரத சத்து நிறைந்த பச்சைப்பட்டாணி:

100கிராம் பச்சைப்பட்டாணியில், 5 கிராம் அளவிற்கு புரத சத்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  இவ்வாறான, புரதம் நிறைந்த பச்சைப் பட்டாணியை சாப்பிட்டு வருவதால், அதிக பசியை கட்டுப்படுத்த முடியுமாம், இதனால், உடல் பருமனை குறைக்க இயலும், மேலும் புரதம் நிறைந்த உணவுகளை நீரிழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 இரண்டாம் வகை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் பச்சைப்பட்டாணி

 நார்ச்சத்து  நிறைந்த பச்சைப்பட்டாணி:
 

100 கிராம் பச்சைப்பட்டாணியில், 5 கிராம் அளவிற்கு நார்ச்சத்து உள்ளது.  பொதுவாக, நீரிழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் நார்ச்சத்து அதிகமுள்ள, உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது, அந்த உணவு மெதுவாக செரிமானமாகி, இரத்தத்தில் சேர்ந்துள்ள சர்க்கரையை கரைக்கும் ஆற்றல் கொண்டது.  எனவே, பச்சைப் பட்டாணி சாப்பிடுவதால் ரத்ததில் சேர்ந்துள்ள சர்க்கரை அளவு குறைக்கப்படுகிறது. 

 காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு உணவு என எந்த நேரத்திலும் பச்சைப்பட்டாணியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம், மேலும் முடிந்த வரையிலான உடற்பயிற்சி, இயற்கை உணவுகளை உட்கொள்வதனால், உடல் பருமனை கட்டுக்குள் வைத்து, ரத்த சர்க்கரை அதிகரித்தல், உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க இயலும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP