ஹார்ட் அட்டாக்கை தடுக்கும் இஞ்சி டீ!

இப்போதெல்லாம் சாதாரண டீ கடையில் கூட குறைந்தது பத்து வகையான டீ போட ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை புது வகையான டீ வந்தாலும், இஞ்சி டீ-க்கான ரசிகர்கள் இன்னும் குறையவில்லை.
 | 

ஹார்ட் அட்டாக்கை தடுக்கும் இஞ்சி டீ!

ஹார்ட் அட்டாக்கை தடுக்கும் இஞ்சி டீ!

இப்போதெல்லாம் சாதாரண டீ கடையில் கூட குறைந்தது பத்து வகையான டீ போட ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை புது வகையான டீ வந்தாலும், இஞ்சி டீ-க்கான ரசிகர்கள் இன்னும் குறையவில்லை. இஞ்சியின் காரத்தோடு அந்த டீயை ஒரு மிடரு குடித்ததுமே புத்துணர்வு பெருக்கெடுக்கும். வெறும் சுவை மட்டுமல்ல, இஞ்சி டீயினால் நிறைய நன்மைகளும் இருக்கின்றன. 

0  பயணத்திற்கு முன்பு ஒரு கப் இஞ்சி டீ குடித்தால், வாந்தி மற்றும் மயக்கம் தவிர்க்கப் படும். 

0வயிறு முட்ட சாப்பிட்டு விட்டோமே, சரியாக ஜீரணம் ஆகிவிடுமா என பயப்படும் நேரத்தில் இஞ்சி டீயைக் குடியுங்கள். இது அஜீரணக் கோளாறு ஏற்படாமல் தவிர்த்து விடும். 

0 இதிலிருக்கும் ஆன்டி-இன்ஃப்ளமேட்ரி பொருட்கள் தசை மற்றும் மூட்டுகளுக்கு சிறந்த மருந்து. இஞ்சி டீ குடிப்பதுடன், இஞ்சியை அரைத்து அந்த இடங்களில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். 

0  ஜலதோஷம் மற்றும் அலர்ஜிக்கு இந்த டீ மிகவும் ஏற்றது. அதோடு சுவாசப் பிரச்னைகளுக்கும் உகந்தது. 

0  இதிலிருக்கும் விட்டமின்ஸ், மினரெல்ஸ், அமினோ ஆசிட்ஸ் ரத்த ஓட்டத்தை சீராக்கும். கார்டியா வாஸ்குலர் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைத்து ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதையும் தவைர்க்கிறது. 

0  மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அடி வயிற்று வலியைக் குறைக்க இஞ்சி டீ மிகவும் உதவுகிறது. அதோடு இஞ்சியை வார்ம் வாட்டரில் சிறிது நேரம் ஊறவைத்து அரைத்து, அடி வயிற்றில் தடவினால், உடனே வலியும் குறையும். 

0 இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

0 இதன் வாசனையும் இதிலிருக்கும் மருத்துவ குணமும் மன அழுத்தம் மற்றும் டென்ஷனைக் குறைக்க வல்லது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP