வயிற்றில் இருக்கும் குழந்தையை குண்டாக்கும் கர்ப்பகால நீரிழிவு 

தாயின் ரத்தத்தில் சுரக்கும் அதிகப்படியான க்ளூகோஸ், நஞ்சுக்கொடி வழியாக குழந்தையின் உடலுக்குள் சென்று குழந்தையின் உடலில் சேர்க்கிறது. இதனை சரி செய்ய குழந்தையின் கணையம் அதிக அளவில் இன்சுலினை சுரக்கும்.
 | 

வயிற்றில் இருக்கும் குழந்தையை குண்டாக்கும் கர்ப்பகால நீரிழிவு 

நீரிழிவு பிரச்னை, இன்றைய காலசூழலில் மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிட்டது. நமது உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிக மோசமான மாற்றங்களே இந்த நீரிழிவிற்கு காரணமாக இருக்கின்றனர். இந்த கோளாறு கருவில் இருக்கும் குழந்தையும் விட்டு வைப்பதில்லை.  

ஆனால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீரிழிவு தாற்காலிகமானதாகவும் , கர்ப்பம் தரித்த பிறகு ஏற்படக்கூடியதாக இருக்கும் அதாவது  குழந்தையின் வளர்ச்சியின் போது உருவாகும் நஞ்சுப்பையில் இருந்து சுரக்கும் சில ஹார்மோன்களின் காரணமாக, இன்சுலின் சுரப்பி சரியாக சுரக்காமல் போவதால் நீரிழிவு பிரச்னை உண்டாகும்.  இந்த நீரிழிவு பொதுவாக கர்ப்பகாலத்தின் ஆறு மாதத்திலிருந்து இறுதி மாதம் வரையே அதிகமாக வருகிறது என மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.

வயிற்றில் இருக்கும் குழந்தையை குண்டாக்கும் கர்ப்பகால நீரிழிவு 

இந்த நீரிழிவினால் ஏற்படும் ஆபத்துக்கள் :

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தாற்காலிகமானதாக கருத்தப்படடாலும் இந்த நீரிழிவின் காரணமாக வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படலாம். அதாவது தாயின் உடலில் உள்ள இன்சுலின் சரியாக வேலை செய்யாததால், இதனை கட்டுக்குள் வைக்க வேண்டிய க்ளூகோஸ் அளவுகள், தாயின் ரத்தத்தில் அதிகமாகும்

இவ்வாறு தாயின் ரத்தத்தில் சுரக்கும் அதிகப்படியான க்ளூகோஸ்,  நஞ்சுக்கொடி வழியாக குழந்தையின் உடலுக்குள் சென்று  குழந்தையின் உடலில் சேர்க்கிறது. இதனை  சரி செய்ய  குழந்தையின் கணையம் அதிக அளவில் இன்சுலினை சுரக்கும். 

இதனால் குழந்தை அளவுக்கும் அதிகமான எடையுடன் சுமார் 5  கிலோவரை எடை கூட கூடும். இதனால் குழந்தை பிறப்பில் பிரச்னை ஏற்படும். 

வயிற்றில் இருக்கும் குழந்தையை குண்டாக்கும் கர்ப்பகால நீரிழிவு 

அதோடு சுவாசம் சார்ந்த பிரச்னை, கணைய பிரச்னை இவற்றின் பாதிப்புகளால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவினால், பிறக்கும் குழந்தை குறைவான ரத்த சர்க்கரையால் மரணத்தை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம்.  

முறையான மருத்துவ பரிசோதனையின் மூலம் தாயின் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்து, குழந்தையின்  உயிரை காக்க முடியும். கட்டாயம் கர்ப்பகாலத்தில் முறையான மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP