வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்ற பூண்டு பால் !

அன்றாட உணவில் சேர்க்கப்படும் உணவுப்பொருள்கள் பெரும்பாலும் நம் உடலின் உறுப்புகளைச் சீராக செயல்பட உதவிபுரிகிறது.. அவற்றில் ஒன்று பூண்டு.. .இதன் மருத்துவ குணங்கள் அளப்பறியாதது.
 | 

வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்ற பூண்டு பால் !

அன்றாட உணவில் சேர்க்கப்படும்  உணவுப்பொருள்கள் பெரும்பாலும் நம் உடலின் உறுப்புகளைச் சீராக செயல்பட உதவிபுரிகிறது.. அவற்றில் ஒன்று பூண்டு.. .இதன் மருத்துவ குணங்கள் அளப்பறியாதது.

இரத்த அழுத்தம் சீராக்குதல், உடலில் வாயுவை நீக்குதல், இடுப்பு வலி,  கைகால் மூட்டுவலி, நுரையீரல் உறுப்புகளைப் பலபடுத்துதல், வயிற்றில் இருக் கும் புழுக்களை நீக்குதல் என்று  பூண்டின் அருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வாயுவை உண்டாக்கும் பருப்புகளைக் கொண்டு தயாரிக்கும் சாம்பாரில் பூண்டு சேர்க்க காரணம் கூட இதற்குதான்.. பூண்டு காரத்தன்மை கொண்டதால் அதை பச்சையாக சாப்பிடமுடியாது.  உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் பூண்டை வடை கம்பியில் கோர்த்து  நெருப்பில் சுட்டு தோல் நீக்கி சாப்பிடுவார்கள்.. அளவுக்கதிகமாக உடலில் இருக்கும் வாயுவை வெளியேற்றும் தன்மை பூண்டை சுட்டு சாப்பிடுவதில் கிடைக்கும். குழந்தைகளுக்கு  குழம்பில்  கலந்து கொடுக் கப்படும் பூண்டை தனிப்பட்டு கொடுத்தால் சாப்பிடமாட்டார்கள்.. காரக் குழம்பு, மீன் குழம்பு, பூண்டு குழம்பில் இருக்கும் பூண்டுகளில் காரத்தன்மை இருக் காது என்றாலும் இலேசில் சாப்பிடமாட்டார்கள். 

எப்படித்தான் பூண்டை கொடுப்பது என்னும் அம்மாக்களும் வலுப்பெற  பாலில் பூண்டை வேகவைத்து சாப்பிடலாம். 3 தம்ளர் பசும்பாலில் 1 தம்ளர் நீரிவிட்டு, பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து சேர்த்து நன்றாக வேகவிடவும்.. பூண்டு குழைந்து வேகும்..

பிறகு பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து, ஏலத்தூள் போட்டு ஒரு கொதிவிட்டு கொடுக்கவும். பச்சை  வாசனை இல்லாமல் பூண்டு பால் சுவையாக இருக்கும்.. தினமும் காலை  என்றில்லாமல் வாரம் இருமுறை  காலையில் காஃபி,டீ க்கு பதிலாக குடும்பத்தில் அனைவரும் குடிக்கலாம். அல்லது இரவு நேரங்களில் குடிக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்  கைநிறைய பூண்டை ஒரு தம்ளர் பாலில் வேகவைத்து பூண்டை மென்று சாப்பிட்டால் போதும்போதும் என்று சொல்லுமளவுக்கு பால் சுரக்கும் என்பார்கள் முன்னோர்கள்..  பூண்டு பால் செரிமான உறுப்புகளைத் தூண்டி எளிதில் ஜீரணத்துக்கு வழி செய்கிறது.. நோய்க்கிருமிகளை அழித்து உடலுக்கு வலு சேர்க்க உதவுகிறது பூண்டு பால்.. ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்க வேண்டும் என்று பூச்சி மாத்திரைகளை சாப்பிட சொல்லி வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். ஆனால் வாரம் ஒருமுறை பூண்டு பாலை சேர்த்தால் வயிற்றில் பூச்சிகளை வெளியேற்றுவதோடு.. இரத்தத்தில் உள்ள கொழுப்புகளையும் நீக்குகிறது.. 

நாட்டுப்பூண்டுகளை  பயன்படுத்துங்கள்..  ஒரே நாளில் பலன் தெரியும்..  நல்லதை செய்ய நாள் எதற்கு இன்று இரவு பூண்டு பாலோடு உறக்கத்தை நிறைவு செய்யுங்கள். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP