கைபேசியை அடிக்கடி பயன்படுத்துவது பதட்டத்தை  அதிகரிக்கும்: அதிர்ச்சி தகவல் !  

நாகரிக உலகில் தொடுதிரை கைபேசி இல்லாத கைகளை பார்ப்பதே அரிது என்கிற சுழலில் ஓர் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
 | 

கைபேசியை அடிக்கடி பயன்படுத்துவது பதட்டத்தை  அதிகரிக்கும்: அதிர்ச்சி தகவல் !  

உடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் ஆபத்தான காரணிகளில் முக்கியமான ஒன்று மன அழுத்தம். 
நம்மில் பலருக்கும் பல காரணம் மற்றும் காரணிகளால்  பதட்டம் ஏற்படும். இவற்றை கட்டுப்படுத்த நாம் சில பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும். நாம் தெரிந்தோ தெரியாமலோ இவற்றை செய்து கொண்டிருப்போம். அப்படியான விஷயங்கள் என்னென்ன, அவற்றை எப்படி தவிர்ப்பது என்று பார்ப்போம்.   

கைபேசி: 

கைபேசியை அடிக்கடி பயன்படுத்துவது பதட்டத்தை  அதிகரிக்கும்: அதிர்ச்சி தகவல் !  

நாகரிக உலகில் தொடுதிரை கைபேசி இல்லாத கைகளை பார்ப்பதே அரிது  என்கிற சுழலில் ஓர் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதாவது, அடிக்கடி கைபேசியை பார்த்து கொண்டே இருப்பது பதட்டம் மற்றும்  மன அழுத்தத்தை  அதிகரிக்கும் அபாயம் ஏற்படுத்தும்.  அதோடு கைபேசி பயன்பாடு அதிகப்படியாக இருந்தால் உணர்ச்சி நிலைகள் சீரற்று இருக்குமாம்.

தூக்கம்: 

கைபேசியை அடிக்கடி பயன்படுத்துவது பதட்டத்தை  அதிகரிக்கும்: அதிர்ச்சி தகவல் !  

சரியான ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும்போது, உடலில் தானாகவே பதட்டம் ஏற்படும்.  மேலும் ஹார்மோன் சுரப்பில் சீரற்ற தன்மை, மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.  

காபி: 

கைபேசியை அடிக்கடி பயன்படுத்துவது பதட்டத்தை  அதிகரிக்கும்: அதிர்ச்சி தகவல் !  

உடலில் இரத்த அழுத்தம் குறையும்போது காபி குடிப்பது ஒருவகையில் நமக்கு சௌகரியத்தை கொடுப்பதாக இருக்கும்.  ஆனால் காபி குடிப்பதால்  இருதய துடிப்பு அதிகரித்து, நடுக்கம், பதட்டம் , மனஅழுத்தம் போன்றவற்றை கொடுக்கும்.  

உணர்ச்சி நிலை: 

கைபேசியை அடிக்கடி பயன்படுத்துவது பதட்டத்தை  அதிகரிக்கும்: அதிர்ச்சி தகவல் !  

கடந்த காலத்தில் நடந்தது அல்லது நடக்க போவது குறித்து சிந்தித்து கொண்டே இருந்தால் நமக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். இவை மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும். 

தனிமை:

கைபேசியை அடிக்கடி பயன்படுத்துவது பதட்டத்தை  அதிகரிக்கும்: அதிர்ச்சி தகவல் !  
மற்றவர்களை காட்டிலும் தனிமையில் இருப்பவர்களுக்கு மனநல பிரச்னை ஏற்பட 1.39 முதல் 2.43 மடங்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

உணவு: 

கைபேசியை அடிக்கடி பயன்படுத்துவது பதட்டத்தை  அதிகரிக்கும்: அதிர்ச்சி தகவல் !  

மூன்று வேளையும் சரியான விகிதத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்.  உடலுக்கு தேவையான உணவு சரியாக எடுத்து கொள்ளாவிட்டால் கூட பதட்டம், மனஅழுத்தம்  போன்ற பிரச்னைகள் ஏற்படும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP