உடல் எடையை குறைக்க வேண்டுமா, என்ன செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள்!

நொறுக்கு தீணிகளை அதிகப்படியாக உட்கொள்வதால் உடல் பருமன் மட்டுமல்ல உடல் நலம் சார்ந்த பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பின்வரும் நொறுக்கு தீணிகளை தவிர்ப்பதன் மூலம் உடல் பருமனை வேகமாக குறைக்க முடியும்.
 | 

உடல் எடையை குறைக்க வேண்டுமா, என்ன செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள்!

உடல் பருமனை குறைக்க விரும்பும் நபர்கள் செய்யும் சில தவறுகளால் உடல் பருமனை குறைப்பது சாத்தியமற்றதாக மாறிவிடுகிறது. நொறுக்கு தீனிகளை அதிகப்படியாக உட்கொள்வதால் உடல் பருமன் மட்டுமல்ல உடல் நலம் சார்ந்த பல பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். பின்வரும் நொறுக்கு தீனிகளை தவிர்ப்பதன் மூலம் உடல் பருமனை விரைந்து குறைக்க முடியும்.

ஃபிரஞ்சு ஃப்ரை:

உடல் எடையை குறைக்க வேண்டுமா, என்ன செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள்!
உருளைக்கிழங்கு ஒரு ஆரோக்கியமான காய்கறி. ஆனால்  பிரஞ்சு  ப்ரை போன்ற வறுத்த உருளைக்கிழங்கு ஆரோக்ய கேடுகளை விளைவிக்க கூடியது. சாப்பிடுவதற்கு மிகவும் மொறுமொறுப்பாகா இருக்கும் இது போன்ற வறுத்த உருளை கிழங்குகளில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருக்கும் இதை சாப்பிடுவதால் உடல் பருமனை குறைப்பது சாத்தியமற்றதாக மாறிவிடும்.

இனிப்பு நிறைந்த பானங்கள்:

உடல் எடையை குறைக்க வேண்டுமா, என்ன செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள்!

சிறந்த உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்கு பின்னர் சிலர் சர்க்கரை  நிறைந்த பானங்களை அருந்துவர். அத்தகைய பானங்கள் சுவைமிக்கதாகவும்,  எனர்ஜியை அதிகப்படுத்த கூடியதாக இருந்தாலும். அதில் உள்ள அதிக கலோரி உடல் எடையை அதிகப்படுத்துமே தவிர உடல் எடையை குறைக்க ஒருபோதும் உதவாது.

பேக்கரி பொருட்கள்:

உடல் எடையை குறைக்க வேண்டுமா, என்ன செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள்!
பேக்கரி கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான தீனிகளில் அதிகப்படியான  கெட்ட கொழுப்புக்கள் எனப்படும் ட்ரான்ஸ் கொழுப்புகள் கலக்கப்படும். இந்த வகை பேக்கரி உணவுகளை நுகர்வதனால் உடல் பருமனை குறைப்பதில் சிக்கல் ஏற்படும்.

பர்கர்ஸ்:

உடல் எடையை குறைக்க வேண்டுமா, என்ன செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள்!
இன்றைய சூழலில் பர்கர்ஸ் நம் நாட்டின் உணவு போலவே மாறி விட்டது எண்ணற்ற ரகங்களில் கிடைக்கும் இந்த பர்கர்ஸ் அதிகப்படியான கலோரிகளையும், கொழுப்புகளையும் தன்னுள் கொண்டுள்ளது.  சுவை மிக்க இது போன்ற பர்கர்களை சாப்பிடுவதனால் உடல் பருமனை குறைப்பது இயலாத காரியமாகிவிடும்.

சாக்லேட் பார்கள்: 


கண்ணையும் மனதையும் கவரும் வண்ணம்  பலவிதமான சாக்லேட் பார்கள்  சந்தைகளில் கிடைக்கின்றன. சுவை மிக்கதாக இருக்கும் இத்தகைய கேண்டிக்கள் உண்மையில் ஆரோக்ய சீர்கேட்டை உண்டாக்கக் கூடியவை. பொதுவாக சாக்லெட் பார்களில் சேர்க்கப்படும் சர்க்கரை, எண்ணெய்,  சுத்திகரிக்கப்பட்ட மாவு  போன்றவை அதிக கலோரிகளையும், குறைந்த ஊட்டச்சத்துக்களையும்  கொண்டுள்ளது. இது போன்ற சாக்லேட் கேண்டிகளை சாப்பிடுவதனால் உடல் பருமனை குறைக்க இயலாது.

பீஸ்ஸா:

உடல் எடையை குறைக்க வேண்டுமா, என்ன செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள்!

 துரித உணவு சங்கிலிகளில் முதல் இடம் பிடித்திருப்பது பீஸ்ஸா. இந்த பீஸ்ஸா உணவுப்பட்டியலில் உயர்ந்த இடம் பிடித்து விட்டது. ஆனால் அதிக கலோரிகள் கொண்ட பீஸ்ஸாவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் மாவு போன்ற உணவுப்பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இந்த உணவால் உடல் எடை குறையும் வாய்ப்பு மிகவும் குறைவு.

ஐஸ்கிரீம்:

உடல் எடையை குறைக்க வேண்டுமா, என்ன செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள்!
கோடை காலங்களில் சூட்டை குறைப்பதற்காக மட்டுமல்ல அனைத்து வித  விழாக்களிலும் பங்கு பெறும் முக்கிய உணவுப் பொருளாக ஐஸ்கிரீம் மாறிவிட்டது. ஆனால் அதிக கலோரிகள் கொண்ட ஐஸ்கிரீம்களை சாப்பிடுவதனால் உடல் பருமன் குறைவது சாத்தியமற்றதாக மாறிவிடும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நம் நாக்கினை கட்டுக்குள் வைத்திருந்து மேற்கண்ட உணவு வகைகளை தவிர்ப்போமானால் இயற்கையாகவே உடல் எடை கட்டுக்குள் இருப்பதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP