கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

கர்ப்பம் தரித்த பெண்கள் மருத்துவ ஆலோசனையின் படி கர்ப்ப கால உடற்பயிற்சிகள் மற்றும் நடை பயிற்சிகளை முறையாக செய்வதன் மூலம் தாய், சேய் என இருவருக்கும் அது நன்மை பயக்கும்.
 | 

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

கர்ப்பம் தரித்த பெண்கள் பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும். கர்ப்பம் தரித்த பிறகும், பிரசவத்திற்கு பிறகும் அந்த பெண்ணின் உடலில் பல்வேறு மாற்றங்கள் தோன்றுகின்றன. பொதுவாக கர்ப்பம் தரித்த பெண்கள் ஆடாமல், அசையாமல் இருக்க வேண்டும் என்கிற கருத்து நிலவி வருகிறது.

உண்மையில்  கர்ப்பிணிகள் அதிக கடினமான வேலைகளில் ஈடுபட கூடாது என்பதை போலவே, எப்போதும் ஓய்விலும் இருக்கக் கூடாது, கிராமப்புறங்களில் 7 மாதத்திற்கு பிறகு கர்ப்பிணி பெண்களை தண்ணீர் குடம் தூக்குவது, குனிந்து நிமிர்ந்து வேலைசெய்வது போன்ற சிறு சிறு பயிற்சிகளை அளிப்பதுண்டு. இவ்வாறான பயிற்சிகள் இயற்கை பிரசவத்திற்கு வழிவகை செய்யும் என்கிற நம்பிக்கையும் கிராமவாசிகளிடம் அதிகமாகவே காணப்படுகிறது. 

நகர சூழலில் அத்தகைய வேலைகளில் ஈடுபட முடியாவிட்டாலும், சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்யலாம். அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

கர்ப்பிணி பெண்கள் முதுகு சார்ந்த உடற்பயிற்சியில் ஈடுபடுவதனால், கர்ப்பகால உபாதையான முதுகு வலியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம் மிக பெரிய ஆபத்துகளை கொடுக்கக்கூடியது. உடற்பயிற்சியில் ஈடுபட்டுவதன் மூலம் மன அழுத்தத்தை வெல்ல முடியும்.

கர்ப்பிணி பெண்களில் பலர் நீரிழிவு நோய்க்கு ஆளாவதுண்டு. உடற்பயிற்சி அல்லது 30 நிமிடம் செய்யும் நடைப்பயிற்சியின் மூலம் கர்ப்ப காலத்தில் வரும் நீரிழிவை கட்டுப்படுத்த முடியும்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

பொதுவாகவே கர்ப்பம் தரித்த பெண்கள் தூக்கமின்மையினால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள், உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் சரியான நேரத்திற்கு தூங்கி, காலையில் சீக்கிரம் எழ முடியும்.

இடுப்பு சம்மந்தமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் குழந்தை வெளியேறுவதில் சிக்கல் ஏற்படாமலும், பிரசவம் எளிதாக நடைபெறவும் உதவியாக இருக்கும்.

சுகப்பிரசவம் வேண்டும் என்றால் கட்டாயம் கர்ப்பிணிகளுக்கென வகுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

உடற்பயிற்சியில் ஈடுபடும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்யமான எடையுடன் பிறப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

கர்ப்பம் தரித்த பெண்கள் மருத்துவ ஆலோசனையின்படி கர்ப்ப கால உடற்பயிற்சிகள் மற்றும் நடை பயிற்சிகளை முறையாக செய்வதன் மூலம் தாய், சேய் என இருவருக்கும் அது நன்மை பயக்கும்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP