சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலாமா...?

சமீபத்தில், அமெரிக்க இளைஞர்கள் 30,899 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், வருடத்திற்கு 3,613 பேர், அதிகளவில் சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் விரைவில் மரணத்தை சந்திக்கின்றனர் என கண்டறிந்துள்ளனர்.
 | 

சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலாமா...?

நம்மில் பலர் அதிகமாக செய்யும் தவறு, சத்து மாத்திரைகளை அதிகப்படியாக உட்கொள்வது . 'சத்துமாத்திரை தானே இதனால் எந்த பிரச்னையும் வராது' எனக் கூறுவோரும் அதிகம் உண்டு.  உடல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது சத்துக் குறைபாடு. இதன் பொதுவான தீர்வு சத்துக்கள் சார்ந்த சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வது.

இத்தகைய சப்ளிமென்ட்களை அதிகமாக எடுத்துக்கொண்டால், வயது முதிர்வு  ஏற்படும் முன்னரே 'மரணத்தை' சந்திக்க நேரிடும் என்கின்றனர், ஆய்வாளர்கள். ச‌மீபத்தில், அமெரிக்க இளைஞர்கள், 30,899 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், வருடத்திற்கு 3,613 பேர், அதிகளவில் சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் விரைவில் மரணத்தை சந்திக்கின்றனர் என கண்டறிந்துள்ளனர்.

சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலாமா...?

கால்சியம் :

உதாரண‌மாக,  கால்சியம் எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதி பயப்பவை.  ஆனால், கால்சியம் நிறைந்த சப்ளிமென்ட்களை ஒருநாளில் 1,000 மி.கி அதிகமாக எடுத்துக்கொண்டால், இதய நோய்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி விரைவில் மரணத்தை கொணரக் கூடியவை என  ஆய்வு முடிவுகளை கண்டறிந்துள்ளன.

சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலாமா...?

வைட்டமின் டி

உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கக்கூடிய ஆற்றல் மிக்க‌வை வைட்டமின் டி.  மேலும் புற்றுநோய், இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றை தடுக்க கூடியவையாகவும், இந்த வைட்டமீன் டி கருதப்படுகிறது.  ஆனால் வைட்டமீன் டி  நிறைந்த சப்ளிமென்ட்களை, ஒருநாளில் 10 எம்.சி.ஜீக்கு அதிமாக எடுத்துக்கொண்டால், முன்கூட்டியே மரணத்தை சந்திக்கும் வாய்ப்பு, 53 சதவீதம் அதிகமாகும் என  ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வோர் அங்குள்ள ஜிம் மாஸ்டரின் பேச்சை கேட்டு தேவையில்லாத ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்கின்றனர். இது நாளைடைவில் மிகப்பெரிய பின் விலைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த வித மருந்துகளையும் சாப்பிடுவது நல்லதல்ல. சில சமயங்களில்,சாது மாத்திரைதானே என அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் கெடுதலே. 

விரைவில் நிவாரணம் கிடைக்கும் எனக்கருதி, சப்ளிமென்ட்களை அதிகளவில் எடுத்துக்கொள்வதை விட, இயற்கை உணவுகளான சத்துமிக்க காய், பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் நீண்ட வாழ் நாளை பெற முடியும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP