ஆண்களை பாதிக்கும் புற்றுநோய் ஆரம்பகால அறிகுறிகள்!

புற்று நோய் சில நேரங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்து ஆளைக் கொல்லும் கொடிய நோயாகும். சில வகை புற்று நோய் கடுமையான வலிகளையோ தீவிர அறிகுறிகளையோ உண்டாக்காமல் அதி தீவிர வளர்ச்சியடைய கூடியவை.
 | 

ஆண்களை பாதிக்கும் புற்றுநோய் ஆரம்பகால அறிகுறிகள்!

ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்கள், மகனாக, தந்தையாக, சகோதரனாக, தாத்தாவாகா தங்களுடைய ஒவ்வொரு பருவத்திலும் தங்களுக்கான தனி பொறுப்புகளை சுமப்பவர்கள். குடும்ப ஆரோக்கியத்தை கவனத்தில்கொள்ளும் பல ஆண்கள் தங்களது ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்வதே இல்லை.  குடும்ப சுகத்திற்காக தன் சுகத்தை மறந்த ஆண்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் உலக ஆண்கள் ஆரோக்கிய வாரம் கடைபிடிக்கப்படுகிறது.  இந்த வருட ஆண்கள் ஆரோக்ய வாரத்தில், ஆண்களை பாதிக்க கூடிய புற்று நோய் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.

புற்று நோய் சில நேரங்களில் ஆர்ப்பாட்டம்  இல்லாமல் வந்து ஆளைக் கொல்லும்  கொடிய நோயாகும். சில வகை புற்று நோய் கடுமையான வலிகளையோ தீவிர அறிகுறிகளையோ  உண்டாக்காமல் அதி தீவிர வளர்ச்சியடைய கூடியவை. சாதாரண பிரச்னை என தவிர்க்கப்படும் சில உடல் ரீதியான பிரச்னைகள் புற்று நோய் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.

செரிமானம் சார்ந்த மாற்றங்கள்:

ஆண்களை பாதிக்கும் புற்றுநோய் ஆரம்பகால அறிகுறிகள்!

உட்கொள்ளும் உணவுகள் முறையாக செரிமானம் அடையாமல் இருப்பது, பசியின்மை, வயிறு கட்டுதல் என்னும் மலம் கழிப்பதில் பிரச்னை, அடிக்கடி வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள், மலக்குடல் அல்லது பெருங்குடல் உபாதைகள் புற்று நோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதன் மூலம் புற்று நோய் பாதிப்பை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற முடியும். 

சிறுநீரக மாற்றங்கள் :

ஆண்களை பாதிக்கும் புற்றுநோய் ஆரம்பகால அறிகுறிகள்!

ஆண்களுக்கு ஏற்படும் மற்றொரு சிரமத்திற்கு உள்ளாக்கும் பிரச்னை சிறுநீரக மாற்றங்கள். உடலில் உள்ள கழிவுகள் பெரும்பாலும் சிறுநீர் மூலமாகவே வெளியேற்றப்படும். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ,எரிச்சல், அடிக்கடி கழிக்க தூண்டும் உணர்வு, சிறுநீர் தானாக வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் கடுப்பு ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் ஆண்களை மட்டுமே பாதிக்க கூடிய புரோஸ்டேட் புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இது வெறும் சின்ன பிரச்னை என எண்ணி புறக்கணித்து விடாமல், உடனடியாக மருத்துவரை சந்தித்து. மேற்கூறிய அறிகுறிகளுக்கான காரணத்தை கண்டறிந்து , சிகிச்சை பெறுவது நல்லது.

விதைப்பையில் கட்டிகள்:

ஆண்களை பாதிக்கும் புற்றுநோய் ஆரம்பகால அறிகுறிகள்!

ஆண்களை மிகவும் மோசமான ஆபத்திற்கு உள்ளாக்குபவை விதைப்பையில் ஏற்படும் கட்டிகள்.  இது போன்ற கட்டிகள் நுரையீரல், பெருங்குடல் போன்ற உள் உறுப்புகளில் ஏற்படும் புற்று நோய் கொடுக்கும் ஆபத்துகளை விட அதிக ஆபத்தை விளைவிப்பவை. ஆண் உறுப்புகளுடன் இருக்கும் இந்த விதைப்பையில் கட்டிகள்  தென்பட்டால் காலம் தாழ்த்தாமல் மருத்துவரை சந்திப்பது மிகவும் அவசியமும், அவசரமும் கூட.

முதுகு பகுதியில் ஏற்படும் வலி :

ஆண்களை பாதிக்கும் புற்றுநோய் ஆரம்பகால அறிகுறிகள்!
ஆண்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது,  போதுமான உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பது,  நீண்ட நேரம் நிற்பது, நீண்ட தொலைவு வாகனம் ஓட்டுவது போன்ற  காரணங்களால் முதுகு வலி ஏற்படலாம்.

ஆனால் நீண்ட நாட்களுக்கு இது போன்ற வலிகளை சந்திக்க நேரிட்டால் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், ஏனென்றால் இது புற்று நோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.  

ஆண்களை மட்டும் பாதிக்கக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய் எலும்புகள் வரை பரவும் அபாயம் கொண்டவை எனவே முதுகு மற்றும் பின்புற இடுப்பு பகுதியில் நீண்ட நாட்கள் வலி இருந்தால் அது புற்று நோய் முற்றியதற்கான அறிகுறியாகக் கூட  இருக்கலாம்.

மலக்குடல் இரத்தப்போக்கு

ஆண்களை பாதிக்கும் புற்றுநோய் ஆரம்பகால அறிகுறிகள்!
இரும்பு சத்து குறைபாடு அல்லது இரத்த சோகையின் காரணமாக மலம் கழிக்கும் போது மலத்துடன் சேர்ந்து ரத்தம் கசியும். ஆனால் இது போன்று தொடர்ந்து அதிக அளவில் இரத்தம் வெளியேறுமானால் இது தீவிர குடல் புற்று நோய் அறிகுறியாக இருக்கலாம். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP