மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் முடக்கத்தான் தோசை!

டாக்டர்கள் கொடுக்கும் மருந்தை ஒருபுறம் எடுத்துக் கொண்டாலும், நம் முன்னாேர் வழியில் உணவே மருந்து என்ற முறையை கடைபிடிப்பதன் மூலம், மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு காணலாம்.
 | 

மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் முடக்கத்தான் தோசை!

இளைஞர்கள் முதல் முதியோர் வரை பலரும் அனுபவிக்கும் ஒரே பிரச்னை மூட்டு வலி. கொஞ்சம் அதிகம் நடந்தாலோ, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தாலோ, கால்களை மடக்க கூட முடியாத அளவுக்கு மூட்டு வலி அதிகரித்துவிடுகிறது.

கால்களில் மட்டுமின்றி, கை மூட்டுகளிலும், விரல் மூட்டுகளிலும் சிலருக்கு வலி இருக்கக்கூடும். இது, ஆர்த்தரிடிஸ் எனப்படும் முடக்கு வாதத்தின் ஆரம்ப நிலை என்கிறன்றனர் மருத்துவர்கள். சிலருக்கு கால்சியம் குறைபாட்டின் காரணமாகவும், எலும்பு மஜ்ஜை தேய்மானத்தாலும், அதில் உள்ள நீர் திரவம் குறைவதால், எலும்பு உராய்வால் வலி ஏற்படலாம். 
 
50 - 60 வயதுக்கு மேல் இவ்வகை வலி வந்தால், ஓரளவு நியாயம் எனலாம். ஆனால், இன்றைய சூழலில், 20 - 30 வயதுக்குட்பட்ட பலருக்கும் இந்த பிரச்னை அதிகம் காணப்படுகிறது. பிசியோதெரபி மையங்களில் அதற்கான சிகிச்சை பெற்று தினசரி உடற்பயிற்சி செய்து அதன் பின் பணிக்கு செல்வோர் பலரை காண முடிகிறது. 

டாக்டர்கள் கொடுக்கும் மருந்தை ஒருபுறம் எடுத்துக் கொண்டாலும், நம் முன்னாேர் வழியில் உணவே மருந்து என்ற முறையை கடைபிடிப்பதன் மூலம், மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு காணலாம். 

பிரச்னை உள்ளவர்கள் தான் என்பதில்லாமல், அனைத்து தரப்பினருமே இந்த உணவே மருந்து முறையை கடைபிடித்தால், நோய் நொடியில்லா பெருவாழ்வு வாழலாம். இன்றைய ரெசிப்பியில், மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் முடக்கத்தான் தோசை எப்படிச் செய்வது என பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: முடக்கறுத்தான் அல்லது முடக்கத்தான் கீரை, சின்ன வெங்காயம், நல்லெண்ணெய், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் இத்துடன் நாம் அன்றாட பயன்படுத்தும் சாதாரண தோசை மாவு. 

மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் முடக்கத்தான் தோசை!

செய்முறை: ஒரு கடாயில், சிறிதளவு சின்ன வெங்காயம், 1 ஸ்பூன் சீரகம், மிளகு, ஒரு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி ஆகியவற்றை, தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், ஆய்ந்து வைத்திருக்கும் முடக்கத்தான் கீரையையும் (ஒரு கப் அளவு) அதில் சேர்த்து வதக்கவும். 

கீரையும் நன்கு வதங்கியவுடன், அதை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். பின் இந்த கலவையை மிக்சியில் அரைத்து, நாம் ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் தோசை மாவுடன் கலந்து தோசையாக வார்க்கவும். 

சூடான முடக்கத்தான் தோசையை, தக்காளி அல்லது வெங்காய சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். முடக்கு அறுத்தான் என்ற பெயருடைய முடக்கத்தான் கீரையை தனியாக சமைத்து சாப்பிட்டால், பலருக்கு அதன் சுவை பிடிக்காமல் போகலாம். 

இப்படி தோசையாக செய்து கொடுக்கையில் வெரைட்டியாகவும் இருக்கும், அதே சமயம் மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் இயற்கை மருந்தை உட்கொண்டது போலவும் இருக்கும். மேலும் பல நன்மை அளிக்கும் முடக்கத்தான் கீரையை வைத்து வேறு என்னென்ன செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்....

 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP