“டயபர்  வேண்டாம்  அம்மா -“  இப்படிக்கு பாதிக்கப்படும்  குழந்தைகள் 

முன்னோர்களின் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொண்ட நாம் அவர்கள் சொல்வதையும் கடைப்பிடிக்க மறந்ததால் பேச்சு வராத மழலைகளையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறோம்..
 | 

“டயபர்  வேண்டாம்  அம்மா -“  இப்படிக்கு பாதிக்கப்படும்  குழந்தைகள் 

குழந்தையை  உலகுக்கு வரவேற்பதற்குள்ளாகவே  குழந்தைக்கு ஸ்வெட்டர் பின்னும் அம்மாக்கள் எல்லாம் ஃப்ளாஷ் பேக் அம்மாக்கள் ஆகிவிட்டார்கள்.  வீட்டில் இருக்கும் பருத்தி துணிகள் அனைத்தையும் பக்குவமாக கத்தரித்து குழந்தை படுக்க மெத்தையாகவும், படுக்கை விரிப்புகளாகவும் தயாரிப்பார்கள். மிக முக்கியமாக குழந்தைக்கு இடுப்பின் கீழ் கட்டப்படும் லங்கோட்டா என்று செல்லமாக சொல்லப்படும் இயற்கை உபாதைகளை தாங்கும் துணிகள் தான் அதிகம் இருக்கும்.

பருத்தி புடவையைப் சிறு கைத்துண்டு அளவு கத்திரித்து  முக்கோணவடிவில் அமைத்து  முனைகளை மடித்து தைப்பார்கள் பிறகு  இருப்பக்கமும்நாடாவை கோர்த்து  விடுவார்கள். கோவணம் போன்று இருக்கும். நாடாக்கள் கட்டுவதற்கு பயன்படும்... குழந்தைகள் வெளியே செல்லும்போது இத்தகைய முக்கோண வடிவில், சதுர வடிவில் இருக்கும் துணிகள் இல்லாமல் செல்லமாட்டார்கள்..
 
குழந்தை பிறந்த வீடுகளில் இரவு நேரங்களில் ஓயாத வெளிச்சம் இருக்கும். இரவு நேரங்களில் குழந்தைக்கு  இடுப்புக்கு கீழே எதையும் கட்டமாட்டார்கள். மெல்லிய துணியை இடுப்புக்கு கீழே போர்த்தி விடுவார்கள்.. இரவு நேரங்களில் குழந்தை இயற்கை உபாதை கழித்தால் உடனடியாக எழுந்து மாற்றிவிடுவார்கள்...  இரவு முழுக்க குழந்தையைப் பார்த்துக்கொள்ள அப்பத்தாக்கவும், அம்மாச்சி களும், அத்தைமார்களும், அம்மாவும் என மாறி மாறி குழந்தையின் படுக்கையை  ஈரமில்லாமல் பார்த்துக்கொள்வார்கள். மறுநாள் பெருமையோடு குழந்தையைக் கண்விழித்து பார்த்துக்கொண்ட பெருமை கதைகளும் நடக்கும்.

பிறந்த குழந்தை நாள் ஒன்று பத்து முறையாவது சிறுநீர் கழிக்கும், நான்கு முறையாவது மலம் கழிக்கும். ஆனாலும் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு பருத்தி உடைகளை மாற்றுவார்கள். குழந்தையின் மலம், சிறுநீர் பட்ட துணிகளை நன்றாக நீரில் அலசி  இரு துளி டெட்டால் விட்டு வெயிலில் காயவைத்தப்பிறகே மீண்டும் உபயோகிப்பார்கள்.. குழந்தையின் படுக்கை விரிப்புகளும் இப்படித்தான் சுத்தம் செய்யப்படும்.

நாளடைவில் ரப்பர் ஷீட்டுகள், டயபர் போன்றவை வரத்தொடங்கின. ஆரம்பக் காலத்தில் விசேஷங்களுக்கு செல்லும் போது மட்டுமே டயபர் அணிந்தார்கள்.  இறுக்கத்துடன் கூடிய டயபர் குழந்தைகளுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. ஆனால் அம்மாக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது..  கண் விழித்து மாற்ற வேண் டிய அவசியம் இல்லாததால்  குழந்தைகள்  டயபரோடு பின்னி பிணையப்பட் டார்கள்.. இதன் காரணமாக குழந்தைகளுக்கு ரேஷஷ், சரும அலர்ஜி பாதிப்புகள் ஏற்படும்.. 

தற்போது டயபரை அணிவதற்கு முன்பு லோஷனை தடவி பிறகு அணியுங்கள் என்று  பரிந்துரைக்கிறார்கள். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை டயபரை மாற்றுங் கள். கோடைக்காலங்களில் தவிருங்கள். இரண்டு வயது வரை டயபரை உபயோ கியுங்கள் என்கிறார்கள்.. ஆனால் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த ஆரோக்யம் அதுவல்ல.. குழந்தைக்கு லங்கோட்டா அணிவித்து  அவ்வப்போது ஈரமாகும் போது  வெளியே எடுத்து  அந்த இடத்தை நன்றாக துடைத்து வேறு லங்கோட் டாவை அணிவிக்கவேண்டும்.. குழந்தை உட்கார ஆரம்பித்ததும் கால்களுக்கு இடையில் உட்கார வைத்து மலம் கழிக்க பழக வேண்டும் என்பதுதான்..

முன்னோர்களின் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொண்ட நாம் அவர்கள் சொல்வதையும்  கடைப்பிடிக்க மறந்ததால்   பேச்சு வராத மழலைகளையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறோம்..

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP