புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவரவேண்டுமா? இவற்றை பின்பற்றுங்கள்: வெற்றி பெறுவீர்கள்

புகையிலைகளை செயற்கையான முறையில் பதனிட்டு, தூளாக்கி அதனுடன் 7000 வகையான ரசயானங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் கலக்கப்பட்டு சிகரெட் தயாரிக்கப்படுகிறது. இதனை புகைப்பதால் நுரையீரல் நோய், இதய கோளாறுகள், பக்கவாதம், புற்று நோய் போன்ற மிக கொடிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
 | 

புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவரவேண்டுமா?  இவற்றை பின்பற்றுங்கள்: வெற்றி பெறுவீர்கள்

புகையிலை   'நிகோடியானா டபாக்கம்' என்னும் தாவரத்தின் இலையிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். புகையிலை வரலாற்றின் படி தென்னமெரிக்க மக்களால் கண்டறியப்பட்டு, அமெரிக்காவிற்கும், ஸ்பானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கும், பிறகு மற்ற நாடுகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. 

புகையிலை, பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, சிகரெட்கள், பீடிகள், மூக்குப்பொடி, ஹூக்கா, மெல்லும் புகையிலை போன்ற வடிவங்களில் கடைகளில் கிடைக்கிறது. 

புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவரவேண்டுமா?  இவற்றை பின்பற்றுங்கள்: வெற்றி பெறுவீர்கள்

புகையிலைகளை  செயற்கையான முறையில் பதனிட்டு, தூளாக்கி அதனுடன் 7,000 வகையான ரசயானங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் கலக்கப்பட்டு சிகரெட் தயாரிக்கப்படுகிறது.  இதனை புகைப்பதால் நுரையீரல் நோய், இதய கோளாறுகள், பக்கவாதம்,  புற்று நோய் போன்ற மிக கொடிய விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆய்வின் படி வருடத்திற்கு எட்டு மில்லியன் மக்கள் இந்த புகையிலை பழக்கத்தாலும், புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பதாலும் மரணத்தை சந்திக்கின்றனர் . 

புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவரவேண்டுமா?  இவற்றை பின்பற்றுங்கள்: வெற்றி பெறுவீர்கள்
ஒருவர் புகையிலையைப் பயன்படுத்தும் போது, மூளையில் டோபமின் என்னும் வேதி மாற்றம் நிகழ்கிறது. புகையிலையிலிருந்து வரும் இந்த வேதிப்பொருள் தோல், வாய், மூக்கு , நுரையீரல் மூலம் மூளையை சென்றடைகிறது. இதனால் புகைப்பிடிப்பவர்  உடனடியாகச் சுறுசுறுப்பைப் பெறுவது போன்றும், மிகுந்த ஆற்றல் பெற்றுவிட்டது போலவும் உணர்வு தோன்றும். ஆனால், அது உண்மையல்ல சில நிமிடங்களில் அந்தச் சுறுசுறுப்பு குறைந்துவிடும்.

இதனால், அவர்கள் மீண்டும் புகைபிடிக்க விரும்புவார்கள்.  இப்படித்தான் புகைப்பிடிக்கும் பழக்கம் ஒருவரை அடிமையாக்குகிறது. புகையிலை பொருட்களை பயன்படுத்தும் போது, அதிலிருந்து வெளிப்படும் "அட்ரீனலின்  உடலின் வெப்பநிலை, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றை அதிகரிக்கிறது. மேலும் வாய், உணவுக்குழாய், குரல்வளை, வயிறு மற்றும் கணையத்தில் புற்றுநோயை உண்டாக்குகிறது. 

புகைபிடிப்ப‌வர்களுக்கு நுரையீரல், வாய், மார்பகம், கர்ப்பப்பை, கணையம், நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம். புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஒருவருடை வாழ்நாளில், 15 வருடங்களை இழக்க நேரிடும் என்கிறது ஆய்வு முடிவுகள்.

 

புகைபழக்கத்திலிருந்து வெளியேறும் வழிமுறைகள்:

புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவரவேண்டுமா?  இவற்றை பின்பற்றுங்கள்: வெற்றி பெறுவீர்கள்

பொதுவாக ஒரு போதை பொருளுக்கு அடைமையானவர்கள், அதிலிருந்து தானாக, முழுமையாக விடுபட முடியாது என சொல்லப்படும். அதற்கேற்ப, புகைபிடிப்பவர்களில் 3% பேர் மட்டுமே  தாங்களே அதிலிருந்து விடுபடுகிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள். அப்படி ஒரே நேரத்தில் முழுமையாக புகையிலை பழக்கத்திலிருந்து விடுபடுவது, ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியப்படும். 

மற்ற 97% பேருக்கு, நிபுணர்களின் உதவி தேவை. புகையிலைக்கு அடிமையான ஒருவர், அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவது எளிதல்ல. அதற்கான முறையான சிகிச்சை மற்றும் மன திடத்தால் அந்த கொடிய பழக்கத்திலிருந்து விடுபட முடியும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவரவேண்டுமா?  இவற்றை பின்பற்றுங்கள்: வெற்றி பெறுவீர்கள்

மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில், பெரும்பாலும் புகை பிடிக்க தோன்றும். அந்த நேரங்களில் உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்ய, வேறு விசயங்களில் கவனத்தை செலுத்தலாம். விடுமுறை நாட்களில் தனியா இருக்காமல் குடும்பத்தாரோடு நேரத்தை செலவிடலாம். இதனால், புகைபிடிக்கும் எண்ணம் குறைய வாய்ப்புள்ளது.

அதோடு சோர்வாக தோன்றும் நேரத்தில், புகையிலைக்கு பதிலாக சுவிங்கம் போன்றவற்றை மெல்லலாம். இதனால் புகைப்பிடிக்கும் எண்ணம் குறையும்.  புகையிலை பழக்கமுள்ளவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பதால் புகைபிடிக்கும் எண்ணம் தோன்றாது.

தற்போதைய சூழலில், நிகோடின் மாற்று சிகிச்சைகள் பரவலாக காணப்படுகிறது. மருத்துவ ஆலோசனையின் படி இந்த சிகிச்சையை மேற்கொண்டு, புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியும். பொதுவாக புகையிலை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை கடினமானதாக இருப்பதில்லை. அவ்வப்போது மருத்துவரை சந்தித்து, புகையிலைக்கு மாற்று மருந்துகளை முறையாக சாப்பிட்டு வந்தாலே, விரைவில் இந்த மோசமான பழக்கத்திலிருந்து விடுபட முடியும்.

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சிறந்த  ஆலோசகர்களோடு, புகைப்பிடிப்பதனால் விளையும் தீமைகள் மற்றும் இந்த பழக்கத்தை கைவிடுவதனால் ஏற்படும் நனமைகள் குறித்த ஆலோசனையில் அடிக்கடி ஈடுபடுவதன் மூலம், 25% புகைப்பழக்கத்திலிருந்து வெளிவர முடியும். ஒவ்வொரு முறை புகையிலையை நுகரும் போதும், உங்களை சுற்றியுள்ள, உங்களை மட்டுமே நம்பியுள்ள குடும்பத்தை பற்றி சிந்தனை செய்வதன் மூலம் மூளையை அடிமைப்படுத்தியுள்ள நிகோடின் பிடியிலிருந்து விடுபட முடியும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP