நிபா வைரஸ் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?

நிபா வைரஸ் தொற்று உள்ள மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. இது முதன் முறையாகல் 1998ஆம் ஆண்டு மலேஷியாவில் உள்ள பன்றிப் பண்ணையில்தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
 | 

நிபா வைரஸ் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?

நிபா வைரஸ் தொற்று உள்ள மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. முதன் முறையாக 1998ஆம் ஆண்டு  மலேஷியாவில் உள்ள பன்றிப்  பண்ணையில்தான்  இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்  `சுங்கை நிபா' என்ற இடத்திலிருந்த ஒருவரின் உடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த வைரஸுக்கு 'நிபா' என  பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 50 % லிருந்து 100% வரை மரணத்தை சந்திக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நிபா வைரஸின் அறிகுறிகள்:

நிபா வைரஸ் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?
* காய்ச்சல்
* கழுத்துவலி
* தலைச்சுற்றல்
* வயிற்றுவலி
* வாந்தி
* உடல் சோர்வு
* சுவாசத்தில் பிரச்னை
* மனக்குழப்பம்
* உளறல்

நோய் தீவிரமடையும் போது நோய் வாய்ப்பட்டவர்கள் சுய நினைவை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்.

உயிர் பலி வாங்கிய வைரஸ்:

நிபா வைரஸ் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?

இந்தியாவில் மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் 2001-ம் ஆண்டு முதன் முதலாக பரவிய இந்த வைரஸ் 45 பேரை உயிர் பலி வாங்கியது. அதற்கு பின்னர் வங்கதேசத்தில் 2011-ம் ஆண்டு பரவிய நிபா வைரஸால் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் கேர‌ளாவில் இந்த வைரஸால் கடந்த ஆண்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 

தடுக்கும் முறைகள்:

நிபா வைரஸ் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?

நிபா வைரஸை தடுக்கும் தடுப்பூசிகள் கிடையாது.

நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பன்றிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். 

திறந்தவெளி குடிநீரை குடிக்க கூடாது. 

நோய் பாதிப்பு இருக்கும் பகுதிகளிலிருந்து வரும் பழங்களை சாப்பிட கூடாது.

கைகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

எந்த பழமாக இருந்தாலும் நன்றாக சுத்தம் செய்த பின்னரே உட்கொள்ள வேண்டும்.

விலங்குகளுக்கு இந்த தொற்று அதிகம் ஏற்படும் என்பதால் எந்த இறைச்சியாக இருந்தாலும் நன்றாக வேக வைத்த பின்னரே சாப்பிடவேண்டும்.

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு ஏதேனும் நோய் தொற்று இருப்பதாக தோன்றினால் உடனடியாக விலங்குகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.

காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் முன் எச்சரிக்கையாக மருத்துவரை அனுகி எந்த வகையான காய்ச்சல் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

நம்மையும்,  சுற்றுப்புற‌த்தையும் தூய்மையாக வைப்பதன் மூலம் உயிர் பலி வாங்கும் வைரஸ்களிடமிருந்து நம்மை ஒரளவு பாதுகாத்துக்கொள்ள முடியும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP