தர்பூசணியை  எப்படி  வாங்கவேண்டும்  தெரியுமா?

தர்பூசணியைப் பார்த்ததும் ஆணா பெண்ணா என்று ஆராய்ச்சி செய்யாமல் கொடுத்துள்ள மற்ற குறிப்புகளையும் ஆராய்ந்து பாருங்கள்... கோடையை ஜில்லாக மாற்றுங்கள். மிக்ஸியில் அடித்து சாறாக்கி சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.
 | 

தர்பூசணியை  எப்படி  வாங்கவேண்டும்  தெரியுமா?

கோடை வந்துவிட்டது.. இனி எல்லா வீடுகளிலும்  தர்பூசணி பழங்களை  நிச்சயமாக பார்க்கலாம்.. வெட்டிய பழங்களை துண்டங்களாக்கி  அப்படியே சாப் பிடலாம். வெயிலின் உஷ்ணத்துக்கு சவால்விடும் வகையில் தொண்டையில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தர்பூசணி என்பதை மறுக்கவே முடியாது....

சுடச் சுட சாப்பிடுபவர்கள் கூட கோடையில் சாப்பாடை ஒதுக்கி தர்பூசணி யையே சாப்பிடுவார்கள். தர்பூசணி  இனிப்புமிக்க பழம் என்றாலும் நன்றாக சிவந் திருக்கும் பழம் மேலும் சுவைத்தரக்கூடியது. ஆனால் என்ன.. மற்ற பழங்களைப் போல்  பார்த்துவாங்க தெரிந்திருக்க வேண்டும். சிறிய பழம் முதல் பெரிய பழம் வரை தள்ளுவண்டிகளிலும்,  மார்க்கெட்டிலும், சூப்பர் மார்ட் கடைகளிலும் நிரப்பி வைத்திருப்பார்கள். ஆனால் தர்பூசணி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா?

அழகாக வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் பழங்கள் எல்லாம் தரமானவை அல்ல.. அவை அழகுக்காக மட்டுமே என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள். சில நிமிடங்களாவது நேரம் ஒதுக்கி நல்ல பழங்களை வாங்கிச் செல்லுங்கள். அப்போதுதான் அதன் பயன் முழுமையாக கிடைக்கும். 

மஞ்சள் நிற தர்பூசணிகள் வெளி மாநிலங்களிலிருந்து இங்கு விற்பனை யாகின்றன. ஆனால் பச்சை நிறத்தில் வரி வரியாக இருக்கும்  தர்பூசணியே உட லுக்கு நல்லது. தர்பூசணி வடிவங்களை உற்றுபார்த்தால்  வித்தியாசம் தெரியும்... நீள் வட்டமாகவோ அல்லது வட்டமாக சற்று பருத்து காணப்படும். இதில் முதல் வகை ஆண் என்றும் இரண்டாவது பெண் என்றும் சொல்கிறார்கள். இதில் இரண் டாவது வகைதான் சுவையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். எது எப்படி யிருந்தால் என்ன. நமக்கு தேவை இனிப்பு மிகுந்த தர்பூசணி தான்.

தர்பூசணி பெரியதாக இருந்தால்தான் அது சுவையாக இருக்கும் என்பதெல்லாம் கிடையாது.   நடுத்தரமான பழங்களே  நன்றாக இருக்கும். தர்பூசணியின் வால் பகுதி உலர்ந்து இருந்தால் அந்தப் பழம் பழுத்திருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். பச்சை நிற தர்பூசணிதான் உள்ளே சுவையாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. சற்று பிரவுனாக இருக்கும் தர்பூசணி பழங்களே சுவை மிகுந்தவை. தர்பூசணியில் புள்ளிகள் மஞ்சளாக  இருந்தால்  உள்ளே பழமாக இருக்கிறது என்று அர்த்தம். வெள்ளையாக இருந்தால் பழமாக வில்லை என்று அர்த்தம்..  இப்படித்தான் பார்த்து வாங்க வேண்டும்.

 தர்பூசணியை இரண்டாக வெட்டி பாதியை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடும் வழக்கம் சிலருக்கு உண்டு. ஆனால் பாதிப்பழத்தை கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறாக்கி சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம். பழங்களின் அளவு கணிசமாக குறையும். உடலில் நீர் வறட்சியும் ஏற்படாது... 

தர்பூசணியைப் பார்த்ததும் ஆணா பெண்ணா என்று ஆராய்ச்சி செய்யாமல் கொடுத்துள்ள மற்ற குறிப்புகளையும் ஆராய்ந்து பாருங்கள்... கோடையை ஜில்லாக மாற்றுங்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP