பால் குடித்தால் குழந்தையின்மை ஏற்படுமா?

மனித உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை அளிப்பதில் பாலின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய காலகட்டத்தில் பிறப்பில் இருந்து இறப்பு வரை மனித உணவு சங்கிலியின் ஒரு அங்கமாகவே பால் மாறி விட்டது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாலை அருந்துவதால் மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
 | 

பால் குடித்தால் குழந்தையின்மை ஏற்படுமா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பால் அத்தியாவசிய உணவாக இருக்கிறது. ஆனால், கலப்படம் காரணமாக பாலே விஷமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். அதிலும் குறிப்பாக,  ஹார்மோன், ஸ்டீராய்டு ஊசி போட்டு பால் கரப்பதால் ஆண்களுக்கு குழந்தையின்மைக்கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிப்பதாக அதிர்ச்சியூட்டும் முடிவை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

அந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு மாடு வளர்த்து வந்தனர். நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில், மாடு என்றால் செல்வம் என்றே சொல்லினர். ஒருவர் எவ்வளவு மாடு வளர்க்கிறார் என்பதைப் பொருத்தே அவருடைய செல்வம் கணக்கிடப்பட்டது. இன்றைக்கு, பால் தேவை அதிகரித்துவிட்டது. அதற்கு ஏற்ற வகையில், மாடு வளர்ப்பது என்பது இல்லாமல் போய்விட்டது. புறநகரில் எங்காவது ஒன்று இரண்டு இடங்களில் மாடு வளர்க்கின்றனர். 

தொழில் துறையின் வளர்ச்சியால் இன்று பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது. மாடுகளின் எண்ணிக்கை குறைந்தாலும் பாலின் தேவையோ நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முன்பு போல் மாடு சினை பிடிக்கும் வரை யாரும் காத்திருப்பதில்லை. பால் பண்ணைகளில் மாடுகளுக்கு பலதரப்பட்ட ஸ்டிராய்டு மற்றும் ஹார்மோன் ஊசிகள் போட்டு அவற்றின் இயல்பு அளவை விட அதிகமாக பால் சுரக்க வைக்கின்றனர். இது போன்ற பால் தான் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு நமது வீடுகளுக்கு வந்து சேர்கிறது. இந்திய மக்கள் தொகையில் 70% பேர் பாக்கெட் பாலை தான் பயன்படுத்துகின்றனர்.


மாடுகளின் உடலில் செலுத்தப்படும் ஸ்டிராய்டு மற்றும் ஹார்மோன் ஊசிகளின் தாக்கம் அதன் பாலிலும் காணப்படும். இந்த பாலை அருந்துவதால் மனிதர்களுக்கு பலதரப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பால் மட்டுமல்லாது, இந்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்கள் எதை சாப்பிட்டாலும் அவை மனிதனின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது போன்ற  பாலை அருந்துவதால் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பலதரப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். கருச்சிதைவு, கருவில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, குழந்தை பிறந்த பின்னர் அதிக அளவு ரத்த போக்கு, பால் கொடுப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்பட கூடும். சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் பருவமடைவது, மாதவிடாய் தள்ளி போவது, கருமுட்டையின் தரம் பாதிப்பு போன்றவற்றுக்கும் பாலில் இருக்கும் மேற்சொன்ன கலப்பட பொருட்கள் காரணமாக அமைகின்றன.


பாலில் பலதரப்பட்ட ஹார்மோன்கள் இருக்கின்றன. அதிக அளவில் இது போன்ற பாலை அருந்தும் போது மனித உடலில் ஹார்மோன் சமநிலை பாதிப்படைக்கிறது. ஆண்கள் உடலில் குறிப்பிட்ட அளவு ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் உள்ளது. இந்த ஹார்மோன் அளவு அதிகமானால் ஆண்களின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. கலப்படம் செய்யப்பட்ட பாலில் காணப்படும் ஈஸ்ட்ரோஜென் ஆண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிப்பதுடன், டெஸ்டோஸ்டிரான் உற்பத்தியையும் குறைக்கிறது.

இதனால் விந்து உற்பத்தி தடைபடுவதோடு, விந்து செறிவும் பாதிக்கப்படுகிறது. இதனால், ஆண்களுக்கு குழந்தைப் பேறுக்கான வாய்ப்பு குறைகிறது. ஆண்களின் மார்பகம் இயல்புக்கு மாறாக பெரிதாக காணப்படுவதற்கும் பாலில் இருக்கும் ஸ்டிராய்டு மற்றும் பிற ஹார்மோன்கள் காரணமாக அமைகின்றது. தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற கலப்பட பாலை தவிர்ப்பது என்பது இயலாத ஒரு காரியம். எனவே முடிந்தவரை பாலை நன்கு சூடுபடுத்தி குடிப்பதன் மூலம் இது போன்ற பாதிப்புகளை தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP