Logo

சைக்கிள் ஒட்டுங்கப்பா...அழகா இருப்பீங்க...!

நடைவண்டி ஓட்டம் நடை பழகும் போதே பழகியவர்கள் நாம்... பிறகு 2 வயது வளர்ந்த குழந்தைகள் 3 சக்கர மிதிவண்டியை வீட்டுக்குள் ஓட்டி அதகளம் செய்த கடைசி தலைமுறைகள் நாம் தான் என்பது வருத்தத்தை அளிக்கிறது
 | 

சைக்கிள் ஒட்டுங்கப்பா...அழகா இருப்பீங்க...!

நடைவண்டி ஓட்டம் நடை பழகும் போதே பழகியவர்கள் நாம்... பிறகு 2 வயது வளர்ந்த குழந்தைகள் 3 சக்கர மிதிவண்டியை வீட்டுக்குள் ஓட்டி அதகளம் செய்த  கடைசி தலைமுறைகள் நாம் தான் என்பது  வருத்தத்தை அளிக்கிறது... றெக்கை கட்டி பறக்கும் மிதிவண்டிகள் எல்லாம் 30 வருடங்களுக்கு முன்பு மிக பிரபலம்...

இன்று பக்கத்து தெருவுக்கு கூட கார் அல்லது பைக்  என்று சொல்பவர்கள் உடலில்  நோய் வந்தபிறகு மருத்துவர்கள் அறிவுறுத்தியதும் நடக்கிறார்கள்.. நடைபயணம் போன்று சைக்கிள் பயணமும் நலத்தைப் பாதுக்காக்கும்..

ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகம் மிதிவண்டி ஒட்டிச்செல்பவர்களின் ஆரோக்யத்தைக் கணித்தது. இறுதியில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் 45 % புற்றுநோய் வராமல் காக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளது. நோய்களின் தீவிரத்தை கூட்டாமல் இருக்க உடற்பயிற்சி,  பிட்னஸ் ஜிம், தியானம், யோகா இப்படி  செய்து  கொண்டிருக்கிறோம். மறுபுறம் உடலை சோம்பேறீயாக்கி வைத்திருக் கிறோம்.  கால்களால் மிதித்து அழுத்தி ஓட்டும் மிதிவண்டியை விட ஸ்டைலாக அமர்ந்து  சொகுசாக போகும்  பைக்- குகளை தான் இன்றைய தலைமுறையினர் விரும்பினார்கள். ஆனால் தற்போது சைக்கிள் மோகம் திரும்ப தொடங்கி யிருக்கிறது. 

சைக்கிள் பயணம் தரும் ஆரோக்யத்தைப் பார்க்கலாமா? சைக்கிள் ஓட்டுவதால் நம் உடல் மட்டுமல்ல  சுற்றுச்சூழலும் பாதிக்காமல் இருக்கும். இன்று இதய நோய் என்பது சகஜமாகிவிட்டது. அன்றாடம் சைக்கிள் பயணம் செல்பவர்களுக்கு  இதயத்தில் அடைப்பு ஏற்படாது.

அழுத்தம் கொடுத்து மிதிப்பதால்  தொடைப்பகுதி, எலும்பு,  முதுகுத் தண்டுவடம், கால்கள் மேலும் வலிமை பெறும்..   எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னைகளால் உண்டாகும்  மூட்டு வலி வராது, மாறாக எலும்புகள் மேலும் வலுப்பெறும்.  

நீண்ட தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் எரிக்கப்படும். அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் 300 கலோரிகள் வரை எரியும். இதனால் உடல் பருமன் குறைய ஆரம்பித்து முகத்தில் அழகும், கம்பீரமும் கூடுகிறது.

மிதிவண்டி  ஓட்டுவதால் உடலுக்கு கிடைக்கும் உற்சாகம் உள்ளத்துக்குள்ளும் பரவுகிறது. மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. நேர்மறை எண்ணங் களை எங்களுக்குள் அதிகரித்திருக்கிறது என்று  வோட்டு போடுகிறார்கள்  சைக்கிள் பிரியர்கள். அதே நேரம்  தொடக்கத்திலேயே அதிக தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளக் கூடாது சிறிது சிறிதாக பயண தூரத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள்.

குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் அனைவருக்கும் தகுந்த சைக்கிள்கள் விற்பனைக்கு இருக்கிறது..  சைக்கிள் பயணம் உங்களை ஃபிட்னஸாக அழகாக வைத்திருக்கும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP